Published:Updated:

`கேரள ஜோதிடர்களின் அறிவுரை.. புது கார்.. வீட்டுச் சிறை?'- எடியூரப்பாவின் `கிரகண சர்ச்சை'!

இடைத்தேர்தல் அவருக்குத் தெம்பு அளித்தாலும் காங்கிரஸ் - மஜதவுக்கு ஏற்பட்ட அதே `அமைச்சர்’ பதவி பிரச்னை தனது கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதால் நொந்துபோய் இருக்கிறார் எடியூரப்பா.

ஒருவழியாக தனது முதல்வர் பதவிக்குப் பங்கம் வந்துவிடாத வண்ணம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் எடியூரப்பா வெற்றிபெற்றுவிட்டார். நான்காவது முறையாக முதல்வர் ஆனாலும், `இம்முறை முழு ஆட்சிக்காலத்தையும் முடிப்பேன்’ என்ற சூளுரையுடன் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இடைத்தேர்தல் அவருக்கு தெம்பு அளித்தாலும் காங்கிரஸ் - மஜதவுக்கு ஏற்பட்ட அதே ’அமைச்சர்’ பதவி பிரச்னை தனது கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதால் நொந்துபோய் இருக்கிறார் எடியூரப்பா.

காரணம் இதுதான்... எடியூரப்பா மீண்டும் முதல்வராகப் பதவியேற்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்களில் 11 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எடியூரப்பா
எடியூரப்பா

இவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என்று ஏற்கெனவே எடியூரப்பா அறிவித்திருந்தார். இதை இப்போது செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளார். காலியாக உள்ள 16 அமைச்சர் பதவிகளுக்கு 11 பதவிகள் இடைத்தேர்தலில் ஜெயித்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள ஐந்து அமைச்சர் பதவிகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என பா.ஜ.க-வின் மூத்த எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கான உள்ளடி வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதால் அதைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் எடியூரப்பா. எனினும் சாதி வாரியாக மாவட்ட வாரியாக மாதிரி அமைச்சா் பட்டியலைத் தயாரித்துள்ள அவர், அதைத் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் அவரின் பட்டியலுக்கு இதுவரை பா.ஜ.க டெல்லித் தலைமை ஒப்புதல் கொடுக்கவில்லை.

Vikatan

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் இருக்கிறார் எடியூரப்பா. இதற்கிடையே, நடந்துமுடிந்த அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணத்தன்று எடியூரப்பா செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இயல்பாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர் எடியூரப்பா. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்.

கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பின்போது இஷ்டதெய்வமான ஈஸ்வரனுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தார். அந்த அளவுக்குக் கடவுள் பக்தி கொண்ட எடியூரப்பா, சூரிய கிரகணத்தன்றும் தனது ஆஸ்தான கேரள ஜோதிடர்களின் ஆலோசனைப் படி தவலகிரியில் உள்ள தனது இல்லத்திற்குள் ஒருநாள் முழுவதும் அடைபட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா
எடியூரப்பா

மேலும் அன்றைய தினம் எடியூரப்பா யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் கிரகணம் முடிந்ததும், தனது அறையிலிருந்து வெளியே வந்து பூஜை செய்து வழிபட்டுள்ளார். அதேபோல் சூரிய கிரகணத்திற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை கேரளாவின் கண்ணூர் மடாயாகாவில் உள்ள திருவார்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்துள்ளார்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டுள்ள தடையை நீக்கவும், தனது அதிகாரத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சிக்கலைத் தீர்க்கவே இந்த ஸ்பெஷல் பூஜை செய்யப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கர்நாடக ஊடகங்களில் பேசியுள்ளனர்.

எடி 4.0... இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார் எடியூரப்பா?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் அன்றைய தினத்தில் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. நியூமராலாஜிஸ்ட் ஆலோசனைப்படி புதிய பார்ச்சுனர் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்த வாகனம் டிசம்பர் 15 அன்று கர்நாடகாவின் தலைமைச் செயலாளர் பெயரில் வாங்கப்பட்டது என்றாலும் சூரிய கிரகணத்தன்று அந்த காருக்கு பூஜை செய்யப்பட்டுள்ளது. அதுவும் அந்த காருக்கு நியூமராலாஜிஸ்ட் ஆலோசனைப்படி KA03 GA 4545 பதிவு எண் பெறப்பட்டுள்ளது.

கார்
கார்

எடியூரப்பாவின் அதிர்ஷ்ட எண்ணான 9 கூட்டுத்தொகையில் வரும்படி இந்தப் பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று முறையும் எடியூரப்பா முதல்வர் பதவியை முழுமையாக ஆளவில்லை. அதனால் இந்தமுறை எப்படியும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று எப்போதும் கோயிலுக்குச் சென்ற வண்ணமாகவே இருக்கிறாராம் எடியூரப்பா.

news and photo credit - bangaloremirror

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு