Published:Updated:

``இரட்டை வேடம் போடுவதே திமுக-வுக்கு வாடிக்கை" - கடம்பூர் ராஜூ காட்டம்!

கடம்பூர் ராஜூ
News
கடம்பூர் ராஜூ

``ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுவதே தி.மு.க-வுக்கு வாடிக்கையாகிவிட்டது” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்துவரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜூ ஆய்வுசெய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடியை விமர்சித்தது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதே பிரதமரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது தி.மு.க. அந்தக் கட்சி எப்போதுமே இரட்டை வேடம் போடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. அதேபோல, எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு சென்ற இடங்களில் அவரைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது ஆளுநர் நடத்திவரும் ஆய்வுகளையும், அவர் எடுக்கும் முடிவுகளையும் எதிர்க்காமல் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால் வரவேற்போம் என்று முதலில் கூறினார் நிதியமைச்சர். ஆனால், நேற்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என தி.மு.க எம்.பி ஒருவர் கூறியிருக்கிறார்.

கடம்பூர் ராஜூ ஆய்வு
கடம்பூர் ராஜூ ஆய்வு

ஒருவேளை தி.மு.க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா அல்லது வேறு ஏதும் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் இப்படிக் கூறுகிறார்களா எனத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என, அ.தி.மு.க அரசு வலியுறுத்திய அதே கருத்தையே தி.மு.க அரசும் வலியுறுத்துகிறது" என்றார்.