Published:Updated:

ஜோதிடர் வாக்கு, புதுத்தெம்பில் ராஜேந்திர பாலாஜி; சசியின் ஜமீன் பாணி, ஆடிப்போன போலீஸ் - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...

சென்னை தி.மு.க-வில் உதயமாகிறதா புதிய மாவட்டம்? | ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அண்ணா பல்கலை., | ஆடிப்போன கொடநாடு விசாரணை டீம்| தேர்தல் செலவைச் சரிக்கட்ட புது யுக்தி | உடனடியாகப் பதவி கொடுத்த வைத்திலிங்கம் | பணத்தைக் கொடுத்து போஸ்ட்டிங் | கழுகார் அப்டேட்ஸ்

ஜோதிடர் வாக்கு, புதுத்தெம்பில் ராஜேந்திர பாலாஜி; சசியின் ஜமீன் பாணி, ஆடிப்போன போலீஸ் - கழுகார் அப்டேட்ஸ்

சென்னை தி.மு.க-வில் உதயமாகிறதா புதிய மாவட்டம்? | ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அண்ணா பல்கலை., | ஆடிப்போன கொடநாடு விசாரணை டீம்| தேர்தல் செலவைச் சரிக்கட்ட புது யுக்தி | உடனடியாகப் பதவி கொடுத்த வைத்திலிங்கம் | பணத்தைக் கொடுத்து போஸ்ட்டிங் | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்...
சென்னை தி.மு.க-வில் உதயமாகிறதா புதிய மாவட்டம்?

தி.மு.க-வில் தற்போது பகுதி, வட்டம், ஒன்றியம் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடந்துவரும் நிலையில் உட்கட்சித் தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில்தான், சென்னையில் கட்சி கட்டமைப்புரீதியாக இருக்கும் ஆறு மாவட்டங்களுடன் திரு.வி.க நகர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும் திட்டத்தை பரிசீலித்துவருகிறதாம் தி.மு.க தலைமை.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படிப் புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும் பட்சத்தில் அங்கு பட்டியல் சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். இதையடுத்து, புதிய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக எம்.எல்.ஏ-க்கள் தாயகம் கவி, பரந்தாமன், கடந்த சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கே.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் இப்போதே முட்டி மோதிவருகிறார்கள்!

முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு மீண்டும் பதவி!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அண்ணா பல்கலை...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஆயுதப் பெயர்கொண்டவருக்கு சமீபத்தில் ‘கட்டுப்பாடான’ பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரத்தில் இருக்கும் குடும்ப உறவினர் ஒருவருக்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ்கள் அளித்தாராம் இவர். இதையடுத்து, “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் நேரத்தில் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தவருக்கு முக்கியப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்
அண்ணா பல்கலைக் கழகம்

இந்த ஆட்சியில் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தால், எந்தப் பதவியையும் பிடித்துவிடலாமா?” என்று அங்கலாய்க்கிறார்கள் பல்கலைக்கழக அதிகாரிகள். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் கோலோச்சிய விநாயகர் பிரதர்ஸ் டீமைச் சேர்ந்தவர்களின் முறைகேடுகள் லீக் ஆகாமல் இருக்கவே இவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவந்திருப்பதாகச் சொல்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

சசியின் ஜமீன் பாணி நடவடிக்கைகள்!
ஆடிப்போன கொடநாடு விசாரணை டீம்...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவைப் பற்றி சஜ்ஜீவன் கொடுத்த வாக்குமூலமும், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் கொடுத்த வாக்குமூலமும் மேட்ச் ஆகவில்லையாம். இதையடுத்து, குழப்பமடைந்த தனிப்படையினர் மீண்டும் இருவரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

இந்த நிலையில், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலாவுக்கு கொடநாடு பங்களாவில் இருந்த வானளாவிய அதிகாரத்தையும், அவரது ஜமீன் பாணியிலான நடவடிக்கைகளையும் விசாரணையில் தெரிந்துகொண்ட அதிகாரிகள் ஆடிப்போயிருக்கிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் விசாரிக்கப்பட்ட நபர்களில் இருவரைக் கைதுசெய்வதற்காக தனிப்படையினர் ஆதாரத்தைத் திரட்டிவருகிறார்கள். இதை மோப்பம் பிடித்த வாரிசுப் பிரமுகர் உட்பட மூன்று பேர் முன்ஜாமீனுக்கு முயன்றுவருகிறார்கள்,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
லாட்டரி விற்பனை செய்யும் தி.மு.க கவுன்சிலர்!
தேர்தல் செலவைச் சரிக்கட்ட புது யுக்தி...

கொங்கு மண்டலத்தில் மூன்று எழுத்து மாநகராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருக்கும் மன்னர் பெயர்கொண்டவர் நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையில் கோலோச்சுகிறார். கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வில் இருந்த இவரை வழக்கு பயத்தைக் காட்டியே ஆளுங்கட்சிக்கு ஹைஜாக் செய்தார்கள்... இவரும் வந்த வேகத்திலேயே மாநகராட்சி கவுன்சிலர் சீட் வாங்கி வெற்றியும் பெற்றார். கடந்த அ.தி.மு.க ஆட்சியிலேயே இவர் லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது முன்பைவிட மூன்று மடங்கு அளவுக்குத் தொழிலில் தீவிரம் காட்டுகிறார். கேட்டால், “இந்த ஊரோட வி.ஐ.பி-க்கு பெருசா கொட்டிக் கொடுத்துதான் அண்ணன் கவுன்சிலர் சீட்டே வாங்கினார். அதை எடுக்கத்தான் இப்போ லாட்டரி தொழிலில் பின்னியெடுக்கிறார்” என்கிறார்கள்!

இனியெல்லாம் சுகமே... ஜோதிடர் வாக்கு...
ஃபார்முக்குத் திரும்பிய ராஜேந்திர பாலாஜி!

தன் மீதான அடுத்தடுத்த வழக்குகளாலும், கைது நடவடிக்கைகளாலும் துவண்டுபோயிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கைகொண்ட அவருக்கு, “இவ்வளவு காலமும் விருச்சிக லக்னத்தில் நின்று உங்களைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த சனி விலகிப் போயிடுச்சி. தனுசு ராசிக்காரரான உங்களுக்கு இனி எல்லாம் நல்ல காலம்தான்” என்று அவரின் ஆஸ்தான ஜோதிடர் வாக்கு சொன்னதே இந்தப் புது எனர்ஜிக்குக் காரணமாம். அதனாலேயே, சிவகாசியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கழகக் கண்மணிகளுக்கு புதுத்தெம்பு ஊட்டினார் என்கிறார்கள்!

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எக்ஸ் எம்.எல்.ஏ!
உடனடியாகப் பதவி கொடுத்த வைத்திலிங்கம்...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பிறகு அவர் கட்சியில் வகித்துவந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் கூடுதலாக கவனித்துவந்தார். அந்தப் பதவியைப் பெறுவதற்குப் பலரும் போட்டியிட்ட நிலையில், அதை யாருக்கும் தரவில்லை வைத்தி. இந்த நிலையில்தான், வைத்தியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் சமீபத்தில் வெளிப்படையாகவே சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
ம.அரவிந்த்

அந்தச் சூடு தணிவதற்குள்ளாகவே வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை எம்.ஜி.எம்.சுப்பிரமணியனுக்கு வழங்கியிருக்கிறார் வைத்தி. இதையடுத்து, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினால், வைத்தியின் குட்புக்கில் இடம்பெற்றுவிடலாம் என்று பகிரங்கமாகவே பேசிவருகிறார்கள் டெல்டா மாவட்டங்களின் இலை நிர்வாகிகள்!

பணத்தைக் கொடுத்து போஸ்ட்டிங்!
மூடி மறைக்கப் பார்க்கிறதா துறை மேலிடம்?

சமீபத்தில் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார், 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்துடன் விழுப்புரம் அருகே வாகன சோதனையில் சிக்கினார் அல்லவா... இந்த வழக்கு விசாரணையில், ஆதிதிராவிடர் நல விடுதிகளின் சமையலர் பணிக்கு 12 பேரிடம் சரவணக்குமார் பணம் வாங்கிக்கொண்டு போஸ்ட்டிங் போட்டது தெரியவந்தது.

அதையடுத்து 12 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் இந்தத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் இதேபோல சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 38 பேருக்கு திருச்சி மாவட்டத்தில் போஸ்ட்டிங் போட்டுக்கொடுத்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, அந்த 38 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், சென்னையிலிருக்கும் துறையின் உயரதிகாரிகள் சிலர் இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism