Published:Updated:

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி... வளர்ந்திருக்கிறது 28.3%, அதேநிலையில் 41.6%, குறைந்திருக்கிறது 30.1%

பா.ஜ.க
பா.ஜ.க

ஆரம்பமாகிவிட்டது தேர்தல் திருவிழா. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருப்பதால், இப்போதே தேர்தல் விளம்பரத்துக்குச் சுவர்களைத் தேடத் தொடங்கிவிட்டன கட்சிகள். இந்தநிலையில், மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய, மினி சர்வே எடுக்கக் களமிறங்கியது ஜூவி படை.

இதற்காக, பத்துக் கேள்விகள் அடங்கிய சர்வே படிவம் தயாரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களைச் சந்தித்து மினி சர்வே நடத்தப்பட்டது.

முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினரும் இந்த சர்வேயில் பங்களித்தனர். விகடன் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என 41 பேர் சர்வே பணியை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி... வளர்ந்திருக்கிறது 28.3%, அதேநிலையில் 41.6%, குறைந்திருக்கிறது 30.1%

மொத்தம் 4,204 ஆண்கள், 3,674 பெண்கள், 122 மூன்றாம் பாலினத்தவர் என்று 8,000 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மினி சர்வே, வாக்காளர்களின் பல்ஸை அறிந்துகொள்ளும் ஆரம்பப்புள்ளியே.

"பா.ஜ.க வளர்ச்சி இல்லை!"

'தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?' என்ற கேள்விக்கு, தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்திருப்பதாக 28.3 சதவிகிதம் பேர் கூறுகின்றனர். மீதி சதவிகிதத்தினர் அந்தக் கட்சி வளர்ச்சியடையவில்லை என்று கூறியிருப்பது, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி... வளர்ந்திருக்கிறது 28.3%, அதேநிலையில் 41.6%, குறைந்திருக்கிறது 30.1%

மிக முக்கியக் கேள்வியாக, 'அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக புதிய அரசியல் மாற்றம் சாத்தியமா?' என்று கேட்டோம். பெரும் பான்மையாக 59.2 சதவிகிதம் பேர், 'இல்லை' என்றே பதிலளித்திருக்கிறார்கள். தமிழக மக்களின் மனதில் இந்த இரு பெரும் கட்சிகளே இடம்பிடித்திருப்பதை சர்வே முடிவுகள் நமக்கு உணர்த்தின.

> ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதுகிறீர்களா? | கொரோனா காலத்தில் தமிழக அரசின் செயல்பாடு? | ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரப்பீர்களா? | எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடு? | எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடு? | 2021 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? | முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்னிறுத்தியது? | அ.தி.மு.க-வை பா.ஜ.க இயக்குகிறதா?

- இந்தக் கேள்விகளுக்கான சர்வே முடிவுகளுடன் கூடிய கவர்ஸ்டோரியை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3jzWSaZ > பாலிடிக்ஸ் பல்ஸ்! - ஜூ.வி மினி சர்வே https://bit.ly/3jzWSaZ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு