Published:Updated:

`தயாராகும் வேட்பாளர் பட்டியல்; 55 வாரப் பயணம்!' - மக்கள் நீதி மய்யத்தின் பிப்ரவரி பிளான்

கமல்
கமல்

தேர்தல் குழுவில் இடம்பெறுபவர்கள் யார் என்ற தகவலைத் தலைமை டாப் சீக்ரெட்டில் வைத்துள்ளது. இதனால் நிர்வாகிகள் தற்போது முதலே எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் விவாதித்துக்கொண்டு இருக்க, இந்தப் பந்தயத்தில் களம்காணாத மக்கள் நீதி மய்யம் அமைதியாக சட்டப்பேரவை தேர்தலுக்காகத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியானது. 2021 தேர்தலுக்கான பணிகளை வரும் 21-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

கமல்
கமல்

பிப்ரவரி மாதம் 21-ம் தேதி கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று 2021 தேர்தலுக்கான சில முக்கிய அறிவிப்புகளைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல், கட்சி நிர்வாகிகளுக்கும் சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ``கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவை தலைவர் கமல் முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறார். அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த மாதம் முதலே தேர்தல் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் குழுவை அறிவிக்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு, தேர்தல் குழுவை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் அறிவிக்கவுள்ளது. இந்தக் குழுவில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாது, சிறப்பாகப் பணியாற்றும் மாவட்ட நிர்வாகிகளும் இடம்பெறுவார்கள். ஆனால், இந்தக் குழுவில் இடம் பெறுபவர்கள் யார் என்ற தகவலைத் தலைமை டாப் சீக்ரெட்டில் வைத்துள்ளது. இதனால் நிர்வாகிகள் தற்போது முதலே எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்" என்கின்றனர்.

`தயாராகும் வேட்பாளர் பட்டியல்; 55 வாரப் பயணம்!' - மக்கள் நீதி மய்யத்தின் பிப்ரவரி பிளான்

தொடர்ந்து, ``கட்சி தொடக்க விழா அன்று மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி இருக்கும். கமல்ஹாசன், சென்னை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுவார். அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள், கிராம, நகர்புற நிர்வாகிகள் அவர்கள் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும். அன்று தேர்தல் தொடர்பாக மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அன்றைய தினம் முதல் 2021-ம் ஆண்டு தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு பெறப்படும். அன்றே வேட்பாளர் தேர்வும் தொடங்கும்" என்றனர்.

அதாவது, தேர்தலுக்கு குறைந்தது 10 மாதங்களுக்கு முன்னரே வேட்பாளர் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்கள். மேலும், 55 வாரக் காலம் பயணத் திட்டம் என்னும் நீண்ட காலத் திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளார்கள். இது தொடர்பாகவும் விசாரித்தோம், ``கட்சி தொடக்க விழாவுக்குப் பின்னர் ஒரு சின்ன ஷெட்யூலில் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கமல் செல்லவுள்ளார். எனினும், தேர்தல் குழு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கும்.

`தேர்தல் வித்தகர் பிரசாந்தை ஏன் நீக்கினார் கமல்?!'- மக்கள் நீதி மய்யம் சொல்லும் அதிர்ச்சிக் கணக்கு

படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் கமல், அனைத்து மாவட்டங்களில் கிராம, நகர வாரியாக மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது மிக நீண்ட திட்டமாக இருக்கும். தேர்தலுக்கு அப்போது 55 வாரங்கள் இருக்கும். அதை முழுமையான திட்டமிடுதலுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் கமல்.

`தயாராகும் வேட்பாளர் பட்டியல்; 55 வாரப் பயணம்!' - மக்கள் நீதி மய்யத்தின் பிப்ரவரி பிளான்

வேட்பாளளர் தேர்வு முன்னதாகவே நடப்பதற்கு முக்கிய காரணம், வேட்பாளர்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலான வேட்பாளர்கள் மக்களுக்கு புதிதானவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்யபட்டுவிட்டால், மக்களோடு மக்களாகக் களப்பணி ஆற்றத் தொடங்குவார்கள். இதன்மூலம் மக்களிடம் அவர்களால் எளிதில் சென்றடைய முடியும். எதிர்காலத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டால், அந்தத் தொகுதிகள் எங்கள் வேட்பாளர்களை விட்டுக்கொடுக்க வைக்கலாம். இந்த விஷயங்கள் விருப்பமனு பெறும்போதே அவர்களிடம் சொல்லப்படும்" என்றனர் விரிவாக.

பின் செல்ல