Published:Updated:

பொன்.ராதாகிருஷ்ணன் அப்செட்; ப. சிதம்பரத்தை `தவிர்க்கும்' சோனியா ராகுல்!?

ஆமாம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் சமீபத்தில் ரகசியக் கூட்டம் போட்டிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"பா.ஜ.க-வில் அண்ணாமலை மீது அவர் கட்சியினரே கடுப்பில் இருக்கிறார்களாமே?" என்றோம் கழுகாரிடம்.

"பா.ஜ.க-வில் ஏற்கெனவே சக்ரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்ட பத்து பேர் மாநிலத் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் போதாதென்று, அண்ணாமலையையும் துணைத் தலைவராக்கிவிட்டது கட்சித் தலைமை. இதைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மற்ற கட்சி நிர்வாகிகளிடம் புகைச்சல் எழுந்திருக்கிறது.

இப்படித்தான், கோவையில் மோடி பிறந்தநாளுக்கு நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றில், அண்ணாமலையின் படத்தைப் போட்டுவிட்டு, சீனியரான கனகசபாபதியின் படத்தைப் போடவில்லையாம். இதுதான் கட்சியினரின் கடுப்புக்குக் காரணம்."

"பொன்.ராதாகிருஷ்ணனும் அப்செட்டாமே?"

"ஆமாம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் சமீபத்தில் ரகசியக் கூட்டம் போட்டிருக்கிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், 'நம்மை பா.ஜ.க-வைக் காட்டி பயமுறுத்தியே ஓட்டு வாங்குகிறார்கள். பிறகு யாரும் கண்டுகொள்வ தில்லை. இந்த முறை கன்னியாகுமரி எம்.பி இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஒரு மீனவரை வேட்பாளராக நிறுத்தினால்தான் அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம்' என முடிவெடுத்துள்ளனராம்.

இது தொடர்பாக பா.ஜ.க மேலிடத்துக்கும் அவர்கள் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை, இவர்களின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றுக்கொண்டால் திருத்தமிழ் தேவனார், புதூர் கண்ணன், தூத்தூர் எட்வின் ஜெரோம், குறும்பனை டிக்சன், ராமன்துறை ரீகன் என மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமாம். பொன்.ராதாவுக்கு சீட் கிடைக்காது. இதனாலேயே, அவர் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்."

"ம்..."

"முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ வாழ்த்துச் சொல்லவில்லையாம். அதேநேரம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் சட்டமன்ற பொன்விழாவையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ராகுல்.

'சமீபத்தில், காங்கிரஸில் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு கடிதத்தின் பின்னணியில் ப.சிதம்பரம் இருப்பதாகத் தலைமை கருதுகிறது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் வாழ்த்துச் சொல்லவில்லை' என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம். இதனால் மனம் நொந்தவர், காரைக்குடி அருகே மானகிரியிலுள்ள தனது இல்லத்தில் முடங்கிவிட்டாராம்."

> தி.மு.க., அ.தி.மு.க முகாம்களில் நடப்பவை தொடர்பான அப்டேட்களுடன் கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் அனைத்தையும் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mNH1Z1 > மிஸ்டர் கழுகு: உதயநிதிக்கு 'அன்பில்' அர்ச்சனை! https://bit.ly/3mNH1Z1

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு