Published:Updated:

கழுகார் பதில்கள்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

முதிர்ச்சியற்ற பேச்சு. உணர்ச்சிகரமாகவும் தடாலடியாகவும் பேசினால் எடுபடும் என்று நினைக்கிறார்போல

கழுகார் பதில்கள்!

முதிர்ச்சியற்ற பேச்சு. உணர்ச்சிகரமாகவும் தடாலடியாகவும் பேசினால் எடுபடும் என்று நினைக்கிறார்போல

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

“அ.தி.மு.க-விடம் பிச்சையெடுத்து வாங்கிய 20 தொகுதிகளில், பா.ஜ.க ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாது” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறாரே?

நல்ல சகுனம்!

கழுகார் பதில்கள்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

தேர்தல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் என்ன நினைப்பார்?

“நல்லவேளை... நான் பிழைத்துக்கொண் டேன்”ங்கற பாட்டைத்தான் இப்பல்லாம் ரஜினி அடிக்கடி முணுமுணுக்கிறாராம்!

கழுகார் பதில்கள்!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

தே.மு.தி.க-வின் தனித்தன்மை என்னவென்று நினைக்கிறீர்கள்?ஒரே நேரத்தில் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தும் சாதுர்யமும், மீசையில் மண் ஒட்டாத மாதிரியே நடிப்பதும்தான்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக வாக்காளர்களின் வாக்குகள் சில்லறைபோலச் சிதறுவதாகத் தெரிகிறதே கழுகாரே?

சில்லறைகள் சிதறுவதைத் தடுக்கத்தானே நோட்டுகள் பெரிய அளவில் பறக்கவிடப் படுகின்றன!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

``எங்கள் திட்டம் கசிகிறது, ஸ்டாலினுக்குத் தெரிகிறது’’ என முதல்வராக இருக்கும் எடப்பாடியாரே கூறுவது எதைக் காட்டுகிறது?

`சிறந்த நிர்வாகி’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட எடப்பாடியே இப்படி ஒப்புக்கொள்வது, நல்ல சுயவிமர்சனமாகத்தான் இருக்கிறது!

இரா.கோதண்டராமன், சென்னை.

விஜயபிரபாகரன் தற்போது ஏன் மேடைகளில் இப்படிப் பேசுகிறார்?

முதிர்ச்சியற்ற பேச்சு. உணர்ச்சிகரமாகவும் தடாலடியாகவும் பேசினால் எடுபடும் என்று நினைக்கிறார்போல... பாவம். மக்கள் எவ்வளவு பேரைப் பார்த்துவிட்டார்கள்!?

ராஜ்குமார், திருச்சி.

இன்றைய சூழலில் ஓவர் கான்ஃபிடென்ட்டாக இருப்பது ஸ்டாலினா, எடப்பாடியா, கமலா?

கருணாஸையும் சரத்குமாரையும் விட்டுட்டீங்களே பாஸ்!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

அடுக்கு மொழிகளால் அரசியல் நடத்தியவர்கள் செட்டிங்ஸ் போட்டு அரசியல் செய்கிறார்களே?

யாருக்கு எது வருமோ அதைத்தானே செய்ய முடியும்?

ராமானுஜன், கொடிவேரி.

1,000... 1,500 என்று அள்ளி விடுகிறார்களே... நடைமுறையில் சாத்தியமா?

இது என்ன சின்னப்புள்ளத்தனமா ஆயிரம், ஆயிரத்து ஐநூறுனு சொல்லிக்கிட்டு... நாமல்லாம் 15 லட்சம்னு சொன்னவங்களையே பாத்தவங்களாச்சே!

குருபரன் சண்முகராஜன், களக்காடு.

சினிமாவில் குறியீடுகள் இருப்பதுபோல அரசியலில் குறியீடுகள் உண்டா?

`குஷ்புவுக்கு சீட் கிடைக்காது’ என்ற தகவல் பரவத் தொடங்கிய நேரத்தில், குஷ்பு இந்த ட்வீட்டைப் பதிவுசெய்தார்.

கழுகார் பதில்கள்!

@P.அசோகன், கொளப்பலூர்.

என்னங்க சார், மீண்டும் கொரோனாவாமே?

மீண்டுமா? போனாதானே மீண்டும் வருவதற்கு... அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டுதான் இருக்கு. நாமதான் பாத்து பத்திரமா இருந்துக்கணும்!

@சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

எந்தக் கூட்டணியில் ‘கெமிஸ்ட்ரி’ அதிகமாக இருக்கும்?

எந்தக் கூட்டணியில் ‘ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட்’ அதிகமாக இருக்கிறதோ அந்தக் கூட்டணியில் `கெமிஸ்ட்ரி’ அதிகமாக இருக்கும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தற்போதைய தமிழக அரசின் கடன், பெரிய விஷயமே இல்லை என்கிறாரே அர்ஜுனமூர்த்தி?

அதானே... அவருக்கு அதைப் பற்றி என்ன கவலை இருக்கப்போகிறது?!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

மதுவிலக்கு என்பது இந்தத் தேர்தலில் இதுவரை பேசுபொருளாகவே இல்லையே... மதுவோடும் மதுவின் கொடுமையோடும் வாழப் பழகிக்கொண்டுவிட்டோம் என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்களா?

வழக்கமாக ‘மதுவிலக்கு அமல்படுத்தும் கட்சியுடன்தான் கூட்டணி’ என்று சொல்லும் ராமதாஸும் சொல்லவில்லை. ஒருவேளை இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்களும் சாராய ஆலைகள் நடத்தும்போது அதைப் பேசி பிரயோஜனமில்லை என்று விட்டுவிட்டார்களோ!

@நெல்லிமுர்த்தி, சவுதி அரேபியா.

ச.ம.க-வுக்கும், ஐ.ஜெ.கே-வுக்கும் தலா 40 தொகுதிகளை வழங்கிய ம.நீ.ம-வின் தாராள குணம் குறித்துத் தங்களின் கருத்து என்ன?

234 வேட்பாளர்களுக்கு கமல் எங்கே போவார் பாவம்... தானாக வந்தவர்களுக்கு தாராளமாகக் கொடுத்துவிட்டார்!

கழுகார் பதில்கள்!

கார்த்திக் சுந்தரம், மேட்டுப்பாளையம்.

நடிகர் செந்தில் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரே..?

பிராஞ்ச் ஆபீஸ்ல வேலை செஞ்சவரு, இப்ப ஹெட் ஆபீஸுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்காரு... அவ்வளவுதானே பாஸ்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism