Published:Updated:

அண்ணாமலை தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

அண்ணாமலை
அண்ணாமலை

பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அண்ணாமலையைத் தலைவராக நியமித்தார்.

தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அண்ணாமலையைத் தலைவராக நியமித்தார். தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சராகப் பதவி கிடைத்த பிறகு தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்தநிலையில் தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பா.ஜ.க-வின் வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு