Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: கிச்சன் கேபினெட் Vs ஐபேக், இரு அவைகளும் பா.ஜ.க வசம்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

ஐபேக் நிறுவனத்துக்கு மாதம் இத்தனை கோடி என்று பேசப்பட்டிருக்கிறது. தி.மு.க-வில் பசையுள்ள பிரமுகர்கள் ஆளுக்கொருவர்வீதம் மாதம் ஒரு முறை சுழற்சிமுறையில் அந்தத் தொகையைக் கொடுக்க உத்தரவு

"தி.மு.க தலைவரின் குடும்பத்தில் ஏதோ வருத்தம் என்கிறார்களே?" என்றோம். தலையை ஆட்டி ஆமோதித்த கழுகார், சூடாக ஃபில்டர் காபியை உறிஞ்சியபடி தொடர்ந்தார்.

"கிச்சன் கேபினெட் தரப்பிலிருந்து, 'ஐபேக் நிறுவனத்துக்கு இத்தனை கோடிகள் செலவு செய்தது ஒன்றும் பெரிதாகப் பலனளிக்கவில்லையே...' என்று ஓப்பனாகவே பேச ஆரம்பித்து விட்டார்களாம்."

"கடுகு, புளி, மிளகாய்ச் செலவுகளிலேயே கறாராக இருக்கும் கிச்சன் கேபினெட் தரப்பு இவ்வளவு பெரிய செலவு விஷயத்தில் சும்மா விடுமா என்ன?''

"செனடாப் சாலை அலுவலகத்துக்கு வந்து சென்ற ஐபேக் நிறுவனப் பணியாளர்களையும் கொரோனா பீதியால், `வர வேண்டாம்' என்று சொல்லிவிட்டார்கள். இப்போது அந்த நிறுவனத்தின் பணி என்ன என்பதே தி.மு.க-வின ருக்கு புரியவில்லையாம். 'ஒன்றிணைவோம் வா' திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை எனக் கட்சியினரிடையே சலசலப்பு எழுந்துள்ளது. இதில் ஐபேக் நிறுவனத் துக்கும் வருத்தம். இதனால், தங்கள் பணியை வெகுவாக குறைத்துக் கொண்டார்களாம்."

ஸ்டாலின்
ஸ்டாலின்

"சரிதான்..."

"ஐபேக் நிறுவனத்துக்கு மாதம் இத்தனை கோடி என்று பேசப்பட்டிருக்கிறது. தி.மு.க-வில் பசையுள்ள பிரமுகர்கள் ஆளுக்கொருவர்வீதம் மாதம் ஒரு முறை சுழற்சிமுறையில் அந்தத் தொகையைக் கொடுக்க உத்தரவு. இடையில் ஒரு மாதம் தொகையும் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இது பிரஷாந்த் கிஷோரின் கவனத்துக்குச் சென்று வருத்தமாகிவிட்டாராம்.

'மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மாநிலங்களவைக்கு சீட் தருகிறேன்' என்று பிரசாந்த் கிஷோரிடம் மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாராம். இதையடுத்து, 'சென்னையா, கொல்கத்தாவா... எதில் கவனம் செலுத்துவது?' எனத் தவிக்கிறார் கிஷோர்" என்ற கழுகார், "இரு திராவிடக் கட்சிகளின் வி.ஐ.பி-க்கள் பேசிக் கொண்டதைச் சொல்கிறேன். யார் என்று நீரே கண்டுபிடியும்" என்று கண்சிமிட்டினார். நாமும் சுவாரஸ்யமானோம்.

ஒவ்வொன்றாக நிறைவேறப்போகின்றனவா ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்கள்?

''தற்போது நடந்து முடிந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இரண்டு இடங்கள் மட்டுமே பா.ஜ.க-வுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிநேர 'பந்தயத்தில்' பா.ஜ.க-வுக்குக் கூடுதலாக ஓர் இடம் கிடைத்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் குவாலியர் அரசரான சிந்தியா பா.ஜ.க பக்கம் சாய்ந்ததால், அங்கும் பா.ஜ.க-வுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்ததுடன், சிந்தியாவும் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வாகியிருக்கிறார்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

''மாநிலங்களவையில் மெஜாரிட்டி எண்ணிக்கை 123. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பத்து இடங்கள் காலியாகின்றன. அந்தப் பத்து இடங்களும் எங்கள் வசம் வரும். இன்னும் சில மாநிலங்களில் காலியாகும் இடங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மெஜாரிட்டி எண்ணிக்கையை எளிதாக எட்டிவிடுவோம்'' என்கிறார் பா.ஜ.க டெல்லி நிர்வாகி ஒருவர்.

ஜூ.வி பைட்ஸ்: கிச்சன் கேபினெட் Vs ஐபேக், இரு அவைகளும் பா.ஜ.க வசம்!

- ''மாநிலங்களவையில் 101 எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது பா.ஜ.க கூட்டணி. இந்த எண்ணிக்கை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் அதிகாரத்துக்கு அடுத்த வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துவிட்டது'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அசைவம் அத்தியாவசியம் இல்லையா?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

இந்த 12 நாள்களில் காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதித்துள்ள அரசு, இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. இது பொதுவெளியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசைவம்
அசைவம்

நம் மாநிலத்தில் அசைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலான மக்கள் தங்கள் புரதச்சத்து தேவைக்கு மாமிச உணவையே அதிகம் சார்ந்துள்ளனர். இந்த நிலையில், ஊரடங்கில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து மருத்துவர்களும் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு