Published:Updated:

கழுகார் பதில்கள்

மேற்கு வங்க ஆளுநர் - முதல்வர்
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு வங்க ஆளுநர் - முதல்வர்

நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறீர்கள் என்றாலும், இந்தச் சிந்தனையே தவறு.

கழுகார் பதில்கள்

நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறீர்கள் என்றாலும், இந்தச் சிந்தனையே தவறு.

Published:Updated:
மேற்கு வங்க ஆளுநர் - முதல்வர்
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு வங்க ஆளுநர் - முதல்வர்

சௌந்தர், அரியலூர்.

அரசியல் சண்டை எந்த அளவுக்குப் போகும்?

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்குமான மோதல் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக அந்த மாநிலச் சட்டப்பேரவை நள்ளிரவு 2 மணிக்குக் கூடவிருப்பதாகச் சொல்கிறார்கள். சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அழைப்பை, அந்த மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பும்போது தவறுதலாக `March 7, 2 PM’ என்பதற்கு பதில், தவறுதலாக `2 AM’ என்று தட்டச்சு செய்து அனுப்பிவிட்டது மாநில அரசு. விடுவாரா ஆளுநர்... அதன் பிறகு தலைமைச் செயலாளர் அந்தத் தவற்றைக் குறிப்பிட்டு மீண்டுமொரு கடிதம் அனுப்பியும், “அதெல்லாம் முடியாது. நள்ளிரவு 2 மணிக்குச் சட்டசபை கூடட்டும்” என்று ட்வீட் தட்டியிருக்கிறார். ஆளுநர் தரப்பிலிருந்து எழுத்துபூர்வமாக தலைமைச் செயலரிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆளுநர் தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் அடம்பிடித்தால், ஆளுநர் உரையுடன் நள்ளிரவு 2 மணிக்குக் கூடவிருக்கிறது மேற்கு வங்க சட்டசபை!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஒரு நடிகர் அதிக ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது... ஓர் அரசியல்வாதி அதிக மக்களின் இதயத்தில் இடம்பிடிப்பது... எது கஷ்டம்?

இரண்டிலும் கஷ்ட நஷ்டங்கள் உள்ளன. ஆனாலும், அதிக கஷ்டம் அரசியல்வாதிக்குத்தான்!

மாணிக்கம், திருப்பூர்.

கழுகார் சமீபத்தில் பார்த்து ரசித்த வெப் சீரீஸ்?

21 மாநகராட்சிகளுக்கான ‘மேயர் ரேஸ்.’ சீரீஸ் அல்ல. கொஞ்சம் சீரியஸ்!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்.

விலைவாசி இவ்வளவு உயர்ந்த பிறகும் ஓட்டுக்கு 300, 500 எல்லாம் கொடுப்பது சரியா... நீங்களே சொல்லுங்கள்?

நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறீர்கள் என்றாலும், இந்தச் சிந்தனையே தவறு. இந்தச் சிந்தனைக்கு நீரூற்றித்தான் அரசியல்வாதிகள் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

கொங்கு மண்டலத்தை ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க-விடமிருந்து தட்டிப்பறிக்கக் காரணமான செந்தில் பாலாஜிக்கு, தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்குவாரா?

நல்ல கேள்வி இம்மானுவேல். அரசியலுக்கு வருவதற்கான தகுதி உங்களுக்கு வந்துவிட்டது. வெல்கம்!

மாணிக்கம், திருப்பூர்.

தற்போது தமிழ்த் திரைப்படப் பாடல்களில் கொண்டாட்டப் பாடல்கள் அதிகமாக வரும் போக்கு ஆரோக்கியமானதா?

ஏகப்பட்ட பிரச்னைகளில் திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு கொண்டாட்டப் பாடல்களாவது ஆறுதல் தரட்டுமே!

கழுகார் பதில்கள்

சண்முக சுந்தரம், குன்னத்தூர்.

“காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும்” என்றிருக்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி?

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், இதைக் கூடச் சொல்லக் கூடாது என்றால் எப்படி?

கழுகார் பதில்கள்

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

இ.பி.எஸ்., ஒ.பி.எஸ் எதை உணர வேண்டும்?

‘நெருக்கமாக இருக்கும் இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இடைவெளி வந்தால், மூன்றாவது நபர் லாபம் அடைகிறார்’ என்கிற பழமொழியை!

கழுகார் பதில்கள்

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

கமலும் சீமானும் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்?

‘ஆசை வந்து என்னை ஆட்டிவைத்த பாவம்... மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்’னு கோரஸா பாடுவாங்களோ!?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!