Published:Updated:

``இந்தச் சமூகம், நமக்கு இஷ்டமில்லாத விஷயங்களையும் திணிக்கிறது!’’ - கனிமொழி எம்.பி

கனிமொழி

‘‘சாதி, மதம், மொழி என்று நமக்கு இஷ்டமில்லாத எத்தனையோ விஷயங்களை இந்தச் சமூகம் திணிக்கிறது’’ என்று பேசியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

``இந்தச் சமூகம், நமக்கு இஷ்டமில்லாத விஷயங்களையும் திணிக்கிறது!’’ - கனிமொழி எம்.பி

‘‘சாதி, மதம், மொழி என்று நமக்கு இஷ்டமில்லாத எத்தனையோ விஷயங்களை இந்தச் சமூகம் திணிக்கிறது’’ என்று பேசியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

Published:Updated:
கனிமொழி

வேலூர் அருகே கணியம்பாடி பகுதியிலிருக்கும் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி பட்டமளிப்புவிழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் தி.மு.க எம்.பி கனிமொழி. அப்போது அவர் பேசுகையில், ‘‘ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு பெண்கள் அதிகமாக கோல்டு மெடலிஸ்ட் ஆகியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் 10 வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது, இன்றைக்குப் பட்டம் வாங்கிய பெண்களில் பாதிப் பேர் வீட்டில் இருக்கக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த இடத்துக்கு உங்களைக் கொண்டுப்போய் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து திறமைகளை வெளிக்கொணரக்கூடியவர்களாகவும், கனவுகளைக் கொண்டாடக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எதற்காகவும் உங்களின் கனவுகளைத் தகர்த்துக்கொள்ளாதீர்கள்.

கனிமொழி
கனிமொழி

உலகம் முழுவதுமிருக்கும் பெண்கள் போராடித்தான் வாக்குரிமை பெற்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் போராடாமலேயே வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனாலும், மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகுதான் அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆண், பெண் பேதமின்றி படிக்கலாம் என்ற உரிமையைப் பெற்றிருக்கிறோம். கேள்வி கேட்டதால்தான் அந்தப் போராட்டங்களை அவர்களால் முன்னெடுக்க முடிந்தது. ‘இந்தச் சமூகம் இப்படித்தான்’ என்று சொல்லும்போது ‘அது ஏன்?’ என்று கேள்விக் கேட்கிற தைரியம் அவர்களிடம் இருந்தது. தொடர்ந்து சாதி, மதம், மொழி என்று நமக்கு இஷ்டமில்லாத எத்தனையோ விஷயங்களையும் திணித்துக்கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். அதை நீங்கள் கேள்வி கேளுங்கள்’’ என்றார்.