Election bannerElection banner
Published:Updated:

டாக்டருக்கு அல்வா கொடுக்கும் எடப்பாடி முதல் சசிகலாவின் தாய் வீட்டுச் சீதனம் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

பழனிசாமி - ராமதாஸ் - சசிகலா! -கழுகார் அப்டேட்ஸ்
பழனிசாமி - ராமதாஸ் - சசிகலா! -கழுகார் அப்டேட்ஸ்

“இந்தமுறை செய்திகளில் மன்னார்குடி நெடி சற்றே அதிகம்... தவிர்க்க முடியவில்லை. அரசியல் சூழல் அப்படி!” என்ற குறிப்புடன் மெயில் அனுப்பியிருந்தார் கழுகார்.

தட்சிணாமூர்த்தி ரூட்டை மாற்றியது ஏன்?

ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க முன்னாள் துணைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி. பெங்களூரிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் பயணித்த சசிகலா, தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி அருகே வந்தபோது, தட்சிணாமூர்த்தியின் காருக்கு மாறினார். இதனால் கடுப்பான அ.தி.மு.க மேலிடம், தட்சிணாமூர்த்தியைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டது.

சசிகலா பயணிக்கும் கார்
சசிகலா பயணிக்கும் கார்

‘கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார்’ என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது கடும் அதிருப்தியில் இருந்தாராம் தட்சிணாமூர்த்தி. அத்துடன், செம்மரக்கடத்தல் புள்ளிகளின் கைப்பாவையாக ஆளுங்கட்சிப் புள்ளிகள் மாறிவருகிறார்கள் என்று ஆதாரங்களுடன் கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். இதனால்தான் சசிகலா கோஷ்டியில் தட்சிணாமூர்த்தி ஐக்கியமாகிவிட்டார் என்கிறார்கள்.

தட்சணை எவ்வளவுங்க?

தாய்வீட்டுச் சீதனம்!
காய்நகர்த்தும் எடப்பாடி...

சசிகலாவுக்கு திரண்ட மொத்த கூட்டத்தையும் கணக்கெடுத்தாலும், அவரது பூர்வீக மண்ணான மன்னார்குடியிலிருந்து எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதை ஸ்பெஷலாக கணக்கெடுத்து, மேலிடத்துக்கு நோட் போட்டு அனுப்பியிருக்கிறது உளவுப்பிரிவு. ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதி பாயின்ட்டை மன்னார்குடி தரப்பினருக்கு அ.ம.மு.க மேலிடம் ஒதுக்கியிருந்தது.

டாக்டருக்கு அல்வா கொடுக்கும் எடப்பாடி முதல் சசிகலாவின் தாய் வீட்டுச் சீதனம் வரை! -கழுகார் அப்டேட்ஸ்
எம்.விஜயகுமார்

அங்கு சுமார் 400 வாகனங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் வந்திருந்தது உளவுப்பிரிவினர் கணக்கெடுப்பில் தெரியவந்ததாம். அந்த நள்ளிரவிலும் கூடிய சொந்த மண்ணின் கூட்டத்தைப் பார்த்து, ‘தாய் வீட்டுச் சீதனம்’ என்று சொல்லி நெகிழ்ந்தாராம் சசிகலா. இதையறிந்து, முதற்கட்டமாக மன்னார்குடியிலிருந்து அ.ம.மு.க ஆட்களை ஹைஜாக் செய்யத் திட்டமிட்டிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

கூட்டத்துல பச்சை சொக்கா போட்டிருக்கிறவனை முதல்ல தூக்குங்க!

காரை மாற்றிய ஜெயானந்த்!

சசிகலாவைச் சந்திக்க அவரின் சகோதரர் திவாகரன் பெங்களூரு போகவில்லை. சென்னைக்கும் வரவில்லை. ஆனால், பிப்ரவரி 7-ம் தேதியன்று ஓசூருக்குக் கிளம்பிப் போய் சசிகலா வருகை தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஊர் திரும்பினாராம். அதேநேரம், சசிகலாவுடன் வந்த கார் கான்வாயில் திவாகரனின் மகன் ஜெயானந்த் காரும் வந்துகொண்டிருந்ததாம்.

டாக்டருக்கு அல்வா கொடுக்கும் எடப்பாடி முதல் சசிகலாவின் தாய் வீட்டுச் சீதனம் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கிருஷ்ணகிரி அருகே வரும்போது, பின்னால் வந்த கார் லேசாக மோதியதால் ஜெயானந்தின் காரின் பின்புறத்தில் சிறு சேதம் ஏற்பட்டுவிட்டதாம். அதையடுத்து, அந்த காரைவிட்டு இறங்கி, டி.டி.வி.தினகரன் பயணித்த வேனுக்கு மாறியிருக்கிறார் ஜெயானந்த். கொஞ்ச தூர பயணத்துக்குப் பிறகு, வேறு காரை வரவழைத்து அதற்கு மாறினாராம். அத்தை தமிழகத்துக்குள் வரும் நேரத்தில் பிரியமான கார் சேதமடைந்ததில் சென்டிமென்ட்டாக பதற்றம் அடைந்திருக்கிறாராம் ஜெயானந்த்.

ஜெயானந்த், இப்போ ‘பய’ஆனந்த்!

மான் வேட்டை...
மறைக்கும் நீலகிரி வனத்துறை!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஊருக்குள் நுழையும் யானைகளைக் கண்காணிக்க, சமீபத்தில் வனத்துறையினர் நள்ளிரவு ரோந்து சென்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் தெறித்து ஓடிய ஒரு கும்பலில், இரண்டு பேரை வனத்துறையினர் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்ததில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பாவா மற்றும் அவரின் நண்பர்கள் ஐந்து பேரும் மான் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர்.

சசிகலாவைக் கைதுசெய்யப் பச்சைக்கொடி முதல் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி வரை... கழுகார் அப்டேட்ஸ்!

இந்தக் கும்பல் அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடி, ஆளுங்கட்சி வி.ஐ.பி-க்களுக்கு விருந்து படைத்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. சிறிது நேரத்தில், மேலிடத்திலிருந்து வந்த போன் அழைப்பால், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிடுத்துவிட்டு, ‘இரண்டு மான்கள் சண்டையிட்டே உயிரிழந்துவிட்டன. இறந்த மானின் இறைச்சியை எடுத்து இவர்கள் சமைக்க முயன்றனர்’ என்று ஆளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதாம் வனத்துறை. அந்த மர்ம போன் கால் அழைப்பு யாருடையது என எதிர்கட்சியினர் மோப்பம் பிடித்துவருவதால், நீலகிரியில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

ரேஞ்சர் அய்யா... நேத்து நீங்க சாப்பிட்ட மான் லெக் பீஸ் பிரியாணி அவங்க அனுப்புனதுதான்!

‘டாக்டர்’களுக்கு அல்வா!
எடப்பாடி பலே திட்டம்...

பா.ம.க - அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள், இருதரப்பு விவகாரங்களையும் அறிந்தவர்கள். 32 சீட்களில் விடாப்பிடியாக இருந்த தைலாபுரம் இப்போது, 27 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறதாம். அ.தி.மு.க தரப்பிலிருந்து அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று கூறியிருக்கிறார்களாம்.

எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

இதற்கிடையே பா.ம.க-வின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, அதை அறிவித்துவிட்டு, பின்னர் திரைமறைவில் பலரையும் விட்டு நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கும் பலே திட்டத்தில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. இந்தத் தகவல் தைலாபுரத்துக்கும் செல்ல... டாக்டர்ஸ் கடும் அப்செட்டாம்.

பிள்ளைக்கு ஊசியும் போட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டுறது இதுதானோ!

ஐபேக் பெயரில் சுருட்டல்!
எச்சரித்த அறிவாலயம்...

சமீபகாலமாக ஐபேக் தரப்பிலிருந்து பேசுவதாகச் சொல்லி தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்புகள் வருகின்றனவாம். எதிர்முனையில் பேசுபவர்கள், ‘‘உங்க தொகுதியில இந்தெந்த ஏரியாவுல பிரச்னை இருக்கு. இதை எப்படி சரிசெய்யப்போறீங்க?’’ என்று தோரணையாக விசாரிக்கிறார்களாம். விவரம் புரியாமல் எம்.எல்.ஏ-க்கள் திக்கித் திணறிவிட்டால் போதும்... உடனடியாக, ‘‘நம்ம ஆளுங்க வருவாங்க. எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்... அவங்களுக்கு வேண்டியதை மட்டும் செஞ்சு கொடுங்க’’ என்று ‘கட்’ செய்துவிடுகிறார்களாம்.

அறிவாலயம்
அறிவாலயம்

அடுத்த சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ தரப்பைச் சந்தித்து, ஆலோசனைக்கு ‘ஃபீஸ்’ என்ற பெயரில் சில லகரங்களை வசூலித்துவிட்டு சிட்டாகப் பறந்துவிடுகிறதாம் மர்ம கும்பல். உஷாரான சில எம்.எல்.ஏ-க்கள் ஆரம்பத்திலேயே, ‘‘போன்ல பேச முடியாது. நேர்ல வாங்க பேசிக்கலாம்’’ என்று சொல்லிவிட்டால், எதிர்முனையில் ‘கட்’ செய்துவிடுகிறார்களாம். பணத்தைக் கொடுத்த எம்.எல்.ஏ-க்கள் சாவகாசமாக அறிவாலயத்துக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கொங்கு மண்டல, வடக்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் இந்தக் கைவரிசையை மர்ம கும்பல் காட்டியிருக்கிறதாம்.

போலி... செஞ்சிட்டாங்களே காலி!

வைத்திலிங்கத்தைப் பலவீனப்படுத்தும் சசிகலா?

அ.ம.மு.க-வில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் மா.சேகர். இவருடைய மகள் சுருதிக்கு பிப்ரவரி 14-ம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்தத் திருமணத்துக்கு சசிகலா வரவிருப்பதாக தஞ்சாவூரில் பேசிக்கொள்கிறார்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

சசிகலாவைத் தொடக்கத்திலேயே கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர் வைத்திலிங்கம். அவரது சொந்தத் தொகுதி ஒரத்தநாடு. வைத்திலிங்கம் தரப்பிலிருந்து ஆட்களை இழுத்து, பலவீனப்படுத்தவே சேகர் வீட்டு விசேஷத்துக்கு சசிகலா வரவிருப்பதாகக் கூறப்படுவதால் தஞ்சை மண் தகிக்கிறது.

வைத்திக்கு வைத்தியம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு