Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

இந்தியா ஓர் ஏழை நாடு’ என்று சொல்பவர்கள் தேர்தல் காலத்தில் நம் நாட்டைச் சுற்றிவந்தால், தாங்கள் நினைப்பது தவறு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கழுகார் பதில்கள்

இந்தியா ஓர் ஏழை நாடு’ என்று சொல்பவர்கள் தேர்தல் காலத்தில் நம் நாட்டைச் சுற்றிவந்தால், தாங்கள் நினைப்பது தவறு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

அ.யாழினி பர்வதம், சென்னை-78

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷனுக்கு எதிராகப் பிரசாரம் செய்து ஜெயித்த தி.மு.க., எதிர்க்கட்சி கவுன்சிலர்களை விலை கொடுத்து வாங்கியதை எதில் சேர்ப்பது?

அரசியல் அறமற்ற செயல்களின் பட்டியலில்தான்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

`முதல்வன்’ படத்தை ரீமேக் செய்தால், ஒரு நாள் முதல்வராக நடிக்கப் பொருத்தமானவர் ஓ.பி.எஸ்-ஸா? இ.பி.எஸ்-ஸா?

அப்போ... அன்புமணி, சீமான், கமல்ஹாசனுக்கெல்லாம் முதல்வரா நடிக்க வாய்ப்பு தர மாட்டீங்களா..? போங்க பாஸ்!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்.

எந்தவொரு பதவி வகித்தாலும், நாற்காலியில் அமர்வதற்கு முன்பு மனதில்கொள்ள வேண்டிய முதல் விஷயம்?

இந்த நாற்காலியும், இதன் பின்னுள்ள அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்யத்தான். மேலும் இது நிரந்தரமானது அல்ல என்கிற புரிதல்!

கழுகார் பதில்கள்

சௌந்தர், அரியலூர்.

ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பணம் விளையாடியதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு முடிவே இல்லையா?

‘இந்தியா ஓர் ஏழை நாடு’ என்று சொல்பவர்கள் தேர்தல் காலத்தில் நம் நாட்டைச் சுற்றிவந்தால், தாங்கள் நினைப்பது தவறு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்காகவும், வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கவும் பணத்தைத் தண்ணீராக இறைக்கும் காட்சிகளைக் கண்டால் ‘ஏழை இந்தியாவில் எங்கிருந்து இத்தனை பணம் வந்தது!’ என்று திகைக்காமல் இருக்க முடியாது! - இவை, 11.11.1979 ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வரிகள். காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், காட்சிகள் மாறியபாடில்லை!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

‘வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூக அமைதியின்மை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பது கிடையாது’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டுவது பற்றி?

பிரதமர் வாய் திறக்காத முக்கியப் பிரச்னைகள் பற்றிய இந்த லிஸ்ட்டுல, இன்னும் பல விஷயங்களைச் சேர்க்கலாம்!

கழுகார் பதில்கள்

மேன்மைக்கோ, ஜமீன் பல்லாவரம்.

மு.க.அழகிரியின் பேச்சையே காணோமே?

சில சமயங்களில் பேசவைக்கச் செலவு செய்யவேண்டியது வரும். சில சமயங்களில் பேசாமலிருக்கச் செய்ய செலவு செய்யவேண்டியது வரும். எதையெதை எப்போது செய்ய வேண்டுமென்று அரசியல் கற்றவர்களுக்குத் தெரியும்தானே!

கழுகார் பதில்கள்

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபரை `சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கிறாரே?

`ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்று ஒரு பழமொழி உண்டே!

மாணிக்கம், திருப்பூர்.

பி.எஃப் வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டார்களே?

நீங்க பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வரும்னுதானே எதிர்பார்த்தீங்க? ‘பிக் பாஸ்’ அரசியலில் இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

கடன் பெறுபவர்கள் வாழ்த்துவது இல்லை. ஆனால், யாசகம் பெறுபவர்கள் வாழ்த்துகிறார்களே... அது ஏன்?

நன்றியின் வெளிப்பாடுதான்! அதிருக்கட்டும்... கடன் பெறுபவர்கள் திருப்பிக் கொடுத்தாலே போதும்.. வாழ்த்தெல்லாம் வேற எதிர்பார்க்கறீங்களா மூர்த்தி!?

சண்முகசுந்தரம், டாடாபாத், கோவை.

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது’ என்ற பழமொழிக்குச் சமீபத்திய அரசியல் உதாரணம்?

இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெரிய கட்சியை மனதில் வைத்துத்தானே இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism