Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: `மறந்துவிட்டீரா அண்ணியாரே?' - ஒரு குமுறல்; `அரியர் ஆல் பாஸ்' சர்ச்சை!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

அ.தி.மு.க - தி.மு.க என இரண்டு கட்சிகளிடமும் உங்கள் தம்பி சுதீஷ் நெருக்கமாக இருப்பதாகவும், நீங்கள் கெடுபிடி காட்டுவதாகவும் ஒரு நாடகத்தைத் தற்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த தேர்தலில், ஒருபுறம் தி.மு.க-வோடும் மறுபுறம் பா.ஜ.க-வோடும் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவெளியில் நாம் அம்பலப்பட்டதையெல்லாம் மறந்துவிட்டீரா அண்ணியாரே?

அந்த ஆத்திரத்தில்தானே, அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 'நீ, வா, போ, உனக்கு...'' எனப் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினீர்கள்? அது மட்டுமல்லாமல், "எங்க கட்சிக்குக் கொள்கை இல்லைன்னு உனக்குத் தெரியுமா... தெரியுமா...'' எனப் பலமுறை கேட்ட நீங்கள், அந்தக் கொள்கையைக் கடைசிவரை சொல்லாததைச் சுட்டிக்காட்டி, பலர் கைகொட்டிச் சிரித்த கதையை மறந்துபோய்விட்டீரா அண்ணியாரே? இன்றுவரைக்கும்கூட கொள்கைகளைக் குறித்து நீங்கள் பேசி ஒரு வார்த்தை கேட்டதில்லையே அண்ணியாரே!

ஜூ.வி பைட்ஸ்: `மறந்துவிட்டீரா அண்ணியாரே?' - ஒரு குமுறல்; `அரியர் ஆல் பாஸ்' சர்ச்சை!

அ.தி.மு.க - தி.மு.க என இரண்டு கட்சிகளிடமும் உங்கள் தம்பி சுதீஷ் நெருக்கமாக இருப்பதாகவும், நீங்கள் கெடுபிடி காட்டுவதாகவும் ஒரு நாடகத்தைத் தற்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இரண்டு கட்சிகளுமே `பத்து சீட்டுகளுக்கு மேலே ஒத்தை இடம்கூடத் தர மாட்டோம்' என்கிற முடிவில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணியாரே?

கடந்தமுறை, கூட்டணியில் போட்டிபோட்டு வாங்கிய சீட்டுகளுக்கு நிறுத்த வேட்பாளர் இல்லாமல், சேலத்திலிருந்து ஒருவரை சென்னைக்கு ஷிப்ட் செய்தீர்களே... தோற்றுப்போவோம் எனத் தெரிந்திருந்தும் அவர் கைக்காசைச் செலவழிக்க, நீங்களோ கிடைத்ததை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துப்போன கதையெல்லாம் ஆளும் தரப்புக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?

அண்ணியாரே, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... நாம் கட்சி ஆரம்பித்தபோது, பலமான எதிர்க்கட்சியாக மாறியபோது, கட்சிப் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யாராவது இப்போது கட்சியில் இருக்கிறார்களா? கேப்டனின் முகத்துக்காக மிச்சமிருப்பது கொஞ்சமே கொஞ்சமாய் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் மட்டும்தானே!

- அண்ணியாருக்கு கேப்டனின் தொண்டன் எழுதிய கடிதத்தை ஜூ.வி-யில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mclxoH > எங்கள் பெயரை அடகு வைக்காதீர்கள் அண்ணியாரே! https://bit.ly/3mclxoH

மாணவர்களின் நலனுக்காக... - கே.பி.அன்பழகன் பேட்டி

'அரியர் ஆல் பாஸ்' அறிவிப்பு தொடர்பாக, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா. இதையடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''பல்கலைக்கழகத்துக்கே அதிகாரம் இல்லாதபோது, தேர்ச்சி தொடர்பாக அரசு அறிவிக்க முடியாது என்கிறார்களே..?''

''பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது. யு.ஜி.சி (பல்கலைக்கழக மானியக் குழு), ஏ.ஐ.சி.டி.இ விதிகளின்படியே அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு வந்ததால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்தவிருக்கிறோம். மாணவர்களின் நலனுக்காக அரசு எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.''

சூரப்பா - கே.பி.அன்பழகன்
சூரப்பா - கே.பி.அன்பழகன்

'' 'மாணவர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வேண்டுகோள் வந்த பிறகுதான் இப்படியோர் அறிவிப்பு வெளியானது' என்கிறார்களே?''

''அதெல்லாம் தவறான தகவல். கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க, முதல்வரும் அமைச்சர்களும் எந்த அளவுக்கு வேலை பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். மற்ற மாநிலங்களைவிட அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறோம். மார்ச் மாதமே கல்லூரிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி, படுக்கை வசதிகளைத் தயார் செய்தோம். இப்போது மாணவர்களை அங்கே தேர்வெழுதவைப்பது எப்படிச் சரியாகும்?"

> ''அரியர் ஆல் பாஸ் அறிவிப்பு தொடர்பாக, உங்களுக்கும் சூரப்பாவுக்கும் மோதல் ஏன்?''

> ''எந்தவித மோதலும் இல்லை என்கிறார் அவர். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!"

> 'தேர்வு நடத்தாமல் தேர்ச்சியை அறிவிக்க முடியாது' என ஏ.ஐ.சி.டி.இ அனுப்பிய மெயில் பற்றி சூரப்பா சொன்னபோது நீங்கள் முரண்பட்டது ஏன்?''

> '' 'அரியர் வைத்திருந்த மாணவர்களைத் தேர்ச்சி பெறவைத்தது சரியானதல்ல' என்கிறாரே கல்வியாளர் இ.பாலகுருசாமி?''

> ''மாணவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சியாக `ஆல் பாஸ்' அறிவிப்பை எடுத்துக்கொள்ளலாமா?''

- இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/35ixwe8 > "ஓட்டுக்காகவா அரியர் ஆல் பாஸ்?" - அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிரடி https://bit.ly/35ixwe8

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு