Published:Updated:

"கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான் பிரசாந்த் கிஷோர்!" - கமல் சிறப்புப் பேட்டி

என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மேம்படுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மேம்படமுடியாது. என்னைச் செதுக்கியவை எல்லாம் விமர்சனங்கள்தான்

கமல்ஹாசனுடன் சினிமா, அரசியல், காதல் என எதைப்பற்றியும் பேசலாம். காலில் ஏற்பட்ட விபத்துக்காக அறுவைசிகிச்சை செய்து வீடு திரும்பியவருக்கு திடீரெனக் கையில் காயம். இப்போது மீண்டும் சிகிச்சை என ஓய்வில் இருப்பவருடன் ஒரு சந்திப்பு...

"காதலர் தினம் வருகிறது. காதல் இளவரசன் என்று அழைக்கப்பட்ட கமல்ஹாசன் இன்றைய காதலர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?"

"செக்‌ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன."

அது அவர்களுடைய தேர்வு. மக்களில் ஒருவர்தானே ஆலோசகர்களும். பிரசாந்த் கிஷோர் ஒரு கெட்டிக்காரர். மக்கள் பலம் இருக்கக்கூடியவர்களுக்கு பலம் கூட்டக்கூடியவர்.

"சமூக வலைதளங்களில் கமல்ஹாசனின் கருத்துகளுக்குப் பெரிதாக எதிர்வினைகள் வருவதில்லை. ஆனால், ரஜினிகாந்த் எதுவும் சொல்லிவிட்டால் கடுமையாக அவர் விமர்சிக்கப்படுகிறார். இதையெல்லாம் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மேம்படுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மேம்படமுடியாது. என்னைச் செதுக்கியவை எல்லாம் விமர்சனங்கள்தான். என்னுடைய நடிப்பையெல்லாம் யாரும் ஆரம்பத்தில் வரவேற்கவில்லை. 'எம்ஜிஆர், சிவாஜி இருக்கும்போது எதை நம்பி நீயெல்லாம் ஹீரோவா வந்த?' என, நான் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் என்னை ஒரு நிருபர் கடுமையாக விமர்சித்தார். நான் கோபப்படவில்லை. அவரை ஆள்வைத்து அடிக்கவில்லை. அவர் சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டேன். என்னை பாலசந்தர் மாதிரியான ஒரு இயக்குநரிடம் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டேன். இப்படித்தான் கமல்ஹாசன் என்கிற நடிகன் உருவானான். என்னைத் தரம்தாழ்ந்து விமர்சித்தவரை, மீம் போட்டவரை என்னைப் பாராட்டி மீம் போட வைக்கவேண்டும் என்றுதான் நான் யோசிப்பேன்." முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/37r5CKi

"தி.மு.க-வின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்... மக்கள் செல்வாக்கை நம்பாமல் அரசியல் ஆலோசகர்களை நம்புவது சரியா?"

"அது அவர்களுடைய தேர்வு. மக்களில் ஒருவர்தானே ஆலோசகர்களும். பிரசாந்த் கிஷோர் ஒரு கெட்டிக்காரர். மக்கள் பலம் இருக்கக்கூடியவர்களுக்கு பலம் கூட்டக்கூடியவர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அதேசமயம் அவர் கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான். கணக்குப்பிள்ளையை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு உங்களிடம் செல்வம் இருக்கவேண்டும். அப்போதுதான் கணக்குப்பிள்ளைக்கு வேலை இருக்கும். செல்வத்தைக் கணக்குப்பிள்ளைகள் ஈட்டித்தரமாட்டார்கள்."

கமல்
கமல்

> "50 வருடங்கள் கழித்து நீங்கள் படித்த சர். முத்தையா செட்டியார் பள்ளிக்குச்சென்று நண்பர்களுடன் ரீ-யூனியன் நடத்திய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்."

> "5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறதே?"

> "டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுகிறீர்கள். அவர்தான் அரசியலில் உங்களுக்கு முன்மாதிரியா?"

> " 'இந்தியன் -2', 'தலைவன் இருக்கிறான்' அப்டேட்ஸ் சொல்ல முடியுமா?"

- இந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்களுடனான ஆனந்த விகடன் நேர்காணலை முழுமையாக வாசிக்க > "எல்லாத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்!" https://www.vikatan.com/news/celebrity/exclusive-interview-with-kamal-haasan

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு