Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: ஸ்டாலினின் ப்ளஸ், மைனஸ்; கமலுக்குக் கிடைத்த `வாய்ப்பு'!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

'நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு!" என கன ஜோராக 'பிக் பாஸ்-4' புரொமோ வீடியோவில் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஆளும்கட்சியைவிட அதிக பொறுப்புகளைக் கைப்பற்றியது; மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் தி.மு.க-வை அமரவைத்தது என தி.மு.க தலைவராக ஸ்டாலினின் அரசியல் கிராஃப் கடந்த இரண்டாண்டுகளில் ஏறியிருக்கிறது.

அதேவேளையில், தன்னிடமுள்ள சில குறைகளையும் ஸ்டாலின் களைந்துகொள்ள வேண்டும்.

தனக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, தவறு செய்தால் தண்டிக்கும் கண்டிப்பு கருணாநிதியிடம் இருந்தது. மின்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி சரியாகச் செயல்படவில்லை என்றதும், யோசிக்காமல் அவரை ஒதுக்கினார் கருணாநிதி. அதேபோல், தன் தோள்மீது தூக்கி வளர்த்த துரைமுருகன், தான் சொன்னதைக் கேட்காமல் அலட்சியமாக இருந்தார் என்பதற்காக பொதுப்பணித்துறையைப் பறிக்கும் துணிவும் கருணாநிதியிடம் இருந்தது. ஆனால், ஸ்டாலினிடம் இந்த விஷயத்தில் தெளிவும் உறுதியும் இல்லை...

உங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்?
உங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்?

'கழகம் ஒரு குடும்பம்' என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினின் நடவடிக்கை பல நேரங்களில், 'ஒரு குடும்பம் மட்டுமே கழகம்' என்று நினைக்கவைத்துவிடுகிறது. 70 வயதை நெருங்கும் ஸ்டாலின், தனக்குத் துணையாக மகனையும் மருமகனையும் வைத்துக்கொள்ளட்டும். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், மகனுக்கும் மருமகனுக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டால்... எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சொந்தக் கட்சிக்காரர்களே வசைபாடத்தான் செய்வார்கள்!

- தி.மு.க-வின் தலைவராக இரண்டாண்டுகளை மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாகக் கடந்ததையொட்டிய ஜூ.வி கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31Q7Fbt > உங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்? https://bit.ly/31Q7Fbt

கமலுக்குக் கிடைத்த `வாய்ப்பு'!

'நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு!" என கன ஜோராக 'பிக் பாஸ்-4' புரொமோ வீடியோவில் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான `பிக் பாஸ்' சீஸனைப்போல இது இருக்காது. முழுமையாக எலெக்‌ஷனுக்கான புரொமோஷனாகத்தான் இருக்கும் என்கிறார்கள் `நம்மவரு'க்கு நெருக்கமானவர்கள். இது கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே தீட்டப்பட்ட திட்டம்தான்.

ஜூலை பாதியில் தொடங்கி, அக்டோபர் வரை `பிக் பாஸ் சீஸன்-4', பிறகு தேர்தல் சுற்றுப் பயணம், தேர்தலையொட்டி ஏப்ரலில் 'இந்தியன்-2' என மெகா பிளானுடன் களமிறங்கக் காத்திருந்தார் கமல்ஹாசன். ஆனால், கொரோனா தாக்கத்தால் பிக் பாஸ் தள்ளிப்போனது; `இந்திய'னிலும் பிரச்னை.

இந்தநிலையில், பிக் பாஸ் மேடை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. அடுத்த நான்கு மாதங்கள் மக்களிடம் குறிப்பாக, பெண்களிடமும் இளைஞர்களிடமும் உரையாடுவதற்கான களமாக பிக் பாஸைத்தான் பயன்படுத்தவிருக்கிறார். கொரோனா காலத்தில், மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத வாய்ப்பு கமலுக்குக் கிடைத்திருக்கிறது. அதையே தன் அரசியல் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தக் காத்திருக்கிறார் கமல்.

ஜூ.வி பைட்ஸ்: ஸ்டாலினின் ப்ளஸ், மைனஸ்; கமலுக்குக் கிடைத்த `வாய்ப்பு'!

மக்கள் நீதி மய்யத்தின் முன்னணி நிர்வாகி ஒருவர் சில நாள்களுக்கு முன்பாக, அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த, அது கமலின் காதுக்குப் போனது. நிர்வாகிகள் கூட்டத்தில் `கட்சியைக் கலைத்துவிடுவேன்' என கமல் கொந்தளிக்க, நடுங்கிப்போனார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

- கமலின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த கட்டுரையை சற்றே விரிவாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3bkRS7A > கமலின் மெகா கணக்கு! https://bit.ly/3bkRS7A

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு