Published:Updated:

``எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்க்காதீர்கள்; நேரடியாக மக்களிடம் செல்லுங்கள்!" - கமல்

கமல்

``கட்சிப் பதவி எனக்கு... எனக்கு என்று நினைத்தால் எதுவும் நடக்காது. எனக்குத் தேவை, 39+234 நபர்கள்தான். அவர்களை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்." - கமல்

``எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்க்காதீர்கள்; நேரடியாக மக்களிடம் செல்லுங்கள்!" - கமல்

``கட்சிப் பதவி எனக்கு... எனக்கு என்று நினைத்தால் எதுவும் நடக்காது. எனக்குத் தேவை, 39+234 நபர்கள்தான். அவர்களை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்." - கமல்

Published:Updated:
கமல்

சென்னை, மாங்காட்டில் உள்ள கார்த்திக் பேலஸில் ம.நீ.ம-வின் மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மவுரியா, இளைஞரணி செயலாளர் சினேகன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கமல் கட்சிக்கு நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் நிதி வழங்கினார்கள். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி போல கூட்டம் தொடர்ந்தது.

அப்போது மாவட்டச் செயலாளர்கள் கமலிடம், ``கட்சிக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களையும் மேடை ஏத்துங்க. அப்போதுதான் எங்களை எங்க தொகுதி மக்கள் அடையாளம் காணுவார்கள். குறைஞ்சது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது மாவட்டத்துக்கு வாங்க... எங்ககூட ஆலோசனை நடத்துங்க, சுற்றுபயணத்தின்போது நேரத்தை சரியாக கடைப்பிடிங்க. கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் நின்று பேசுங்கள். உங்களுடன் போட்டோக்கூட எடுக்க முடியாதநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். உங்களைச் சந்திக்க முடியவில்லை. இடையில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை’’ என குமுறினர்.

கமல்
கமல்

நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய கமல், ``மக்களைச் சந்திக்க எனக்கு பயமில்லை. ஆனால், அலைச்சலினால் நான் படுத்துவிட்டால் எல்லாம் போச்சு. மக்களுக்காக ஓடின முதல்வர் ஸ்டாலின் இப்போது மருத்துவமனையில் உள்ளார். எல்லாரும் கவனமாக இருங்கள். நீங்கள் எல்லோரையும் மேடை ஏற்றுவது குறித்து பேசுகிறீர்கள். நான், ஒருவரை மதித்து `தம்பி' என அழைத்து, என் மடியிலேயே வைத்திருந்தேன். ஆனால், பாதிலேயே எனக்குச் சந்தேகம் வந்தது. அதை உறுதிசெய்துவிட்டு வேறு கட்சிக்குச் சென்று விட்டார். அவரை நான் துரோகி என்றுதான் அழைத்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால் அவர் துரோகிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமல்
கமல்

கட்சிப் பதவி எனக்கு... எனக்கு என்று நினைத்தால் எதுவும் நடக்காது. எனக்குத் தேவை, 39+234 நபர்கள்தான். அவர்களை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் காந்திதான் என்று சொன்னால் ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு கோபம் வந்துவிடும். ஆனால் எனக்கு தைரியமிருக்கிறது. காந்தியின் நேர்மையை பின்பற்றிக் கொண்டேயிருப்பேன்.

கமல்
கமல்

விஸ்வரூபம் படத்தின்போது, நாட்தைவிட்டு வெளியேறுவதாக நான் அழுததாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் அழவில்லை. அரசுக்கு எதிராக தைரியமாக நின்று வழக்கு தொடர்ந்தேன். நான் நடிப்பதால் மட்டும் படம் ஓடிவிடாது. வெற்றியின் மறுபக்கம்தான் தோல்வி. தோல்வியை கண்டு நான் துவண்டு போயிருந்தால், இன்று விக்ரம் இல்லை. நாம் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம். ஆனால், அதையே சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். இப்போது உச்சியில் சூரியன் இருக்கிறது. நாம் ஓடுவதை நிறுத்திவிட்டால், சிங்கம் விரட்டும் மான்களாக வேட்டையாடப்படுவோம். தொடர்ந்து ஓடுவோம். நிர்வாகிகள் மக்களை நோக்கி பயணம் செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்காதீர்கள்.

கமல்
கமல்

கமல்ஹாசனின் முதல் ரசிகனும், விமர்சகரும் கமல்ஹாசன்தான். என் படம் தோல்வி அடைந்தால், அதனால் நான் மட்டுமே நஷ்டப்பட்டிருக்கிறேன். என்னால் யாரும் நஷ்டம் அடைந்தது இல்லை. அரசியல் மேடையில் நான் வேட்டி கட்ட மாட்டேன். சாமான்யனைபோலவே உடை அணிவேன். நெத்தியில் பொட்டு, திருநீர் வைக்க சொல்லி என்னை வற்புறுத்தாதீர்கள். நானும் வைக்க வேண்டாம் என்று உங்களை வற்புறுத்த மாட்டேன். மதுரையில் மகளிருக்கே மதுக்கடை வந்துவிட்டது. இவர்கள் குழந்தைகளுக்கே மது விற்பார்கள். அதுவே அவர்களின் தொழிலாகிவிட்டது’’ என்றார்.