Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!

ஜூ.வி பைட்ஸ்

சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!

சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Published:Updated:
ஜூ.வி பைட்ஸ்

"அ.தி.மு.க-வில் பிரச்னை உருவாகும் போதெல்லாம் ஆலோசனைக்காக அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுவிடுகிறார்களே... உங்கள் கட்சித் தலைமை டெல்லியில்தான் இருக்கிறதா?"

பா.வளர்மதி: "இது அபாண்டமான குற்றச்சாட்டு. டெல்லிக்கு அமைச்சர்கள் சென்றாலே, கட்சி விவகாரத்துக்காகத்தான் போகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் தங்கள் துறைசார்ந்த பிரச்னைக்காகக்கூட சென்றிருக்கலாம். அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு என்ன ரோல் இருக்கிறது.. நாங்கள் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்... எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் இது போன்றக் கட்டுக்கதைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது."

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!

- 2016 சட்டமன்றத் தேர்தல் நேரம் அது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு காரில் ஏறச் சென்ற ஜெயலலிதா, அருகில் பூங்கொத்துடன் நின்றிருந்த அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை அருகில் அழைத்தார். "என்ன வளர்மதி, எலெக்‌ஷன் எப்படிப் போகுது?" என ஜெயலலிதா கேட்க, "அடுத்தும் நாமதான் ஆட்சி அமைக்குறோம்மா" என்று பவ்யம் காட்டினார் வளர்மதி. அன்று ஜெ-வுக்கு வாழ்த்து தெரிவிக்க பல கரைவேட்டிகள் வரிசையில் நின்றனர். வளர்மதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா மற்றவர்களுக்கு அளிக்கவில்லை.

சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. என்னதான் நினைக்கிறார் வளர்மதி? அவரிடமே கேள்விகளை முன்வைத்தோம்... > முழுமையான பேட்டியை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3odnmCI > "உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?" - அதிரடி வளர்மதி https://bit.ly/3odnmCI

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"பெரியாருக்குக் கிடைத்த வெற்றி!"

"அண்மையில் நீங்களேகூட 'பண வசதி இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட் கொடுக்கப்படுகிறது' என்று வெளிப்படையாக வருத்தப்பட்டிருந்தீர்கள். இது கட்சிக்கு பலவீனம்தானே..?''

பீட்டர் அல்போன்ஸ்: "இன்றைய சூழலில், 'தேர்தல் செலவை செய்யக்கூடியவரா...' என்பதும் வேட்பாளர் களுக்கான முக்கியமான ஒரு தகுதியாக மாறியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த பாராளுமன்ற ஜனநாயகத்துக்குமே ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி - அச்சுறுத்தல்!

"மக்களிடையே நன்கு அறிமுகமான குஷ்புவை காங்கிரஸ் கட்சி தக்கவைக்கத் தவறியது பா.ஜ.க-வுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதானே?''

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

"குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளித்தேதான் வந்திருக்கிறது. முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்காகப் பல மாநிலங்களுக்கும் கட்சியால் அனுப்பப் பட்டிருக்கிறார். அண்மையில் குண்டுராவ் வந்திருந்த கூட்டத்தில்கூட, மேடையில் குஷ்புவுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அவர் ஒருபோதும் ஒதுக்கிவைக்கப்படவில்லை. ஆனாலும்கூட இப்போது அவர் பா.ஜ.க-வில் இணைந்திருப்பதை, பா.ஜ.க-வுக்கோ அல்லது குஷ்புவுக்கோ கிடைத்த வெற்றியாக நான் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றிருப்பது பெரியார்தான்!''

- ``பெரியாரா... எப்படி?''

> தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஆழமான புள்ளிவிவரங்களையும், அழுத்தமான கருத்துகளையும் தெளிவாக எடுத்துவைப்பவர் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ். குஷ்புவின் ராஜினாமா, ஹத்ராஸ் போராட்டக்களம் உள்ளிட்ட 'ஹாட் அரசியல்' குறித்து அவரிடம் பேசினோம்... முழுமையான பேட்டியை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31qV3qB > "பா.ஜ.க-வில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி!" - பீட்டர் அல்போன்ஸ் புது விளக்கம் https://bit.ly/31qV3qB

"நானே தலைவன்!" - கமல்

"தமிழகத்தில் தகுதியான தலைவராக நான் மட்டுமே இருக்கிறேன்" சினிமா வசனம்போல, தனது கட்சியின் நிர்வாகிகளிடம் தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இதை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்களோ, 'யாருடன் கூட்டணி அமைத்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான்' என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல் என்கிறார்கள்.

ஜூ.வி பைட்ஸ்: அதிரடி வளர்மதி; பீட்டர் அல்போன்ஸ் `லாஜிக்', ``காமராஜர், அண்ணா, நான்..." - கமல்!

அக்டோபர் 16-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகி ஒருவர், ``தமிழகத்தில் தகுதியான தலைவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்''' என்று சொன்னபோது, அதற்கு பதிலளித்த கமல், ``நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். காந்தி, நேரு, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இல்லாமல்போனதால், அவர்களின் தேவை தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை நிரப்பவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்" என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்லியிருக்கிறார்!

- கமல்ஹாசனின் தேர்தல் வியூகம் தொடர்பாக நம்மிடம் சில நிர்வாகிகள் பேசினர். முழுமையான செய்திக் கட்டுரையை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/35m899w > ரஜினிக்கு டாட்டா... தி.மு.க-வுக்கு திக் திக்... பல்ஸ் பார்க்கும் கமல்! https://bit.ly/35m899w

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV