Published:Updated:

கரூர் : தி.மு.க வில் இணைந்த அ.தி.மு.க நிர்வாகிகள்; வொர்க் அவுட் ஆனதா செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்?!

தி.மு.க வுக்கு தாவிய அ.தி.மு.கவினர்
தி.மு.க வுக்கு தாவிய அ.தி.மு.கவினர்

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் முழுக்க அ.தி.மு.க-தான் கோலோச்சியிருந்தது. அதை மனதில் வைத்திருந்த செந்தில் பாலாஜி, இப்போது அ.தி.மு.க வசம் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில்; பதவிகளில் இருக்கும் புள்ளிகளை ஒவ்வொருவராக தி.மு.க-வுக்கு இழுக்க 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடவூர் அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் தலைமையில், 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் என 40 பேர்களை ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைத்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினருக்கு 'ஷாக்' கொடுத்தியிருக்கிறார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுவும், கடவூர் ஒன்றியத்தில் உள்ள 10 அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் கூண்டோடு தி.மு.கவுக்கு தாவியிருப்பது, அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தி.மு.க வுக்கு தாவிய அ.தி.மு.கவினர்
தி.மு.க வுக்கு தாவிய அ.தி.மு.கவினர்
கரூர்: `கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தவே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது!' - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான செந்தில் பாலாஜிக்கு, கொங்கு மண்டலத்தில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ அளவிலான ஆட்களை தி.மு.கவுக்கு 'தூக்கும்' அசைன்மெண்டை தி.மு.க தலைமை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் ஒன்றிய அ.தி.மு.க-வையே கலைத்து, தி.மு.கவில் இணைத்திருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம். கடவூர் ஒன்றிய சேர்மனாகவும், அ.தி.மு.க கடவூர் ஒன்றியச் செயலாளராகவும் இருப்பவர் செல்வராஜ். இவர், கடவூர் ஒன்றிய சேர்மனாக இரண்டாவது முறையாக பதவி வகிக்கிறார். இவரது மனைவி ஒருமுறை ஒன்றியக்குழு தலைவராக பதவி வகித்துள்ளார்.

தி.மு.க தாவிய அ.தி.மு.கவினர்
தி.மு.க தாவிய அ.தி.மு.கவினர்

இந்த நிலையில், இவர் தலைமையில் கடவூர் ஒன்றிக்குழுவைச் சேர்ந்த 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கரூர் மாவட்ட அளவில் உள்ள 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள், இதரப் பகுதிகளில் உள்ள இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள அ.தி.மு.கவினர் என 40 க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து, அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். இந்த 'மெகா இணைப்பு மேளா'வை சத்தமில்லாமல், செந்தில் பாலாஜி அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து நம்மிடம் பேசிய சிலர்,

"செல்வராஜ் கடவூர் பகுதியில் செல்வாக்கானவர். அவர், கடவூர் ஒன்றியக்குழு தலைவராக உள்ளார். அதோடு, அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார். அவரையும் சேர்த்து கடவூர் ஒன்றியக்குழு அமைப்பில் மொத்தம் 13 அ.தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்கள் இருந்தார்கள். அதில், 10 ஒன்றியக் கவுன்சிலர்கள் தி.மு.கவுக்கு தாவியிருப்பதால், அ.தி.மு.க வசம் இருந்த கடவூர் ஒன்றிக்குழு அமைப்பு அ.தி.மு.கவை விட்டு கைநழுவி போயிருக்கிறது. செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகள் என அனைத்திலும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை வெல்ல வைத்து, தி.மு.க கோட்டையாக கரூரை மாற்றிவிட்டார். ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் முழுக்க அ.தி.மு.க-தான் கோலோச்சியிருந்தது.

தி.மு.க தாவிய அ.தி.மு.கவினர்
தி.மு.க தாவிய அ.தி.மு.கவினர்

அதை மனதில் வைத்திருந்த செந்தில் பாலாஜி, இப்போது அ.தி.மு.க வசம் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளில் இருக்கும் புள்ளிகளை ஒவ்வொருவராக தி.மு.கவுக்கு இழுக்க 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறார். ஆனால், முதல் முயற்சியிலேயே இத்தனை பேரை அவர் இழுத்திருப்பது, அ.தி.மு.கவினருக்கு மட்டுமல்ல, தி.மு.கவினருக்கே அதிர்ச்சியாக உள்ளது. இது இப்படி என்றால், தி.மு.க வுக்கு சென்ற உள்ளாட்சி முக்கிய புள்ளி கட்சி மாறியதற்கு காரணம், அவரின் 'சிலபல லாப கணக்குகள்' தான் என்கிறார்கள். கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில் வேறு பெயர்களில் உள்ளாட்சித்துறைகளில் டெண்டர் எடுத்து, தமிழகம் முழுக்க பணி செய்து வந்தார். அதில் பலகோடி மதிப்பிலான பில்கள் க்ளியர் ஆகாமல் பெண்டிங்கில் உள்ளதாம். அதை 'க்ளியர்' பண்ணதான், இப்போது தி.மு.க ஆட்சி மாறியிருப்பதால் காட்சி மாறி தி.மு.கவுக்கு வந்திருக்கிறார் என்றும் பரவலாக பேசுகிறார்கள்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு