Published:Updated:

ஆளுநரின் அடுத்த அதிரடித் திட்டம் முதல் உதயகுமாரை நம்பி ஏமாந்தவர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்!

பெண் சாமியாரின் புது கெட்டப்... | வீட்டிலேயே தங்கிய சிறைக் கைதி... | ஆளுநரின் அடுத்த அட்டாக்! | போதைப் பொருள் விற்பனை கனஜோர்... | கி.வீரமணியின் எடையைக் கூட்டிய தி.க நிர்வாகி... | புலம்பலில் பழைய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் | கழுகார் அப்டேட்ஸ்!

ஆளுநரின் அடுத்த அதிரடித் திட்டம் முதல் உதயகுமாரை நம்பி ஏமாந்தவர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

பெண் சாமியாரின் புது கெட்டப்... | வீட்டிலேயே தங்கிய சிறைக் கைதி... | ஆளுநரின் அடுத்த அட்டாக்! | போதைப் பொருள் விற்பனை கனஜோர்... | கி.வீரமணியின் எடையைக் கூட்டிய தி.க நிர்வாகி... | புலம்பலில் பழைய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் | கழுகார் அப்டேட்ஸ்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
பெண் சாமியாரின் புது கெட்டப்...
கையைப் பிசையும் காவல்துறை?

`ஆதிபராசக்தியின் அவதாரம்’ என்று சொல்லி காமெடி செய்யும் பெண் சாமியார் ‘அன்னப்பூரணி’, இப்போது நித்தியானந்தா பாணியில் ஆன்லைனிலும் ஆன்மிக தீட்சை கொடுத்துவருகிறார். நித்யானந்தா எப்படி திருவண்ணாமலையில் ஆசிரமம் தொடங்கினாரோ, அதேபாணியில், அன்னபூரணியும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள ராஜாதோப்பில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அங்கு ஆசிரமம் கட்டிவருகிறார். சமீபகாலமாக, அங்கேயே தங்கியிருக்கும் அன்னபூரணி பக்தர்களைத் தன் காலடியில் அமரவைத்து, ‘வைப்ரேட் மோடில்’ அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அன்னபூரணி
அன்னபூரணி

தலையில் கிரீடம், கையில் சூலாயுதம் என புது கெட்டப்புக்கு மாறியிருக்கும் அன்னபூரணியின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, ஆன்மிகத்தில் நம்பிக்கையுடையோர் உள்ளூர் போலீஸிடம் புகார் மேல் புகார் அளிக்கிறார்கள். என்ன சொல்லி நடவடிக்கை எடுப்பது, அப்படி எடுத்தால் ஏதாவது அமைப்பினர் குபீரென கிளம்பிவந்துவிடுவார்களா என்ற தயக்கத்தில் கையைப் பிசைகிறது காவல்துறை!

டிரான்ஸ்ஃபர் கேட்கும் ஆட்சியர்...
பின்னணியில் மூன்று பேர்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சென்னைக்குப் பணி மாறுதல் கேட்டிருக்கிறாராம். இந்தக் கோரிக்கையை தனக்கு நெருக்கமான சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் தலைமைச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளாராம்.

ஆளுநரின் அடுத்த அதிரடித் திட்டம் முதல் உதயகுமாரை நம்பி ஏமாந்தவர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

இடமாறுதலுக்கு மனைவியின் உடல் நிலையைக் காரணமாகச் சொல்லியிருக்கிறார் ஆட்சியர். ஆனால், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கனிமொழி எம்.பி என மூவரும் மூன்று திசையில் ஆட்சியரை ஆட்டுவிப்பதால், அதிலிருந்து விடுபடுபடவே பணி மாறுதல் கேட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வீட்டிலேயே தங்கிய சிறைக் கைதி...
பீகார் நிதிஷ்குமாருக்கு தலைவலி!

பீகாரில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைத் தொடர்கிறார். அதற்குள் லாலு பிரசாத் கட்சியைச் சேர்ந்த சட்ட அமைச்சர் கார்த்திகேயகுமார், முதல்வர் நிதீஷ் குமாருக்கு தலைவலியாக மாறிவிட்டார். கார்த்திகேயகுமாரின் வலதுகரமாக கருதப்படும் தாதா ஆனந்த் சிங்குக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு முன்புதான் வழக்கு ஒன்றில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நிதிஷ்குமார், பீகார்
நிதிஷ்குமார், பீகார்
Facebook/Nitish Kumar

சமீபத்தில் ஆனந்த் சிங்கை, மற்றொரு வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்கள் போலீஸார். விசாரணை முடிந்து இரண்டு நாள்களாகியும் அந்த தாதா சிறைக்குத் திரும்பவில்லை. சட்ட அமைச்சர் கார்த்திகேயகுமாரின் உதவியால், மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் இரண்டு நாள்களும் தனது வீட்டில் ஜாலியாகத் தங்கியிருந்திருக்கிறார் தாதா. சில மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமேலவைத் தேர்தலில், கார்த்திகேயகுமார் வெற்றிபெற சிறையிலிருந்து கொண்டே ஆனந்த சிங் உதவினாராம். அதற்குப் பிரதிபலனாகத்தான் பதவிக்கு வந்தவுடன் கார்த்திகேயகுமார் தனது நன்றியை இப்படிக் காட்டியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இப்பவே கண்ணக்கட்டுதே மனநிலையில் இருக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஒண்டிவீரன் நினைவு தின விழாவா...
பா.ஜ.க கட்சி விழாவா?!

இம்மாத தொடக்கத்தில் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி , ஈரோடு மாவட்டத்திலுள்ள அவரது நினைவு மண்டபத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, இப்போது ஒண்டிவீரனின் நினைவு தினத்துக்காக நெல்லை மணிமண்டபத்துக்கு வந்துவிட்டார். இந்த விழாவில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை ஈர்க்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளையும் செந்திருந்தது பா.ஜ.க. ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதுடன், ஒண்டிவீரன் நினைவு தபால் தலையையும் வெளியிட்டனர்.

ஆளுநரின் அடுத்த அதிரடித் திட்டம் முதல் உதயகுமாரை நம்பி ஏமாந்தவர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

“சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்குப் பிறகு பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி பிரதமர் மோடி அழகு பார்த்திருக்கிறார்” என்று சமூக மக்களுக்கு நினைவூட்டினார் தமிழிசை. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், வழக்கம் போல, ஆங்கிலேயர்களால் வரலாறு திரிக்கப்பட்டதாகச் சொன்னார்.இரு ஆளுநர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்புடன் ஒண்டிவீரன் நினைவு தினம் கொண்டாடப்பட்ட போதிலும் அது பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி போலவே இருந்ததாகச் சொல்கிறார்கள் அதில் பங்கேற்றவர்கள்.

சிதிலடைந்த பூம்புகார் சுற்றுலாத்தலம்...
மெத்தன அதிகாரி மீது பாய்ந்த எம்.எல்.ஏ!

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுசெய்ய டி.ஆர்.பி.ராஜா தலைமையில் 11 பேர் கொண்ட சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் வருகைதந்தனர். கருணாநிதி ஆட்சியில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பூம்புகார் சுற்றுலாத்தலம் கேட்பாரற்றுச் சிதிலமடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஆளுநரின் அடுத்த அதிரடித் திட்டம் முதல் உதயகுமாரை நம்பி ஏமாந்தவர்கள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

அதுபற்றிக் கேள்வி எழுப்பியபோது, ``நான் ஒரு முறைகூட அந்தப் பகுதிக்குப் போனதில்லையே...” என்று பதில் சொன்னாராம் மாவட்ட சுற்றுலா அதிகாரி. கடுப்பான கமிட்டித் தலைவர் டி.ஆர்.பி.ராஜா, அந்த அதிகாரியை வறுத்தெடுத்துவிட்டாராம். உடனடியாக செய்து முடிக்க வேண்டிய பணிகளை வரிசைப்படுத்தி அந்த அதிகாரியிடம் ஒரு பட்டியலே கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் குழுவினர். ‘இனியாவது பூம்புகார் புதுப் பொலிவு பெறுமா?’ என்று எதிர்பார்க்கிறார்கள் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்.

போதைப் பொருள் விற்பனை கனஜோர்...
உடைத்துப் பேசிய வணிகர், சமாளித்த அமைச்சர்!

குளுகுளு மாவட்டத்தில் அண்மையில் பசுமை அமைச்சர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் பங்கேற்ற அனைவரும், “நம்முடைய மாவட்டம் போதைப்பொருள் இல்லாத மாவட்டம்” என்று மாறிமாறிப் பெருமை பேசியிருக்கிறார்கள். திடீரென மைக்கைக் கேட்டுப்பெற்ற வணிகர் சங்க தலைவர் ஒருவர், “நமது தொகுதியில்தான் போதைப் பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. போதைப் பொருளை விற்றே கார் பங்களாண்ணு செட்டிலானவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தொடர்ந்து புகார் அளித்தும்‌ எந்த நடவடிக்கையும் இல்லை” என அமைச்சர் முன்பே விவகாரங்களைப் போட்டு உடைத்திருக்கிறார். சற்றும் எதிர்பாராத அமைச்சரோ, “உடனடியாக புகார் கொடுங்கள்... அந்த போதைப்பொருள் ஆசாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று பேசி நிலைமைச் சமாளித்திருக்கிறார்.

எப்பவும் நான் ராஜா...
மின்துறையில் ஆட்டம் போடும் அதிகாரி!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) பணியாற்றிவரும் ‘அழகு’ அதிகாரி ஒருவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய துறையின் முக்கியப் புள்ளியுடன் கூட்டுச் சேர்ந்து சொத்து குவித்தவராம். தி.மு.க ஆட்சி அமைந்ததும், அவரை அதே துறையில் டம்மி போஸ்டிங்குக்குத் தூக்கியடித்தனர். ‘ருசிகண்ட பூனை’ சும்மா இருக்குமா? 8 மாதங்கள் கழித்து, துறையின் தற்போதைய முக்கியப் புள்ளியைப் பிடித்து, நிதி தொடர்பான பிரிவில் முக்கியப் பொறுப்புக்கு வந்துவிட்டாராம்.

ஒப்பந்ததாரர்களுக்கான ‘பில் கிளியரன்ஸ்’ பணிகளை இவர்தான் மேற்கொள்கிறார். ‘லட்டு’களைக் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு உடனுக்குடன் ‘பில் கிளியர்’ செய்வது, முரண்டுபிடிப்பவர்களுக்கு பெண்டிங் வைப்பது என்று ‘அட்ராசிட்டி’ செய்கிறாராம் அந்த அதிகாரி. நேரடியாக துறை முக்கியப்புள்ளியுடன் ‘தொடர்பில்’ இருப்பதால் எவராலும் இவரை அடக்க முடியவில்லையாம்”

கி.வீரமணியின் எடையைக் கூட்டிய தி.க நிர்வாகி...
வேடிக்கை செயலும், எதிர்வினையும்!

திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘விடுதலை’க்கு 60 ஆயிரம் புதிய சந்தா திரட்டும் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக சந்தா வழங்கும் விழா சமீபத்தில் திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில், தி.க தலைவர் கி.வீரமணியின் எடைக்கு நிகராக பணம் வழங்க பெரிய தராசு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருபக்கம் வீரமணி அமர்ந்திருக்க, மறுபக்க தட்டில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்தனர். இருபக்கமும் நிகரான எடை வந்தபோது, வீரமணிக்கு அருகில் நின்றிருந்த தி.க நிர்வாகி ஒருவர், தனது முட்டியால் அழுத்தி வீரமணி பக்க தட்டை கீழே இறக்கினார். இதனால், மறுபக்கத் தட்டில் மேலும் மேலும் பணக்கட்டுகளை அடுக்கினர்.

கி.வீரமணி
கி.வீரமணி

சுமார் ரூ.20 லட்சம் வரை வசூலானதும், அதனை பெற்றுக்கொண்டு வீரமணி அங்கிருந்து சென்றார். ஆனால், வீரமணியின் எடையைக் கூட்டியவர் சமூக வலைதள விமர்சனத்தில் சிக்கிக்கொண்டார். பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்பினர் அந்தக் காட்சியை விமர்சித்து வைரலாக்கிவருகிறார்கள். இதுபற்றி தி.க-வினரிடம் கேட்டால், ‘விடுதலைக்குச் சந்தா சேர்க்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் எளிமையாக்குகின்றன. அவர்களுக்கு நன்றி!’ என்றனர் கூலாக.

உதயகுமாரை நம்பி மோசம் போயிட்டோம்...
புலம்பலில் பழைய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி என்பார்களே, அப்படி எடப்பாடி பழனிசாமிக்காக களமாடியவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதற்குப் பரிசாக ஓ.பி.எஸ்-ஸின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை அவரிடமிருந்து பறித்து உதயகுமாருக்குக் கொடுத்தார் பழனிசாமி. அந்த உற்சாகத்தில் பன்னீர்செல்வத்தை அவரது சொந்த மாவட்டத்திலேயே, தனிமரமாக்கும் வேலையில் இறங்கினார் உதயகுமார். அதற்காக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-க்கள் ஜக்கையன், பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் முருக்கோடைராமர் உள்ளிட்டோரிடம், “மாவட்டச் செயலாளர் பதவி பெற்றுத்தருகிறேன்... தேனியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை கூண்டோடு நம் பக்கம் அழைத்துவாருங்கள்” எனக்கூறி ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை எல்லாம் மடைமாற்றம் செய்துகொண்டிருந்தார்.

ஓ.பி.எஸ் - ஆர்.பி.உதயகுமார்
ஓ.பி.எஸ் - ஆர்.பி.உதயகுமார்

மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசைக் கண்டித்து தேனியில் நடைபெற்ற அ.தி.மு.க போராட்டத்தையும், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு எதிரான கூட்டமாக பயன்படுத்திக்கொண்டார் உதயகுமார். இந்த போராட்டத்துக்கு கூட்டம் சேர்க்கவும், “யார் அதிகமாக செலவுசெய்து ஆள்களைத் திரட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி” என்று கிளப்பிவிட்டார். இதனால் கொத்துக் கொத்தாக நிறைய நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சாய்ந்தார்கள். தற்போது ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருப்பதால், “உதயகுமாரை நம்பி மோசம் போயிட்டோமே... அவர் எப்படியும் பிழைச்சுக்குவார். நாம இருப்பதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இப்படி விழுந்துட்டோமே” என்று புலம்பிவருகிறார்கள் அவரை நம்பி அணி மாறியவர்கள்!