Published:Updated:

``மதுரை ஆதீனம் ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டார்!" - கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

``மதுரை ஆதீனம் ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டார்!" - கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published:Updated:
கே.பாலகிருஷ்ணன்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கடலூரில் மணல் கொள்ளை அபரிமிதமாக நடந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட குழியில்தான் சிறுவர்கள் சிக்கி மூழ்கி இறந்திருக்கின்றனர். இது போல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளை மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். இதே போல விழுப்புரத்தில் 3 குழந்தைகள் இறப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருவில் உள்ள பாலினம் கண்டறிவது தடை செய்யப்பட்டும், அது தொடர்கிறது. இது சமூக விரோத செயல். விஜிலென்ஸ் குழு அமைத்து தடுக்க வேண்டும்.

மாநகராட்சிகளில் ஒப்பந்தப் பணியாளர் முறையை ஒழித்து, நிரந்தர சம்பளம் வழங்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மிகவாதிகள் பேசிய பேச்சுகள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். முஸ்லிம்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்றும் பேசியிருக்கிறார். இதைப்பேச என்ன உரிமை உள்ளது?

ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால், இஸ்லாமியர்களை தேச விரோதிகள் எனப் பேசுவது என்ன விதமான அரிசியல்? மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவதன்மூலம், ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிடக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறநிலையத்துறை சொத்துகளை எல்லாம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். ஆதீன மடங்கள் என்ன மாதிரி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள்?

தி.மு.க அரசு பல கோயில் சொத்துகளை மீட்டிருக்கிறது. ஆதீன மட சொத்துகளின் கணக்கை எடுத்து விவாதிக்கத் தயாரா?கோயில்கள் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அங்கு பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதை அரசுதான் பாதுகாக்க வேண்டும். ஆதீன பராமரிப்பில் இருந்த சொத்துகளில் முறைகேடுகள் நடந்த காரணத்தால்தான் அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்வதில் என்ன தவறு? ஏன் பதறுகிறீர்கள்? மடியில் கணமில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்?

எதையோ மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தினர் செயல்படுகிறார்கள். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். இதற்கு தனி சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். கோயில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்குத்தான் சொந்தம்.

எங்கேயோ நடக்கும் ஓரிரு சம்பவங்களை வைத்துக்கொண்டு கோயில்களை மொத்தமாக ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தவறு. மூட்டைப் பூச்சி இருந்தால் அதற்கு மட்டுமே மருந்து தெளிக்க வேண்டுமே தவிர, வீட்டையே கொளுத்துவது நியாயம் அல்ல.

அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிரூபித்தால் அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கே நிற்கப் போவதில்லை. தவறு யார் செய்தாலும் அதன் பரிகாரத்தை அனுபவிக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி யிருக்கிறது. பா.ஜ.க 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இலங்கையின் நிலைமைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism