Published:Updated:

``சசிகலா, தினகரனை அதிமுக-வில் இணைப்பது என்பது நடக்காத காரியம்!" - கடம்பூர் ராஜூ காட்டம்

செய்தியாளர் சந்திப்பில் கடம்பூர் ராஜூ
News
செய்தியாளர் சந்திப்பில் கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க-வில் இனி இரட்டைத் தலைமைதான் என்பதைக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டனர்.

டாக்டர் அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரிலிருக்கும் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க., நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க-வில் இனி இரட்டைத் தலைமைதான் என்பதை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதற்காகக் கட்சியின் விதிகளில் சில திருத்தமும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு-கவில் இணைத்துக்கொள்ளப்படுவர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கிருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள், மீண்டும் கட்சிக்குள் வருவது என்பது நடக்காத ஒரு காரியம். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் நடந்துகொண்டனர்.

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

அ.தி.மு.க-வுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக்கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவுநாளை துக்கநாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். ஜெயலலிதாமீது பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள்தான் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவார்கள்” என்றார்.