Published:Updated:

தமிழுக்கும் மார்வாரி, போஜ்புரி, ஹரியானி மொழிகளின் நிலைமை ஏற்படுமா?

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

இவற்றுடன் மேலும் பல கேள்விகளுக்கு கழுகார் அளித்த பதில்களை ஜூனியர் விகடன் இதழில்....

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி:

மும்மொழியைப் படிக்க மாணவர்கள் தயாராக இருந்தும், அவர்களின் கருத்தைக் கேட்காமல் அரசியல்வாதிகள் எதிர்ப்பது சரியா?

விருப்பமுள்ள மாணவர்கள் படிப்பதற்கு இப்போதும்கூட தமிழகத்தில் எந்தத் தடையும் இல்லையே... இந்தி உட்பட பல்வேறு மொழிகளைப் படித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் கொண்டுவருவதிலும் தவறில்லை.

ஆனால், 'இந்த மொழியைத்தான் படித்தாக வேண்டும்' என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்தும் வகையில் விதிகள் அமைந்திருப்பதுதான் பிரச்னையே. அதுவும் இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது.

உண்மையிலேயே கல்வியில் மாற்றம் கொண்டுவர விரும்பினால், தேவையற்ற இதுபோன்ற பிரச்னைகளை எதற்காக 'இடைச்செருகல்' செய்ய வேண்டும்?

'எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள்' என்று சொல்லி பிரச்னையைத் திசைதிருப்பும் வேலையும் நடக்கிறது. இது, அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரத்துத் தேவையாக இருக்கலாம். ஆனால் மொழியியல் வல்லுநர்கள், மொழி ஆர்வலர்கள், கல்வியாளர்களுக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

'வடநாட்டில் இந்தியைத் தூக்கிப் பிடித்ததால், வெளியில் தெரியாமலேயே புதைந்துகொண்டிருக்கும் ராஜஸ்தானி, மார்வாரி, போஜ்புரி, ஹரியானி போன்ற பல மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடக் கூடாது' என்பது மட்டுமே அவர்களுடைய கவலை.

எனவே, இத்தகையோரின் பலமான எதிர்க்குரல்களுக்கு மதிப்பளித்து, பிரச்னையின் ஆழத்தை அறிந்து, உரிய வகையில் தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் கடமையே.

@சாந்தி மணாளன், கருவூர்:

'காங்கிரஸுக்கு மதச்சார்பின்மையில் தெளிவான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தால், நாட்டுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது' என்று கூறியுள்ளாரே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான கேரள முதல்வர் பினராயி விஜயன்?

இவர்களுக்கு கம்யூனிசத்தில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்திருந்தால், இந்தியாவில் காங்கிரஸே இருந்திருக்காதே!

> 'அ.தி.மு.க கொடியிலிருந்து அண்ணாதுரை படத்தை நீக்க வேண்டும்' என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறாரே?

> 'அப்ளை செய்தவர்களுக்கெல்லாம் இ-பாஸ் வழங்க வேண்டும் என்று சட்டம் இல்லை' என்கிறாரே அமைச்சர் வீரமணி?

> மதங்களைத் தோற்றுவித்த நாயகர்கள் இப்போது உயிர்த்தெழுந்தால், மதங்களின் இன்றைய நிலை குறித்து என்ன நினைப்பர்?

> 'முழுக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை பாயும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளதே?

- இவற்றுடன் மேலும் பல கேள்விகளுக்கு கழுகார் அளித்த பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31HdczL > கழுகார் பதில்கள் https://bit.ly/31HdczL

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு