Published:Updated:

"தலித் அரசியலை நானும் நடத்த வேண்டும்!" - விகடன் பிரஸ்மீட்டில் கமல்!

கமல்
கமல்

'இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்று சொல்வதுபோல அந்த நிலை இல்லாத நிலைவரும்வரை அந்த அரசியல் நடக்க வேண்டும்.

"அரசியல் கட்சி என்றால் மக்களைச் சந்தித்து, மக்களோடு நின்று போராடுவது, சிறை செல்வது, தீர்வை நோக்கி முன்னேறுவதுதானே சரி. ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காக ஆவேசமாக வீடியோ வெளியிடுவதோடு ஒதுங்கிக்கொள்கிறீர்களே?''

- நித்திஷ்

விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/34br7xw

"மக்கள் பலம் இல்லாமல் எந்த அரசியல்வாதியும் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் பலத்தை எந்தவகையில் திரட்டினால் என்ன? போராட்டமும், உயிர்நீத்தலும், தீக்குளிப்பதும்தான் ஒரே வழி என்பது காந்தி காலத்திலேயே மாறிவிட்டது. அது என் காலத்தில் இன்னமும் மாறும். போர்தான் நீதி கேட்பதற்கு ஒரே வழி எனும் நிலைமை மாறியே தீரும். மாறும் என்று நம்புபவன் நான். வீதிகளில் போராட்டங்கள் நடத்துவதால் ஏற்படும் டிராஃபிக் ஜாம் மக்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். எத்தனை பேர் பிரசவத்துக்குப் போகிறார்களோ, அவசரமாக மருத்துவமனைக்குப் போகிறார்களோ? நிகழ்வாழ்வைத் தடைப்படுத்துவதைவிட அதைத்தொடர அனுமதிக்க வேண்டும். குரல் எப்படி வேண்டுமென்றாலும் வரலாம். மேடை மேல் இருந்து வரலாம். வீதிகளில் இருந்தும் வரலாம். நாங்கள் களத்துக்குப் போயிருக்கிறோம். கஜா புயலின்போது நின்றிருக்கிறோம். ஹெலிகாப்டரில் போகவில்லை. மக்களின் பேச்சு, குரல், அழுகை எல்லாம் கேட்டுக்கொண்டுவந்தோம். அரசு அதிகாரிகள்கூட வராத இடத்துக்குப் போனோம். மேலிருந்து உத்தரவு வந்தால்தானே அவர்கள் போவார்கள். அதனால் அந்த மேலிடத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காகத்தான் 2021-ல் முயற்சி செய்யப்போகிறோம்.''

"பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களில் உங்களுடைய குரல் முக்கியமானது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?"

- ஐஷ்வர்யா

"தீர்ப்பின் குரல் எதுவாகவும் இருக்கலாம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒலித்தேனே, என்னுடைய குரல் அதுவாகவேதான் இருக்கும். நாங்கள் நியாயத்தின் குரல். அது நீதியின் குரல்."

"வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?"

- ஆ.பழனியப்பன்

"வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாகக் கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு."

வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாகக் கூட்டணி அமைக்க வேண்டும்

"தலித் அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?''

- சுகுணா திவாகர்

"தலித் அரசியல் எனத் தனியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. தலித் அரசியலை நானும் நடத்த வேண்டும். நீங்களும் நடத்த வேண்டும். அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடக்கூடாது. அதில் எல்லோரும் பங்குபெற வேண்டும். நான் சொல்வது அதற்கு ஆதரவாக! எதிர்த்து நின்று விளையாடக்கூடாது. 'இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்று சொல்வதுபோல அந்த நிலை இல்லாத நிலைவரும்வரை அந்த அரசியல் நடக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய அரசியல் பற்றிக் கேட்கிறீர்கள். என்னை மாடர்ன் இந்தியன் என வைத்துக்கொள்ளலாம். இந்தியாவை ஒருநாடாகத் தைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார்கள் சிலர். தைத்தால் என்ன என்று கேட்டு ஒன்றுசேர்ந்த பெருங்கூட்டத்தில் ஒருவன் நான். அதிலிருந்து இந்த மண்ணைத் தனியாகப் பிரித்தெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. எப்போதுமே தனிச்சிறுகூட்டத்தின் குரலாக ஒலிக்கக்கூடாது. ஒட்டுமொத்தத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என உன்னிப்புடன் கேட்க வேண்டும். தனித்துப்போகவேண்டும் எனச் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.''

> "கீழடி அகழாய்வு முடிவுகளை வைத்து, 'இது தமிழர் கலாசாரம்', 'திராவிடக் கலாசாரம்', 'பாரதக் கலாசாரம்' என்று வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படு கின்றன. ஆரியர், திராவிடர், தமிழர், இந்தியர் என இந்த அடையாளங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

> " 'கமலுக்குக் கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறது?' - இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. விரிவான ஒரு விளக்கம் கிடைக்குமா?''

> "கமல் - ரஜினி, விஜய் - அஜித், இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் எனக் காலம்காலமாகத் தமிழ் சினிமாவில் நடந்துவரும் ஒப்பீட்டுச் சண்டையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'

> "நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரேமாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?''

"தலித் அரசியலை நானும் நடத்த வேண்டும்!" - விகடன் பிரஸ்மீட்டில் கமல்!

> "நீங்கள் ஒரு நாத்திகராக அறியப்பட்டாலும், உங்கள் திரைப்படங்களில் வைணவம் சார்ந்த குறியீடுகள், பெயர்கள், தொன்மங்கள் இடம்பெறுகின்றன. என்ன காரணம்?''

> "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததும் 'சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்' என ட்விட்டரில் பதிவிட்டீர்கள். ஜெயலலிதா மரணம் குறித்து உங்கள் கருத்து அவ்வளவுதானா?''

- இந்தக் கேள்விகளுக்கு விகடன் பிரஸ்மீட்டில் கமல் அளித்த பதில்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்!" https://www.vikatan.com/news/politics/exclusive-vikatan-press-meet-with-kamal-part-2

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு