Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: விஜய் போஸ்டர்... ஜெயக்குமார் ரியாக்‌ஷன்; சீமானுக்கு கல்யாணசுந்தரம் கேள்வி!

ஜூ.வி பைட்ஸ்
News
ஜூ.வி பைட்ஸ்

ரொம்பத் தீவிரமா தமிழக அரசியல் களம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், சசிகலா விடுதலை. அவர் வந்தால், அ.தி.மு.க-வில் இனி இடம் உண்டா?'

கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை; சசிகலா விடுதலையானால் நடக்கப்போகும் மாற்றங்கள் எனப் பல விஷயங்கள் குறித்துப் பேச மீன்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமாரை அழைத்தோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து...

''வரும் தேர்தலில், ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் இல்லாத அ.தி.மு.க-வோடு ரஜினி கூட்டணிவைக்க விரும்புவதாக அவரது மன்றத்தினர் சொல்கிறார்களே..?"

''ரெய்டு, வழக்குகள்லாம் நாங்க பார்க்காததா... அதுக்கெல்லாம் அஞ்சாம தாண்டி வந்து இன்னைக்கு மக்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருக்கோம். ரஜினியைப் பொறுத்தவரை, அவரு முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும். கொள்கை லட்சியம்லாம் சொல்லட்டும்... பிறகுதானே யாரோட கூட்டணினு தெரியும். கட்சி ஆரம்பிக்கறதுக்கான அடிச்சுவடே தெரியாத நிலைமையில, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது."

''மதுரையில் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆராக மார்ஃபிங் செய்து போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்களே..?''

''தலைவரோட கொள்கைகள், தத்துவங்கள் பிடிக்கும்னு சொல்லிக்கட்டும். ஆனா, தலைவரு மாதிரி சித்திரிக்கறதை ஏத்துக்க முடியாது. நீங்க நீங்களா இருங்க. எங்க தலைவர் மாதிரி வேஷம் போட்டுட்டா மக்கள் நம்பிடுவாங்களா? என்ன தகிடுதத்தம் செஞ்சாலும் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட கை, வேற சின்னத்துக்கு மாத்தி ஓட்டுப் போடாது!''

'' `அ.தி.மு.க அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள்' என்று பி.ஜே.பி தலைவர் ஹெச்.ராசா பேசியிருக்கிறாரே...''

"இவருல்லாம் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எங்களைச் சீண்டக் கூடாது. அவரு வேலையை அவரு பார்க்கட்டும். ஹெச்.ராஜாவோ, எஸ்.வி.சேகரோ யாரா இருந்தாலும் எங்க காலை மிதிச்சா, மறுபடி அவங்க காலை மிதிக்காம விட மாட்டோம். பெரியாரை, அண்ணாவை, எங்க தலைவரை, அம்மாவை, கட்சியை, அமைச்சரை, தொண்டரை பாதிக்கிற விஷயத்தை யார் பேசினாலும் மாறுபட்ட கருத்தா இருந்தா நிச்சயமா பதிலடி கொடுப்போம்!''

''அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை சரியா... இரட்டைத் தலைமை சரியா?''

''ரொம்பத் தீவிரமா தமிழக அரசியல் களம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், சசிகலா விடுதலை. அவர் வந்தால், அ.தி.மு.க-வில் இனி இடம் உண்டா?''

''சசிகலா அடிப்படை உறுப்பினராகக்கூட சேர முடியாதா?''

- இவை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3kcj6At > "சசிகலா ஒரு பாம்பு!" - சாட்டை சுழற்றும் ஜெயக்குமார் https://bit.ly/3ipOXNw

கல்யாணசுந்தரம் தடாலடி!

''உங்களைக் கட்சியைவிட்டு வெளியேற்ற நினைக்க என்ன காரணம்?''

''பேராசிரியர் சுந்தரவள்ளி, தன்னுடைய யூடியூப் சேனலில் என்னையும் ராஜீவ் காந்தியையும் கட்சியில் முன்னிலைப்படுத்தலாம் என்று காணொலி ஒன்றை வெளியிட்டார். அதற்குப் பிறகு, என்னைக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது; என்னோடு இணைந்து வேலை செய்யக் கூடாது என எங்கள் மாவட்டப் பொறுப்பாளர்களிடமும், வெளிநாடுகளிலுள்ள எங்கள் நிர்வாகிகளிடமும் அண்ணன் சீமான் தெரிவித்திருக்கிறார்.''

''கட்சியில் ஒரு சர்வாதிகாரிபோல் சீமான் செயல்படுகிறார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ''

''சில நேரங்களில் என்னுடைய கருத்துகளை முன்வைப்பதற்கு ஒரு வெளி இருந்திருக்கிறது. ஆனால், முடிவுகளை அவர் எடுத்துவிட்டால், பிறகு கேள்வியின்றி அதைக் கறாராகச் செயல்படுத்தியிருக்கிறோம். கட்சியில் போதுமான அளவு ஜனநாயகம் இல்லை என்பதே ஆரம்பத்திலிருந்து என்னுடைய கருத்து.''

''சீமானிடம் நீங்கள் முன்வைக்க விரும்பும் ஒரு கேள்வி?''

''உண்மையில் மனசாட்சியுடன்தான் என்னைப் பற்றிப் பேசுகிறீர்களா அண்ணா... உங்களோடு இருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா அண்ணா?''

> ''உங்களுக்கும் சீமானுக்கும் என்னதான் பிரச்னை?''

''கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் / வெளியேற்றப்பட்டவர்கள் சீமான் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், அவர்களுடன் நீங்கள் தொடர்புவைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?''

''உங்கள் ஆதரவாளர்களைவைத்து, சீமானைப் பற்றித் தவறாக சமூக வலைதளங்களில் எழுதியதாகவும், சீமானின் இறப்புக்காக நீங்கள் காத்திருந்ததாகவும் சீமானே சொல்கிறாரே..?''

''தேர்தல் காலத்தில், 30 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்ததாகச் சொல்கிறார்களே...''

''தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு சீமானை மையப்படுத்தியே கட்சி பயணிக்கிறது என்பது உண்மையா?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3kfDq3N > "குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்னை அவர்கள் சுட்டுக் கொல்லட்டும்!" - கல்யாணசுந்தரம் தடாலடி https://bit.ly/3kfDq3N

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV