Published:Updated:

வீடு அபகரிப்பு புகாரில் திமுக புள்ளி முதல் சசிகலா பெயரில் புதுக்கட்சி வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

கைதுசெய்யாமல் காலம் கடத்தும் போலீஸ்! | சின்ராசு மகன்களும்... சீனியர் அமைச்சரும்! | சசிகலா பெயரில் புதுக்கட்சி... சிங்கப்பூரில் இருக்கும் தலைவர்! | தரக்குறைவாக பேசிய எம்.பி, எம்.எல்.ஏ... அப்செட்டில் அதிகாரிகள்! | எசமான் நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?!

வீடு அபகரிப்பு புகாரில் திமுக புள்ளி முதல் சசிகலா பெயரில் புதுக்கட்சி வரை... கழுகார் அப்டேட்ஸ்

கைதுசெய்யாமல் காலம் கடத்தும் போலீஸ்! | சின்ராசு மகன்களும்... சீனியர் அமைச்சரும்! | சசிகலா பெயரில் புதுக்கட்சி... சிங்கப்பூரில் இருக்கும் தலைவர்! | தரக்குறைவாக பேசிய எம்.பி, எம்.எல்.ஏ... அப்செட்டில் அதிகாரிகள்! | எசமான் நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
வீடு அபகரிப்பு புகாரில் தி.மு.க புள்ளி...
கைதுசெய்யாமல் காலம் கடத்தும் போலீஸ்!

சென்னை போயஸ் கார்டனில் அலுவலகம், கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள், விலையுயர்ந்த கார் என்று பந்தாவாக வலம்வருபவர் தி.மு.க பிரமுகர் முத்துவேல். இவரது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, வில்லிவாக்கம், ராஜமங்கலம் பகுதியில் பேனர், ஃபிளெக்ஸ் என்று அமர்க்களப்படுத்துவார்கள் இவருடைய ஆதரவாளர்கள். சமீபத்தில் ராஜமங்கலம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தன் அடிப்பொடிகளுடன் சென்ற அவர், அங்கிருந்த பெண்ணை வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டினாராம்.

வீடு அபகரிப்பு புகாரில் திமுக புள்ளி முதல் சசிகலா பெயரில் புதுக்கட்சி வரை... கழுகார் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸார், அடியாட்கள் சிலரை மட்டும் கைதுசெய்துவிட்டு முத்துவேலைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம். ஏற்கெனவே, 2019-ல் இந்த முத்துவேலை ஒரு மோசடி வழக்கில் கைதுசெய்திருந்தனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார். தொடர் குற்றங்களில் ஈடுபட்டும், அவரைத் தொட போலீஸ் பயப்படுவதற்கு அவரின் சகோதரி தி.மு.க வழக்கறிஞரணி நிர்வாகியாகி இருப்பதே காரணம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

சின்ராசு மகன்களும்...
சீனியர் அமைச்சரும்!

பட்டாசு மாவட்டத்தின் சீனியர் அமைச்சரின் மகள்வழிப் பேத்திக்கு சென்னையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்காக முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிகையில், தன் சொந்த மகன்களின் பெயர்களையே புறக்கணித்துவிட்டாராம் அமைச்சர். மகன்களின் அரசியல் செயல்பாடு பிடிக்காமல், அவர்களை ‘சூர்யவம்சம் சின்ராசு’ போல ஒதுக்கிவைத்திருக்கும் அமைச்சர், அழைப்பிதழில் மருமகனின் பெயரை மட்டுமே அச்சிட்டிருப்பதோடு, பத்திரிகை கொடுக்கும் சாக்கில் கட்சி முக்கியப் பிரமுகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திவைக்கிறாராம். தனக்குப் பிறகு தன் மருமகனை அரசியல் வாரிசாகக் களமிறக்க முடிவு செய்திருப்பதாலேயே இந்த ‘மூவ்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மருத்துவரான அந்த மருமகன் கோபாலபுரம் வரை அறிமுகமாகிவிட்டதால், விரைவில் அவரை அரசியல் மேடைகளில் பார்க்கலாம் என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்!

சசிகலா பெயரில் புதுக்கட்சி...
சிங்கப்பூரில் இருக்கும் தலைவர்!

சசிகலா படத்துடன், ‘புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதுக்கட்சி தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆள்சேர்ப்பு நடந்துவருகிறது. இன்னும் பதிவுகூட செய்யப்படாத அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பெயர் சேரசோழபாண்டியன்! சிங்கப்பூரில் இன்ஜினீயராகப் பணிபுரியும் இவர், பெரம்பலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்டவராம். அரசியலுக்கும் புதுசு. ஸ்ட்ரெய்ட்டா சி.எம்-தான் என்ற இலக்கோடு எடுத்த எடுப்பிலேயே கட்சி தொடங்கி, சிங்கப்பூரில் இருந்தபடியே நிர்வாகிகளை நியமித்துவருகிறார்.

வீடு அபகரிப்பு புகாரில் திமுக புள்ளி முதல் சசிகலா பெயரில் புதுக்கட்சி வரை... கழுகார் அப்டேட்ஸ்

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், யார் வந்தாலும் மாநிலப் பொறுப்பு கொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் மனிதர். “சிங்கப்பூரிலிருந்து ஜூலை 7-ம் தேதி மூன்று மாத விடுப்பில் தமிழ்நாட்டுக்கு வரும் சேரசோழபாண்டியன், அதன் பின்னரே கட்சி நிர்வாகிகளின் முகத்தை நேரில் பார்க்கிறார். லீவு முடிவதற்குள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயரைப் பதிவு செய்துவிடுவார்” என்கிறார் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். அதற்குள்ளாகவே, சசிகலா படத்துடன்கூடிய புதுக்கட்சியின் பெயரை சமூக வலைதளங்களில் பரப்பியதுடன், ‘கட்சிக்குத் தியாகத்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்’னு பேர் வெச்சிருக்கலாம் என்று சீரியஸாக விவாதிக்கிறார்களாம் இந்த அரசியல் அப்ரன்டீஸ்கள்! ‘எங்களையே இன்னும் அந்தம்மா ஏத்துக்கலை... இதுல இவங்க காமெடி வேற...’ என்று கடுப்பாகியிருக்கிறது அ.ம.மு.க தரப்பு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி குறுக்கே நிற்கிறாரே..!

மீசைக்கார அமைச்சரின் உதவியாளராக இருக்கும் சர்க்கரையானவர், மாநிலம் முழுக்க அந்தந்தத் துறை சார்ந்த டீலிங்கையெல்லாம் பார்த்துக்கொள்கிறாராம். ஏற்கெனவே அந்தத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், மீசைக்காரருக்கு. ‘அடடே...’ யோசனைகளைச் சொல்லியும் அசத்துகிறார். இவரின் தலையீட்டால், ஏதாவது காரியம் சாதிப்பதற்காக அமைச்சரைப் பார்க்கப் போகிறவர்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகிறார்களாம். ‘சாமி வரம் கொடுத்தாலும், இந்தப் பூசாரி குறுக்கே புகுந்து கெடுத்துடுவார்போலயே’ என்று புலம்பியவர்கள், இப்போது அதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்துவிட்டார்கள். வேறென்ன, அந்தப் பூசாரிக்கும் சேர்த்தே படியளக்கிறார்களாம்!

தரக்குறைவாக பேசிய எம்.பி, எம்.எல்.ஏ...
அப்செட்டில் அதிகாரிகள்!

மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு, முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அனைத்துத் துறைகளும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தி.மு.க எம்.பி எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் இருவரும் அதிகாரிகளை ஒருமையில் பேசி தரக்குறைவாக நடத்தியதாகப் புகார் எழுந்திருக்கிறது.

திமுக எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம்
திமுக எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம்

“திட்டங்களின் வளர்ச்சி குறித்து எதுவும் பேசாமல், எங்களை பயமுறுத்துவதுபோலப் பேசுவது எதற்காக?” என்று வெகுண்டெழுந்த சிலர், நடந்ததையெல்லாம் முதல்வர் கவனத்துக்கு புகாராகத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று மாவட்டம் லட்சியம்...
கோவில்பட்டி தொகுதி நிச்சயம்!

ம.தி.மு.க-வில் தலைமை நிலையச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் துரை வைகோ, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களையே சுற்றிச் சுற்றி வருகிறார். குறிப்பாக கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில் பகுதியில் அதிக கூட்டம் நடத்துகிறார் அவர். ``இந்தத் தொகுதியில நம்ம கட்சிக்கு நல்ல வாக்குவங்கி இருந்துச்சு. ஆனா, கடம்பூர் ராஜூ அதை அ.தி.மு.க பக்கம் மாத்திட்டாரு.

துரை வைகோ
துரை வைகோ

நாம இப்பவே களப்பணி ஆற்றினோம்னா, அடுத்த தேர்தல்ல கோவில்பட்டி தொகுதியை ம.தி.மு.க வசமாக்கிடலாம்” என்று சீனியர் நிர்வாகிகள் கொளுத்திப்போட்டிருக்கிறார்கள். இதையடுத்து குறிப்பிட்ட சில சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்து ஆதரவு திரட்டிவருகிறார் துரை வைகோ. ‘நாமும் ஏதாவது செஞ்சாகணும்போலயே...’ என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தரப்பை யோசிக்கவைத்திருக்கிறது துரையின் இந்த மூவ்!

எசமான் நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?!
புலம்பித் தவிக்கும் ஒப்பந்ததாரர்கள்...

நீலகிரி நெடுஞ்சாலைகளில் சரியும் மண்ணை அகற்றுவது முதல் பெரிய பெரிய கட்டுமானம் வரை அனைத்துப் பணிகளையும் சமீபகாலமாக பெரிய கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே ஒதுக்குகிறார்களாம் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைத்துறையில் பல ஆண்டுகளாக சின்னச் சின்ன வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்துவந்தவர்கள் இப்போது எந்த டெண்டரும் எடுக்க முடியாமல் புலம்பித் தவிக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அந்தத் துறையின் பெரிய மனிதர் ஆய்வுக்காக நீலகிரிக்கு விசிட் அடித்தார். அப்போது, தன் நண்பர்கள், உறவினர்கள் என்று பெரிய கான்ட்ராக்டர்கள் சிலரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிமுகம் செய்துவைத்தாகவும் அதன் பிறகே இப்படி நடப்பதாகவும் சொல்கிறார்கள் கான்ட்ராக்டர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism