Published:Updated:

தொடங்கியது `பஞ்சரத்தின ரத யாத்திரை’: ஆட்சிக்கட்டிலில் அமரவைக்குமா குமாரசாமியின் மாஸ்டர் பிளான்?!

குமாரசாமி

யாத்திரையின்போதே ஒக்கலிகா சமூகத் தலைவர்கள், அந்தச் சமூக மக்கள், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்களின் வாக்குக்களைப் பெற வியூகம் வகுத்திருப்பதாக, ஜனதா தளம் (எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடங்கியது `பஞ்சரத்தின ரத யாத்திரை’: ஆட்சிக்கட்டிலில் அமரவைக்குமா குமாரசாமியின் மாஸ்டர் பிளான்?!

யாத்திரையின்போதே ஒக்கலிகா சமூகத் தலைவர்கள், அந்தச் சமூக மக்கள், குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்களின் வாக்குக்களைப் பெற வியூகம் வகுத்திருப்பதாக, ஜனதா தளம் (எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
குமாரசாமி

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

ஒரு புறம் பா.ஜ.க-வினர், கெம்பேகவுடா சிலையைவைத்து ஒக்கலிகா சாதி ஓட்டுகளைப் பெறவும், லிங்காயத்து சாதியினரை சந்தித்து ஆதரவு திரட்டவும், பட்டியலின மக்களின் ஆதரவைப் பெறவும் பல வகைகளில் ‘மாஸ்டர் பிளான்’களை வகுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். மறுபுறம் காங்கிரஸ் கட்சியினரோ, தாங்கள் ஆட்சி செய்த காலத்தில் செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கர்நாடக பா.ஜ கட்சியினரின் ஊழல்களை ‘லிட்ஸ்’ -ஆகத் தொகுத்து, அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி ஓட்டுகளைப் பெற, தினமும் மக்களின் கவனம் தங்கள் மீதே இருக்க வேண்டுமென தீவிரமாகக் களப்பணி செய்கின்றனர். மறுபுறமோ ஜனதா தளம் (எஸ்) கட்சியினர், இரு கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் நடந்த, நடக்கின்ற ஊழல்களை மையப்படுத்தி, தேர்தலில் வெற்றிபெற காய்நகர்த்திவருகின்றனர்.

கர்நாடகா முழுவதிலும் யாத்திரை குறித்து விளம்பரம்.
கர்நாடகா முழுவதிலும் யாத்திரை குறித்து விளம்பரம்.

பஞ்சரத்தின ரத யாத்திரை!

அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம், தேர்தலுக்கான வாக்குறுதிகள் எதைச் சார்ந்து இருக்கும் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி ஓட்டுகளை பெற, ஜனதா தளம் (எஸ்) கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ‘பஞ்சரத்னா ரத யாத்திரை’-யை இன்று (18–ம் தேதி) காலை தொடங்கினார்.

தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கும் குமாரசாமி.
தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கும் குமாரசாமி.

முன்னதாக தனது தந்தையான முன்னாள் பிரதமர் தேவ கவுடாவிடம் ஆசீர்வாதம் பெற்று, மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஆதரவாளர்களுடன் யாத்திரையைத் தொடங்கினார்.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த குமாரசாமி.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த குமாரசாமி.

கோலார் முல்பகல் தாலுகாவில் தொடங்கிய இந்த யாத்திரை, இரண்டு கட்டங்களாக, மொத்தமுள்ள, 224 சட்டசபைத் தொகுதிகளில், 126-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ‘கவர்’ செய்து வாக்குவங்கியை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். இந்த யாத்திரையைத் தேர்தல் வரையில் கொண்டு சென்று, தேர்தலுக்கான வலுவான தளத்தை கட்டமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

ஐந்து வாக்குறுதிகளை முன்னிறுத்தி..!

‘இலவசக் கல்வி, தரமான இலவச மருத்துவம், விவசாயிகளுக்கான மேம்பாட்டு திட்டங்கள், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் வீடு’ என்பதை முன்னிறுத்தி யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். யாத்திரையின்போதே ஒக்கலிகா சமூகத் தலைவர்கள், அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், குறிப்பாக பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குக்களைப் பெற அவர் வியூகம் வகுத்திருப்பதாக, ஜனதா தளம் (எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடங்கியது `பஞ்சரத்தின ரத யாத்திரை’: ஆட்சிக்கட்டிலில் அமரவைக்குமா குமாரசாமியின் மாஸ்டர் பிளான்?!

ஒரு புறம் நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி ‘ஜோடோ யாத்திரை’ நடத்துகிறார், மறுபுறம் ‘பஞ்சரத்தின ரத யாத்திரை’ தொடங்கப்பட்டிருக்கிறது; பா.ஜ.க –வினரோ சிலைகள் திறப்பிலும், சமூகத் தலைவர்கள் மற்றும் மத குருக்கள் வாயிலாக ஓட்டுகளைப் பெறுவதிலும் மும்முரமாக உள்ளனர். யாத்திரைகள் எந்த அளவுக்கு பலன் அளிக்குமென்ற கேள்விக்கு தேர்தலின் ‘ரிசல்ட்’ தான் பதில். எனினும், இந்த யாத்திரைகள், பா.ஜ.கட்சியினருக்கு தேர்தலில் தலைவலியையும், களத்தில் ‘டஃப் பைட்’ சூழலையும் உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.