Published:Updated:

``என் தந்தையின் சிலை வழிபாட்டுக்குரியது அல்ல!" - சிலை அரசியல் தொடர்பாக கமல்

கமல் தனது பிறந்தநாளான இன்று சொந்த ஊரில் அவரின் தந்தைக்குச் சிலை ஒன்றைத் திறக்கிறார். இதற்காக அவர் நேற்று தன் குடும்பத்தினருடன் மதுரை வந்தார்.

கமல்
கமல் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``என் தந்தையின் சிலையை என் இல்லத்தில்தான் வைத்துள்ளேன், அதை பொது இடத்தில் வைக்கவில்லை. அது வழிபடக்கூடிய சிலையும் அல்ல'' என்று சிலை அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்
கமல்
ஈ.ஜெ.நந்தகுமார்

பரமக்குடியில் இன்று நடைபெறும் கமலின் தந்தைக்குச் சிலை திறக்கும் விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு மதுரைக்குக் குடும்பத்தினருடன் வருகை தந்தார் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ``நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதை அரசியல் ரீதியாகவும், நண்பன் என்ற முறையிலும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன்'' என்றவரிடம் , `மாற்று அரசியலைப் பற்றிக் கூறிவரும் தாங்கள் சிலை திறப்பது அதற்கு மாறானது இல்லையா?' என்றதற்கு,

ஸ்ருதி, அக்‌ஷரா
ஸ்ருதி, அக்‌ஷரா
ஈ.ஜெ.நந்தகுமார்

``என் தந்தை சிலையை என் இல்லத்தில்தான் வைத்துள்ளேன், பொது இடத்தில் வைக்கவில்லை. அது மட்டுமல்ல என் தந்தையின் சிலை வழிபாட்டுச் சிலை அல்ல'' என்றார்

`இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் தங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே?' என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், ``தற்பொழுது ரஜினிகாந்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு எனக்கு வழங்கலாம்'' என்றார்.

குடும்ப உறுப்பினர்கள்
குடும்ப உறுப்பினர்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்

மேலும், மக்கள் நீதி மய்ய கட்சியிலிருந்து நிர்வாகிகள் சிலர் விலகிச் சென்றது தொடர்பான கேள்விக்குப் பதில் கூறாமல் கிளம்பிச் சென்றார். அவருடன் சாருஹாசன், மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா உட்பட குடும்ப உறுப்பினர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் உடன் வந்தனர்.