Published:Updated:

ஒன்றிணையும் கருணாநிதி குடும்பம் முதல் அன்பில் மகேஷைப் புறக்கணித்த எம்எல்ஏ-க்கள் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

``சட்டசபை நிகழ்வுகளை கவனித்துவருகிறேன்... செய்திகளை டெலிகிராமில் அனுப்பியிருக்கிறேன்’’ என்று அலைபேசியில் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார் கழுகார்...

ஒன்றிணையும் கருணாநிதி குடும்பம் முதல் அன்பில் மகேஷைப் புறக்கணித்த எம்எல்ஏ-க்கள் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

``சட்டசபை நிகழ்வுகளை கவனித்துவருகிறேன்... செய்திகளை டெலிகிராமில் அனுப்பியிருக்கிறேன்’’ என்று அலைபேசியில் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார் கழுகார்...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கர்ஜித்த மாஜி... கப்சிப்பான புயல்!

கூட்டணி அமைத்து சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றாலும், தனக்கான மரியாதை இல்லாமல் போய்விட்டது என்ற மனவருத்தத்தில் இருக்கிறாராம் புயல் தலைவர். இதனால், பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்துவருபவர், சமீபத்தில் தனது கட்சியிலிருந்து என்றோ தாய்க் கழகத்தில் இணைந்துவிட்ட பழைய நிர்வாகிக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்... தனது அரசியல் வாழ்க்கையையே காலிசெய்த கடுப்பிலிருந்த அந்த நிர்வாகி, ``உங்களை நம்பி, உங்க பின்னால வந்து என் அரசியல் வாழ்க்கையே வீணாப்போச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களை நம்பி வந்தவங்களுக்கு நீங்க என்ன பண்ணீங்க?’’ என்று எகிறியிருக்கிறார். ``நான் செய்தது தவறுதான். ஆனால், இந்த நேரத்துல பழைய விவகாரத்தையெல்லாம் சொல்லிக்காட்டலாமா? நானே நொந்துபோய் இருக்கேன்’’ என்று புயல் தலைவர் தழுதழுத்தும்கூட, ``நீங்களும் எனக்கு வாய்ப்பு தரலை. தாய்க் கழகம் தந்த சில வாய்ப்புகளையும் நீங்க கெடுத்துட்டீங்க. இப்போ செய்திக்கு மட்டுமே நான் பயன்படுறேன்’’ என்று புயலிடம் அனலாகப் பேசியிருக்கிறார் மாஜி நிர்வாகி.

ஒன்று சேரும் கருணாநிதியின் குடும்பம்...
திருப்புமுனையாகுமா திருமணம்?

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதி குடும்பத்தில் நடைபெறும் முதல் விசேஷம், செல்வியின் மகள்வழிப் பேத்தி ஓவியாவின் திருமணம். செப்டம்பர் 11-ம் தேதியன்று சென்னையில் நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்றுகூடவிருக்கிறார்கள்.

கருணாநிதி குடும்பம்
கருணாநிதி குடும்பம்

குறிப்பாக, அழகிரி குடும்பத்தினர் இந்தத் திருமண விழாவுக்கு முன்கூட்டியே வரவிருக்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தினரும் திருமணவிழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். செல்வியுடன் அழகிரி, ஸ்டாலின் இருவருமே நல்ல உறவில் இருப்பதால், `பேத்தியின் திருமணம் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்’ என்று நம்புகிறாராம் செல்வி.

அன்பில் மகேஷ் வழங்கிய விருது...
மொத்தமாகப் புறக்கணித்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். விழாவுக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அனைவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான இனிகோ இருதயராஜ் மட்டுமே விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். ``அமைச்சர் கே.என்.நேரு ஊரில் இல்லாததால், இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. நேரு கலந்துகொள்ளாத கூட்டத்தில் நாம் கலந்துகொண்டால் அவரது கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், மற்ற ஆறு எம்.எல்.ஏ-க்களும் விருது வழங்கும் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்கள். இனிகோ இருதயராஜ் அன்பில் மகேஷ் ஆதரவாளர் என்பதால், அவர் மட்டுமே கலந்துகொண்டார்’’ என்று காதைக் கடிக்கிறார்கள் தி.மு.க-வினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சபாநாயகரின் தவறு...
மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ!

சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தை முடித்துவைத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, `கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். பேச்சிப்பாறை அணையைக் கட்டியது திருவிதாங்கூர் மன்னர் ஶ்ரீமூலம் திருநாள் இராமவர்மா மகாராஜா என்பது வரலாறு. எனவே, சபாநாயகரின் தவறுதலான பேச்சைத் திருத்தவேண்டிய குமரி மாவட்டத்திலுள்ள ஆறு எம்.எல்.ஏ-க்களும் அமைதியாக இருந்தது தவறு என்கிற குரல்கள் அந்த மாவட்டத்திலிருந்து எழுந்தன.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இந்தநிலையில், சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, ``திருவிதாங்கூர் ஶ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழைமையான பேச்சிப்பாறை அணையை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும்’’ என்று பேசினார். சபாநாயகரின் தவறை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல், மறைமுகமாகத் திருத்துவதற்காகத்தான் அப்படிப் பேசினாராம் எம்.ஆர்.காந்தி.

தம்பி வழியாக தலைமைக்குத் தூது...
ஈரோடு மாவட்ட தி.மு.க உள்குத்து!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஏ.ஜி.வெங்கடாசலம். இவருக்கும் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவத்துக்கும் ஆகாது. இன்னொரு பக்கம், என்.கே.கே.பி.ராஜா கோஷ்டியினர், `மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நல்லசிவத்தை நீக்க வேண்டும்’ என்று போர்க்கொடி தூக்கிவருகிறார்கள். இதற்கிடையே, `ஈரோடு வடக்கு மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ நான்தான்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

எனவே, எனக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவி வேண்டும்’ என்று ஏ.ஜி.வெங்கடாசலமும் கோதாவில் இறங்கியிருக்கிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் தமிழரசு, அந்தியூரில்தான் பெண் எடுத்திருக்கிறார். அந்த சோர்ஸ் மூலம் எப்படியாவது மாவட்டச் செயலாளர் பதவியை வாங்க ஏ.ஜி.வெங்கடாசலம் கடுமையாக முயன்றுவருகிறாராம். இந்த முக்கோண மோதலில் சிக்கிக்கொண்டு கட்சித் தொண்டர்கள்தான் படாதபாடுபடுகிறார்களாம்!

திருமணம் வரை நோ பாலிட்டிக்ஸ்...
தினகரன் திட்டவட்டம்!

செப்டம்பர் 6-ம் தேதி... தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.டி.தினகரன், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்களின் வீடுகளுக்கு வரச் சொல்லி அழைப்புவிடுத்திருக்கிறார். கொழுந்துவிட்டெரியும் கொடநாடு வழக்கு விவகாரம், சசிகலாவின் அடுத்தடுத்த மூவ்கள் நடந்துவரும் நிலையில், இந்த திடீர் அழைப்பால் ஏதேனும் அரசியல் விவகாரம் குறித்து தினகரன் பேசுவார் என்று பரபரப்புடன் சென்று நிர்வாகிகள் காத்திருக்க... அவரோ அரசியல் எதுவும் பேசாமல், ஒவ்வொருவருக்கும் தன் மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து, ``கல்யாணத்துக்குக் கட்டாயம் வந்துடுங்க’’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

டி. டி. வி. தினகரன்
டி. டி. வி. தினகரன்

செப்டம்பர் 16-ம் தேதி திருமணம் முடியும் வரையில் எந்த அரசியல் நடவடிக்கையிலும் தினகரன் இறங்குவதாக இல்லை. அதன் பிறகு, சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம் என்ற ஐடியாவில் அவர் இருக்கிறார்’’ என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.

சிக்கிய அதிகாரி... சிக்கலில் மாஜி!

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் ஆணையராக இருந்தவர் பவுன்ராஜ். தேர்தல் அறிவித்தவுடன், முன்தேதியிட்டு பணிகளை ஒதுக்கி அ.தி.மு.க-வுக்கு சாதகமாகச் செயல்பட்டு 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது. அதேபோல, 35 லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கிலும் சிக்கினார். இது குறித்து கோவை குற்றப்பிரிவு போலீஸில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பவுன்ராஜ்
பவுன்ராஜ்

பவுன்ராஜ் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த வழக்கைவைத்து வேலுமணிக்கு நெருக்கடி கொடுக்க காவல்துறை திட்டமிட்டிருக்கிறதாம். ஆனால், பவுன்ராஜ் தரப்பிலோ, ``பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டோம். இனி பிரச்னையில்லை’’ என்று சொல்கிறார்களாம். ஆனால், யாரைப் பார்த்தார்கள் என்பதை மட்டும் சொல்லவில்லை!