Published:Updated:

`டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?'- சிபிஐ விசாரணை கோரும் கார்த்தி சிதம்பரம்

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டு வழக்கில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டுமென கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்திய குருப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

TNPSC
TNPSC
representational image

அதிகாரிகளும் இடைத்தரகர்களும் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். இன்னும் பெருமளவில் பலர் சிக்குவார்கள் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான முறைகேட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்று சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும் தற்போதைய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளிடம், ``அரசு வேலை கிடைத்துவிடும் எனப் பல லட்ச நபர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நம்பிக்கையாகத் தேர்வு எழுதுகின்றனர்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு பெரிய அளவில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்று சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள குறைகளை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நிவர்த்தி செய்யும் என்று நினைத்தேன். ஆனால், பெரிய ஏமாற்றம்தான் அளித்தது. இன்னும் வருங்காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலையும் வாய்ப்பும் சம்பளமும் குறையும்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இதனால் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கீழடியைத் திட்டமிட்டு மறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கீழடிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ்நாட்டின் காமெடி ஹீரோ டாடி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு