Published:Updated:

`வட்டத்தில் நிற்காமல், வட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய கடலூர் அதிமுகவினர்!'

கடலூர் அதிமுக
கடலூர் அதிமுக

சமூக இடைவெளியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் போட்ட வட்டத்தில் நிற்காமல், கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வட்டம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கடலூர் அதிமுக-வினரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக சட்டமன்ற தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை என தேர்தல் வாக்குறுதிகள் திமுகவால் கொடுக்கப்பட்டன. ஆனால், ஆட்சி அமைத்த பிறகு அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது எனக் கூறடி அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. போடியில் ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதையொட்டி, திமுக அரசைக் கண்டித்து கடலூர் பாதிரிகுப்பம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் 100 க்கு மேற்பபட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கடலூர் அதிமுக
கடலூர் அதிமுக

முன்னதாக சமூக இடைவெளியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் வட்டம் போடப்பட்டது. ஆனால் போட்டப்பட்ட வட்டத்தில் நின்ற்காமல் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சமுக இடைவெளி இல்லாமல் அவர்கள் வட்டம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு