Published:Updated:

`இளம் பெண் தலைவர்'... 2-வது முறையாக கௌரவிக்கப்பட இருக்கும் ஜோதிமணி!

இந்த வருடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இந்தியா சார்பில் அழைத்து, கௌரவித்திருக்கிறது. ஜோதிமணிக்கு இரண்டாவது முறையாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜோதிமணியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி
ஜோதிமணியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி

ஐ.நா சபையின் கீழ் இயங்கும் அமைப்பான விட்டல் வாய்ஸ் என்ற அமெரிக்க அமைப்பு வருடா வருடம் 25 நாடுகளிலிருந்து இளம் பெண் தலைவர்களை அழைத்து, மாநாடு நடத்தும். அந்த வகையில் இந்த வருடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இந்தியா சார்பில் அழைத்து, கௌரவித்திருக்கிறது. ஜோதிமணிக்கு இரண்டாவது முறையாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜோதிமணி
ஜோதிமணி
`என் சொத்து மதிப்பில் ஒரு ரூபாய்கூட கூடாது!'- மக்கள் முன் மீண்டும் ஜோதிமணி உறுதி

ஐ.நா சபையின் கீழ் இயங்கும் அமைப்பான விட்டல் வாய்ஸ் அமைப்பு, வருடா வருடம் முக்கிய நாடுகளிலிருந்து தலா ஒரு பெண் அரசியல் தலைவரை அமெரிக்காவுக்கு அழைத்து, மாநாடு நடத்தும். இந்த அமைப்பில் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களின் மனைவிகள் முக்கிய அங்கம் வகிப்பார்கள்.

ஒரு வாரம் நடக்கும் அந்த மாநாட்டில், உலகம் முழுக்க உள்ள முக்கிய நாடுகளிலிருந்து வருகை தரும் பெண் அரசியல் தலைவர்கள், தங்களது குடும்பப் பின்னணி, அரசியலுக்கு காலடி எடுத்து வைத்த தருணம், அரசியலில் சாதித்த விஷயங்கள், அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள், தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொண்ட தருணங்கள் என்று பல்வேறு விஷயங்களை பரிமாறிக்கொள்வார்கள். பெண் அரசியல் தலைவர்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இது பார்க்கப்படுகிறது.

விட்டல் வாய்சஸ் அமைப்பு
விட்டல் வாய்சஸ் அமைப்பு

அந்த வகையில், இந்தியா சார்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளருமான ஜோதிமணி இந்த ஆண்டு, விட்டல் வாய்ஸ் அமைப்பால் இந்தியா சார்பில் அழைக்கப்பட்டுள்ளார். இது ஜோதிமணிக்கு இரண்டாவது வாய்ப்பாகும். ஏற்கெனவே பதினைந்து வருடங்களுக்கு முன்பு, விட்டல் வாய்ஸ் அமைப்பு நடத்திய மாநாட்டில் இளம் அரசியல் பெண் தலைவராக இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

அதன்மூலமாக, ராகுல் காந்தியின் அறிமுகம் கிடைத்துதான், அரசியல் பாதையில் பீடுநடை போட்டு, இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். இந்த நிலையில், இந்த வருடமும் அந்த அரிய வாய்ப்பு இரண்டாவது முறையாக கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மகாணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 2-ம் தேதி முதல் வரும் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில், தலைமைப் பண்புகள் பற்றி ஜோதிமணி உரையாற்ற இருக்கிறார். அதற்காக, நேற்று இரவு சென்னை விமான நிலைத்திலிருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் சென்றார், ஜோதிமணி.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அவருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சர்வதேச அளவில் `பெண் அரசியல்வாதிகள்' (25 நாடுகளிலிருந்து 25 பெண்கள்) பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்காவுக்குச் செல்லும், நமது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி அவர்கள் வெற்றிமகளாக திரும்ப வேண்டும் என, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து, அன்போடு வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக, அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஜோதிமணி பெற்றிருப்பதால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.