Published:Updated:

``அம்மா நூறாண்டுகள் என்றார்... ஆறாண்டுகளிலேயே பாழாக்கிவிட்டனர்” - கடுகடுக்கும் கருணாஸ்

கருணாஸ்

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவரும் கருணாஸிடம் சமீபகால தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் பற்றிச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``அம்மா நூறாண்டுகள் என்றார்... ஆறாண்டுகளிலேயே பாழாக்கிவிட்டனர்” - கடுகடுக்கும் கருணாஸ்

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவரும் கருணாஸிடம் சமீபகால தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் பற்றிச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:
கருணாஸ்

``நீங்கள் நடிப்பு, இயக்கம் என சினிமாவில் பிஸியாகிவிட்டீர்கள்... உங்களின் கட்சி எந்த நிலையில் இருக்கிறது?”

கருணாஸ்
கருணாஸ்

``கட்சி அதுபாட்டுக்குச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 30 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிவருகிறார்கள். சில கட்சிகளைப்போல நான் மட்டுமே எனது கட்சி என்ற சூழ்நிலை இங்கில்லை. நான் இல்லாவிட்டாலும் கட்சியை வழிநடத்த ஆட்கள் இருக்கிறார்கள். கல்வி உதவி, மருத்துவ உதவி என முடிந்தவற்றைச் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அரசியலை நான் தொழிலாகச் செய்யவில்லை. எனது தொழில் சினிமா மட்டுமே.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இனி அ.தி.மு.க-வின் நிலை என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?”

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``அம்மா தனக்குப் பிறகும் நூறாண்டுகள் கட்சி இருக்க வேண்டும் என்றார். ஆறாண்டுகளிலேயே பாழாக்கிவிட்டனர். அம்மா இருந்தவரை, அவரின் ஆட்சி இருந்தவரை, அவர் கொடுத்த சீட்டுக்காக விசுவாசமாக இருந்துவிட்டேன். இனி அனைவரும் இணைந்தாலும், இணையாவிட்டாலும் எனக்கென்ன வந்தது?”

``திரைத்துறையில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது உண்மைதானா?”

உதயநிதி
உதயநிதி

``பணம் இருப்பவர்கள் படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள். இதனால் சினிமாத்துறைக்கு வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது போகப் போகத்தான் தெரியும். எதிர்த்து கேள்வி கேட்கவும் ஆளில்லை. உங்களுக்கு என்ன பிரச்னை... நாளை தியேட்டர்களைக்கூட விலைக்கு வாங்குவார்கள். யாராவது எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா?”

``ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை தேசியக்கொடியை ஏற்றவும் விடுவதில்லை, சக கவுன்சிலர்களே அவர்களைப் புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?”

ஒடுக்குறாங்க... மிரட்டுறாங்க...
ஒடுக்குறாங்க... மிரட்டுறாங்க...

``சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர்களின் நிலை, அதுவும் பதவியில் இருப்பவர்களின் நிலையே இப்படியிருக்கிறது என்றால், எஸ்.சி/எஸ்.டி ஆணையம் என்ன செய்துகொண்டிருக்கிறது... அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது... இந்த அரசுதான் சமூகநீதியைக் காக்கும் அரசா?

கூட்டணியில் இருக்கும் வி.சி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகலெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை... அந்தக் கட்சியினர் மக்களுக்கானவர்களா, தி.மு.க-வுக்கானவர்களா... கடந்த ஆட்சியில் எத்தனை முறை போராட்டங்கள், ஸ்ட்ரைக் நடத்தினார்கள், இன்று ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.”

“ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

``பா.ஜ.க-வின் முகவர்தான் ஆளுநர். அரசு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவருக்கு மறுபடியும் பதவி கொடுப்பதிலேயே உள்நோக்கம் இருக்கிறது. அப்படிப் பொறுப்புக்கு வருபவர்கள் முகவர் வேலையைத்தான் செய்வார்கள்.”