Published:Updated:

அதிகாரமில்லாத அண்ணாமலை முதல் கனிமொழி உத்தரவை நிறைவேற்றிய அமைச்சர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

ஆட்டம்போடும் மண்டல் தலைவர்! | தீர்க்க முடியாமல் திணறும் அமைச்சர்! | கனிமொழி கொடுத்த அசைன்மென்ட்... | கான்ட்ராக்டர் கட்டுப்பாட்டில் நகராட்சி... | சிறையிலிருந்து ‘சித்து’ ஆடும் ஆட்டம்! | கழுகார் அப்டேட்ஸ்

அதிகாரமில்லாத அண்ணாமலை முதல் கனிமொழி உத்தரவை நிறைவேற்றிய அமைச்சர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

ஆட்டம்போடும் மண்டல் தலைவர்! | தீர்க்க முடியாமல் திணறும் அமைச்சர்! | கனிமொழி கொடுத்த அசைன்மென்ட்... | கான்ட்ராக்டர் கட்டுப்பாட்டில் நகராட்சி... | சிறையிலிருந்து ‘சித்து’ ஆடும் ஆட்டம்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
ஆள்பிடிக்கத் தொடங்கிய ஓ.பி.எஸ்...
தடம் மாறக் காத்திருக்கும் மாஜிக்கள்!

எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த பலரும் இப்போது ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாவட்ட நிர்வாகிகளைவிட திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க-வினர்தான் அதிக அளவில் ஓ.பி.எஸ்-ஸைச் சந்திக்க வருகிறார்களாம்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்
ஓ.பன்னீர்செல்வத்துடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்

காரணம் இதுதான்... எதிரும் புதிருமாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோருக்குப் பதவி கொடுத்து இருவருக்குள்ளும் ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டார் எடப்பாடி. ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் இன்னமும் ஒருவரைப் பார்த்து ஒருவர் முகத்தை திரும்பிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதைத் தெரிந்துகொண்டே ஓ.பி.எஸ் தரப்பு கச்சிதமாகக் காய்நகர்த்தியிருக்கிறதாம்.

அதிகாரமில்லாத அண்ணாமலை...
ஆட்டம்போடும் மண்டல் தலைவர்!

பா.ஜ.க நங்கநல்லூர் மண்டல் தலைவரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால், அவரை மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால், ஒரு மாதமாக முயன்றும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘அதெல்லாம் வேண்டாம்... அவர் நல்லாத்தானே வேலை பார்த்துக்கிட்டிருக்கார்’ எனத் தட்டிக் கழித்துவிட்டாராம் மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கேசவ விநாயகம். ‘ஒரு மண்டல் தலைவரை மாற்ற முடியாத அளவுக்குத்தான் அண்ணாமலைக்கு அதிகாரம் இருக்கிறது’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். இதே குற்றச்சாட்டை சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறிய டாக்டர் சரவணனும் சொல்லியிருந்தார்.

“எதிர்க்கட்சி நாங்கதான்...
ஆனா, முதல்வரை எதிர்த்து பேச மாட்டோம்!”

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக நின்று தி.மு.க அரசுக்கு தினமும் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க., புதுச்சேரியில் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறது. ஆறு எம்.எல்.ஏ-க்களுடன் அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் திமு.க., அரசை எதிர்த்து வாயே திறப்பதில்லையாம். அதிலும் முதல்வர் ரங்கசாமி மனம் சஞ்சலப்படும்படி எதுவுமே பேசுவதில்லையாம். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த தி.மு.க பிரதிநிதிகள், தங்களுக்கு வாகன வசதி வேண்டுமென்று கோரிக்கைவைத்தார்கள். அந்தக் கோரிக்கையை உடனே ‘டிக்’ அடித்துவிட்டாராம் முதல்வர் ரங்கசாமி. “என்னடா நடக்குது இங்கே...” என்று இதைக் கூர்ந்து கவனிக்கிறது பா.ஜ.க!

செங்கல்பட்டில் களைகட்டும் தி.மு.க கோஷ்டிப்பூசல்...
தீர்க்க முடியாமல் திணறும் அமைச்சர்!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வின் கணவருக்கு, ‘மலை நகராட்சி’யில் சேர்மன் பதவி தருகிறேன் என்று அமைச்சர் வாக்குறுதி கொடுத்திருந்தாராம். ஆனால், சேர்மன் பதவி வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அமைச்சர்மீது அதிருப்தியிலிருக்கும் எம்.எல்.ஏ-வின் கணவர் முன்புபோல இப்போது கட்சிப் பணிகளுக்கு தாராளமாகப் பணம் செலவழிப்பதில்லையாம்.

அமைச்சர் தரப்புடன் ஒத்துழைக்காமல் தனி கோஷ்டி அரசியல் செய்கிறாராம் அவர். நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகும் இந்த கோஷ்டிப்பூசலைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறராம் அமைச்சர்.

கனிமொழி கொடுத்த அசைன்மென்ட்...
தீயாய் வேலை செய்யும் ஒரே அமைச்சர்!

மகளிர் தினத்தில் தி.மு.க மகளிரணிக்கென தனி இணையதளத்தைத் தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கினார் கனிமொழி எம்.பி. நாளடைவில் அது சுணக்கமடைந்தது.

கனிமொழி
கனிமொழி

தாயாரின் சிகிச்சைக்காக, தற்போது கனிமொழி வெளிநாடு சென்றிருந்தாலும், அவரின் தொகுதியான தூத்துக்குடியில் மட்டும் மும்முரமாக நடக்கிறது உறுப்பினர் சேர்க்கை. அக்காவின் ‘குட்புக்’கில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்க இதுதான் ஒரே வழி என்று அமைச்சர் கீதா ஜீவன் தீயாய் வேலை செய்கிறாராம். மற்ற அமைச்சர்கள் யாருமே இதில் ஆர்வம் காட்டவில்லையாம்!

கான்ட்ராக்டர் கட்டுப்பாட்டில் நகராட்சி...
பரிதவிக்கும் பெண் தலைவர்!

மலை மாவட்டத்திலிருக்கும் ஒரு நகராட்சியில் டெண்டர் எடுப்பதில் தி.மு.க-வைச் சேர்ந்த கான்ட்ராக்டர்களுக்குள் பெரும் களேபரமே நடந்துவருகிறதாம். அதில் ஒரு கான்ட்ராக்டர் நகராட்சிப் பெண் தலைவரைத் தலையாட்டும் பொம்மையாக்கி, தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்திவருகிறாராம். ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சில கவுன்சிலர்கள் போர்க்கொடியை உயர்த்தியிருக்கிறார்கள். அதில் இருவர் தலைவியைக் கடுமையாக விமர்சிக்க, ‘பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னைச் சாதியைச் சொல்லி திட்டினார்கள் அந்த கவுன்சிலர்கள்’ என்று தலைவியைப் போலீஸில் புகார் கொடுக்கவைத்துவிட்டாராம் அந்த கான்ட்ராக்டர்.

குலாம் நபி பாணியில் புதிய கட்சி...
சிறையிலிருந்து ‘சித்து’ ஆடும் ஆட்டம்!

கார் பார்க்கிங் தகராறில் கர்நாம் சிங் என்பவரைத் தாக்கிய வழக்கில், மே மாதத்திலிருந்து சிறையில் இருக்கிறார் நவ்ஜோத் சித்து. தன்னைப் பார்க்க வரும் மனைவியையும் மகளையும் சந்திக்க மறுத்துவரும் அவர், மனீஷ் திவாரி உட்பட ஒரு சிலருடன் மட்டும் தொடர்பில் இருக்கிறாராம்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

காங்கிரஸிலிருந்து விலகியிருக்கும் அவர், சிறையில் இருந்துகொண்டே தனது அரசியல் எதிர்காலம் குறித்து காய்நகர்த்திவருகிறார் என்கிறார்கள். வெளியே வந்ததும், குலாம் நபி ஆசாத் பாணியில் புதிய கட்சியை அறிவிப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.