Published:Updated:

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாள்; அவரின் உருவம் பொறித்த சேலையை வடிவமைத்த பெண் தொண்டர்

திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாள்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவம் பொறித்த சேலைகளை, அவர் ஆதரவாளர் ஒருவர் தயார் செய்து வைத்திருக்கிறார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாள்; அவரின் உருவம் பொறித்த சேலையை வடிவமைத்த பெண் தொண்டர்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவம் பொறித்த சேலைகளை, அவர் ஆதரவாளர் ஒருவர் தயார் செய்து வைத்திருக்கிறார்.

Published:Updated:
திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாள்

தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி தனது 55-வது பிறந்த நாளை ஜனவரி 5-ம் தேதி கொண்டாடவிருக்கிறார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், அதை பிரமாண்டமாக கொண்டாட அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

சேலை
சேலை

அதன்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த அம்மு ஆன்றோ என்பவர் கனிமொழி உருவம் பொறித்த சேலைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அந்த சேலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்களும், அண்ணா அறிவாலயம், தமிழ் உயிர் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து அம்மு ஆன்றோவிடம் கேட்டபோது, ``எங்களை போன்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக கனிமொழி இருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அவரின் உருவம் பொறித்த சேலையை தயார் செய்ய முடிவு எடுத்தேன். அதன்படிதான், இந்த சேலையை வடிவமைத்தேன்.

அம்மு ஆன்றோ
அம்மு ஆன்றோ

குறிப்பாக, மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்துக்கு நன்றிகூறும் விதமாக அந்த டிக்கெட், தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நினைவுப்படுத்தும் படம், செம்மொழி பூங்கா உள்ளிட்டவையும் சேலையில் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் 1,500 சேலைகளை தயாராக இருக்கின்றன. அக்கா கனிமொழி பிறந்தநாளுக்கு முன்பாக கட்சியின் ஏழை எளிய பெண் தொண்டர்களுக்கு இந்த சேலைகளை இலவசமாக வழங்கவிருக்கிறேன்" என்றார்.