Published:Updated:

``நேர்மையானவர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்சவெச்சுட்டீங்க..!" - மதுரையில் கமல்ஹாசன்

மதுரையில் பரப்புரை செய்த கமல்ஹாசன்

``தூங்கா நகரில் மனசாட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது” என மதுரையில் பரப்புரை செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் பேசினார்.

``நேர்மையானவர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்சவெச்சுட்டீங்க..!" - மதுரையில் கமல்ஹாசன்

``தூங்கா நகரில் மனசாட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது” என மதுரையில் பரப்புரை செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் பேசினார்.

Published:Updated:
மதுரையில் பரப்புரை செய்த கமல்ஹாசன்

``கொரோனாவைவிட மக்களிடம் தைரியம் வேகமாகப் பரவட்டும்" என்று மதுரை மாநகராட்சித் தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மதுரை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்ட பரப்புரையை திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கமல் பேசும்போது, ``மாநகராட்சியில் வார்டு சபை அமைத்து, வார்டுகளில் செலவான கணக்குகளை மக்களிடையே நேரடியாகச் சொல்லவைப்பேன். சொல்லவில்லையென்றால் நான் செய்யவேண்டியதைச் செய்வேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏனென்றால், அது மன்னிக்கக் கூடாத குற்றம். அதை எங்கள் கட்சியிலிருந்து யாரையும் செய்ய விடமாட்டேன். அந்த வாக்குறுதியுடன்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

கமல் பரப்புரை
கமல் பரப்புரை

ஒரு வார்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது, என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூற நாங்கள் தயார். அவர்கள் தயாரா... எத்தனை கழகங்கள் உள்ளன... எல்லாம் வியாபாரம். அவர்கள் இப்படிக் கூறத் தயாராக இருக்கிறார்களா?

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கட்சிக்காக நிற்கவில்லை. மக்களுக்காக நிற்கின்றனர். அந்தப் பிரதிநிதிகள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் பெயர்தான் மக்கள் நீதி மய்யம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் எதற்கு அரசியலுக்கு வந்தேன்... சந்தோஷமாத்தானே என்னைவெச்சிருந்தீங்க... எனக்குப் புகழுக்கு பஞ்சமா, பணத்துக்குப் பஞ்சமா? நான் வாழ்ந்ததற்கான அடையாளத்தைக் காட்ட அரசியலுக்கு வந்தேன். இந்த வண்டிகூட நீங்க கொடுத்த காசுல வாங்கினதுதான்.

சினிமாவுல கூத்தாடிட்டு அது போதும்னு நினைக்கலை. மக்களுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன். வாழ்க்கையில் நானும் மனிதனாக வாழ்ந்தேன் என்ற அர்த்தத்துக்காக அரசியலுக்கு வந்தேன். நேர்மையாளர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்சவெச்சுட்டீங்க.

மறுபடியும் வெற்றிபெற வையுங்கள் என கர்வத்துடன் கேட்கவேண்டிய என்னை, வியாபரத்துக்காக வாக்கு கேட்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி கெஞ்சவிட்டீங்க. நான் நாளைய தலைமுறைகளுக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.

கமல் பரப்புரை
கமல் பரப்புரை

மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்துக்கு மட்டும்தான் இருக்கு.

மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கேள்வி கேட்பதற்கும், மாற்றம் செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

தூங்கா நகரம் என்பது மக்கள் எப்போதும் தூங்காமல் இருப்பதற்கு அல்ல. சந்தோஷமாக தூங்காமல் இருக்க வேண்டும். இங்கு மனசாட்சி மட்டும் தூங்கிக்கொண்டிருக்கிறது. நகரம் தூங்காமல் இருக்கிறது. எல்லோரும் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

நீங்கள் பயந்து நின்றீர்கள் என்றால், அப்படியே செல்வார்கள். தைரியத்துடன் கேளுங்கள். கொரோனாவிட தைரியம் வேகமாகப் பரவட்டும், நாளை நமது ஆகும்" என்றார்.