Published:Updated:

'பூரண மதுவிலக்கு தோல்வியில் தான் முடியும்!' -கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடிவிட்டால் பிரச்னைகள் முடிந்திவிடும் என்று எண்ணுவது தவறு, என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

'பூரண மதுவிலக்கு தோல்வியில் தான் முடியும்!' -கார்த்தி சிதம்பரம்

டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடிவிட்டால் பிரச்னைகள் முடிந்திவிடும் என்று எண்ணுவது தவறு, என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

கொரோனா பாதிப்பு நாடு முழுதும் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அன்னதான நிகழ்ச்சி நடத்தியது.

 கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இதனை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "பூரண மது விலக்கு என்பது உலகம் முழுவதும் தோல்வியடைந்த ஒன்று. என்னை பொறுத்தவரை பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை என்று தான் சொல்வேன். மதுபானங்கள் கெடுதலை உருவாக்கும். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முழுமையாக டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் வேறு விதமான குற்றச்சம்பவங்கள் நடைபெறும். கள்ளச்சாரயம், மாஃபியாக்கள் உள்ளிட்டவை அதிகரித்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

45 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு திடீர் என்று திறந்தால் கூட்டம் அதிகரிக்க தான் செய்யும். அதனால் தான் தற்போது நீதிமன்றம் வழிமுறைகளை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட நேரம், ஆவணங்கள் கொண்டுவருவது என்ற கட்டுப்பாடுகளுடன் திறந்திருக்கலாம். இப்படி மொத்தமாக அடைத்துவிட்டு திறந்ததால் தான் கூட்டம் அதிகரித்துவிட்டது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
சாய்தர்மராஜ்

இதே போல் சென்னையில் ஊரடங்கிற்குள் ’ஒரு ஊரடங்கு” வைத்ததால் தான் கோயம்பேட்டில் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவியது. தினமும் திறந்து வைத்து நேர கட்டுப்பாடுகள் வைத்திருந்தால் மக்கள் குவிந்திருக்க மாட்டார்கள். கொரோனா டெஸ்ட் நிறைய நபர்களுக்கு செய்யவில்லை. அதனால் தான் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறைய நபர்களுக்கு பரிசோதனை செய்யும் போது பல நபர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவரும். பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கு 7500 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க வேண்டும். 1000 ரூபாய் கொடுப்பது போதாது. கடன் தொல்லையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

karti chithambaram
karti chithambaram

அதனால் தற்போது சில மாதங்களுக்கு மக்கள் பணம் முழுமையாக கட்ட வேண்டாம் என அறிவிக்க வேண்டும். கொரோனா முடிந்த பின் கட்டாத பணத்தை சேர்த்து கட்ட வேண்டும் என்றால், அது சரியாக வராது. அதில் எந்த பலனும் இல்லை. எனவே மத்திய மாநில அரசுகள் இது போன்ற முடிவுகளை மக்களுக்கு சாதகமாக எடுக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism