Published:Updated:

``நான் வென்றதை என் பெத்தவங்க நம்பவேயில்லை!" - நினைவுகள் பகிரும் சீமான்

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்

மேல்நிலை வகுப்புக்கு போகும்போது எனக்கு கராத்தே கத்துகணும்னு ரொம்ப ஆசை வந்திருச்சு. பரமக்குடியில கத்துக்க போவோம். பாண்டியன்னு ஒரு மதுரை மாஸ்டர்தான் கத்துக்கொடுத்தாரு.

``நான் வென்றதை என் பெத்தவங்க நம்பவேயில்லை!" - நினைவுகள் பகிரும் சீமான்

மேல்நிலை வகுப்புக்கு போகும்போது எனக்கு கராத்தே கத்துகணும்னு ரொம்ப ஆசை வந்திருச்சு. பரமக்குடியில கத்துக்க போவோம். பாண்டியன்னு ஒரு மதுரை மாஸ்டர்தான் கத்துக்கொடுத்தாரு.

Published:Updated:
கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்
ஆனந்த விகடன் யூ -டியூப் சேனலின் கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது கடந்த கால வாழ்க்கை, சமகால அரசியல் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

உங்களுடைய கல்லூரி நாட்களைப் பற்றிச் சொல்லுங்க...

நான் படித்தது எல்லாம் கிராமத்துலதான். புதூர் ஹாஜி கே.கே. இப்ராஹிம் அலி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். இளையான்குடியில் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாஹிர் உசைன் கல்லூரியில் கல்லூரி வாழ்க்கை. அங்கே சிற்றூர்களில் இஸ்லாமிய நண்பர்கள் கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர்கள். அதனால் எங்க ஊருக்கு பக்கத்திலேயே அவங்க பள்ளி, கல்லூரியெல்லாம் வச்சுருந்தாங்க. அதனாலதான் எங்களைப் போல எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைத்தது. கட்டணமெல்லாம் அவ்வளவா கிடையாது. தேவையான புத்தகங்கள் மட்டும் வாங்கிட்டா போதும். அதுவும் எனக்கு பள்ளிக் காலங்களில் எங்க தலைமையாசிரியரே வாங்கிக் கொடுத்துருவார். +2வில் முதல் மதிப்பெண். கல்லூரியில் வணிகம் படிக்கலாம்னு போனேன். ஆனால் அது கிடைக்கல. அப்போ ஆங்கில இலக்கியம் கிடைக்குமானு கேட்டேன்.

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்
கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்

உன் ஒருத்தனுக்காக அதையெல்லாம் நடத்த முடியாதுனு சிக்கந்தர்னு ஒரு பேராசிரியர் என்னைப் பொருளாதாரத்தில் சேர்த்து விட்டாரு. அவரே எனக்கு புத்தகங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டாரு. கல்லூரி காலங்களில் நல்லா சேட்டைகள் பண்ணுவேன். எங்க அண்ணங்க கூட சேர்ந்து ரஜினி படம் பார்க்க அவரிடமே காசெல்லாம் வாங்கிட்டு போய் பார்ப்பேன். அங்குதான் தமிழ் பேராசிரியரா எனக்கு ஐயா தொ.பரமசிவன் அறிமுகம். ஒருமுறை கல்லூரி ஆண்டு மலருக்கு கவிதை எழுதிட்டு வாடானு சொன்னாரு. அந்த வயசுல நான் காதல் கவிதைகள் எல்லா எழுதி கொண்டு போய் குடுத்தேன். படிச்சு பாத்துட்டு எல்லார் முன்னாடியும் அதை நல்லா கிழிச்சு முகத்திலேயே வீசிட்டாரு. அப்போ எனக்கு வருத்தமாயிருச்சு. அப்போ, அதை புரிஞ்சுக்குற பக்குவம் எனக்கில்லை. உடனே எங்க அண்ணங்க எல்லாம் என்னனு விசாரிச்சுட்டு, வாடா போய் கேப்போம்னு கூட்டுட்டு போய் ஐயாவிடம்‌ நியாயம் கேட்டாங்க.

அதுக்கு ஐயா, `என்னடா ஒங்க தம்பி எழுதி எழுதிருக்கான்? அருமையான காதல் கவிதை தான். இந்த காதல பாடுறதுக்கு இந்த நாட்ல கோடி பேரு இருக்கான். ஒங்க தம்பியாவது மனுஷன பாடுற கவிஞனா எதையாவது உருப்படியா எழுதிட்டு வரச்சொல்லு' ன்னு சொல்லி அனுப்பிட்டாரு. அன்னைக்கு இரவெல்லாம் எனக்கு தூக்கமே வரல. அந்த ஒரு நொடிதான் என்னே மாற்றிய நொடி. கலை விழாவில் பாட்டு போட்டிலாம் நடந்து முடிஞ்சிருச்சு. நான் கபடி விளையாடதான் போயிட்டு இருந்தேன். அப்போ நான் ஒரு பாட்ட படிச்சுட்டு போயிட்டு இருந்தேன். அதைப் பாத்துட்டு அடுத்த எல்லா பாட்டுப் போட்டியிலயும் என்னைய பாட விட்ருவாங்க. எனக்குதான் முதல் பரிசு கிடைக்கும். நானே மெட்டெல்லாம் போட்டு தான்‌ பாடுவேன். அப்போதான் நான் திரைத்துறைக்கு வரனும்னு எனக்கு ஆசை வந்துச்சு."

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்
கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்

உங்க அப்பா செந்தமிழன் காங்கிரஸ்காரர் அவரைப் பற்றி...

``அப்பா பெருசா படிக்கல. ஆனா, எங்களை எல்லாம் படிக்க வச்சாரு. என்னை சிலம்பம், கராத்தே எல்லா கத்துக்க விட்டாரு. அப்பாகிட்ட எனக்கு ரொம்ப செல்லம். கல்லூரி காலங்களில் கீரை, தக்காளி இப்படி காய்கறி எல்லாத்தையும் வச்சுகிட்டு கூட அம்மாவையும் கூட்டிகிட்டு அவங்கள இளையான்குடி சந்தையில இறக்கிவிட்ருவேன். அவங்க அதையெல்லாம் அங்க வித்துட்டு இருப்பாங்க. கல்லூரி முடிச்சுட்டு வரும் போது அவங்கள‌ நான் கூட்டுட்டு வந்துருவேன். எங்க கிட்ட ஆடு மாடெல்லாம் நிறைய இருக்கும். கல்லூரி முடிச்சுட்டு போய் மாலையில் ஆடு மேய்ப்பேன். ஆடுங்க எல்லா எனக்கு நல்ல செல்லம். செல்லமா வளர்த்த ஆடெல்லாம் விற்கும் போது மூன்று நாள் சாப்பிடாமலாம் இருந்திருக்கேன். இப்படி பட்ட நல்லா அனுபவமெல்லாம் எனக்கு கிடைச்சுது. ஊருக்கே செல்ல பிள்ளை நானு. யாராவது இறந்துட்டா நீர் மாலை எடுத்துட்டு வருவாங்க. அப்போ முன்னாடி ரெண்டு பெரியவங்க சிலம்பம் ஆடிட்டு வருவாங்க.

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்
கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்

அதை பார்த்ததுல இருந்து எனக்கு சிலம்பம் மேல ரொம்ப ஆர்வமாயிருச்சு.அதை எப்படியாவது கத்துகணும்னு ஆர்வம் வந்திருச்சு. அப்படி தான் சிலம்பம் கத்துகிட்டேன். விடுமுறையப்போ டிவில புரூஸ்லி படம் பார்த்தேன். அதுல இருந்து கராத்தே கத்துக்கணும்னு ஆசை வந்துருச்சு. மேல்நிலை வகுப்புக்கு போகும்போது எனக்கு கராத்தே கத்துகணும்னு ரொம்ப ஆசை வந்திருச்சு. பரமக்குடியில கத்துக்க போவோம். பாண்டியன்னு ஒரு மதுரை மாஸ்டர்தான் கத்துக்கொடுத்தாரு. உனக்கு ஒருத்தனுக்காகல்லாம் வர முடியாதுடா, கூட யாரையாச்சு சேர்த்துட்டு வா‌ன்னு சொல்லிட்டாரு. நானும்‌போய் ஆறு பேரு கிட்ட சேர்த்துட்டு போய் கத்துகிட்டோம். அப்புறம் சேக் மைதீன்னு ஒரு மாஸ்டர். பாண்டியன் மாஸ்டர் இல்லைனா இவரு எடுப்பாரு.

அப்போ பரமக்குடியில டோர்னமென்ட் நடந்துச்சு. அதுதான் முதல் டோர்னமென்ட் எனக்கு. அன்னைக்கே நான் 18.5புள்ளி போட்டேன். என்னைவிட சீனியர் யாருக்குமே 18.5 போட‌ முடியல. கடைசியில எனக்கும் கணேஷ்னு ஒரு சீனியருக்கும் மேட்ச். அதுல நான்தான் ஒரு பாயிண்ட்ல கப் அடிச்சேன். சண்டைல நான் ரெண்டாவது வந்தேன். அரங்கத்துல எல்லாருமே வியந்துட்டாங்க. அப்புறம் அந்த கப் எடுத்துட்டு வீட்டுக்கு போனேன். அப்பா, அம்மா நான் ஜெயிச்சுட்டேன்னு சொன்னப்போ நம்பல அவங்க. அப்புறம் கப்பெல்லாம் எடுத்து காமிச்சப்போதான் நம்புனாங்க. அடுத்த டோர்னமென்ட் எங்க ஸ்கூல்லதான். அதையும் எங்க தாத்தா நம்பல. அங்க எங்க ஊருல எங்க அப்பா பெயரைச் சொல்லி தான் சைக்கிள் எடுப்பேன். கடையில எங்க அப்பா பெயரைச் சொல்லிட்டு வேணும்ங்கிறத வாங்கிருவோம். ஒருமுறை எங்க அப்பா இளையான்குடியில சைக்கிள் கேக்கிறாரு சைக்கிள் கடைக்காரன் யாருன்னு தெரியலனு சொல்லிட்டான். அங்க பக்கத்துல உள்ளவங்க, `டேய் இவருதான் சீமான் அப்பா!' ன்னு சொன்னதும் குடுத்துட்டாங்க.

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்
கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா: சீமான்

அதை எங்க அம்மா கிட்ட வந்து அப்பா சொல்லிட்டு இருந்தாங்க. `முன்னாடியெல்லாம் என் பெயரை சொன்னாலதான் இவனுக்கு எல்லாம் கிடைக்கும். இப்போ என்னை யாருன்னு தெரியல, சீமான் அப்பானு சொன்னாதான் எனக்கு சைக்கிளே குடுக்கறான், என் நிலைமை இப்படி ஆயிருச்சுன்னு சொன்னாரு. நான் கபடி விளையாடுறது எல்லாம் எங்க அப்பாவுக்குப் பிடிக்காது. பக்கத்து ஊருல ஒரு டீ கடையில இருந்தவங்க எங்க அப்பான்னு தெரியாம அவருகிட்ட போய் சீமான்னு ஒரு பையன் அரனையூர்காரன். என்னமா கபடி ஆடுறான்னு சொல்லியிருக்காங்க. அப்போ எல்லாம் கபடி விளையாடுறதுனு சொல்ல மாட்டாங்க, கபடி பத்துறதுனு தான் சொல்லுவாங்க. என் பக்கத்து ஊரு நண்பர்கள் எல்லா வந்து அவங்க ஊருக்காக என்னைய கபடி விளையாட கூட்டிட்டு போவாங்க. அதுக்கு கல்லு, புரோட்டா எல்லா வாங்கி கொடுப்பாங்க. நான் அவங்களுக்கு ஜெயிச்சுக் குடுப்பேன். இதுதான் என்னோட கிராமத்து வாழ்க்கை அனுபவம்."