Published:Updated:

ஆதரவு திரட்டும் வைகுண்டராஜன் முதல் இலங்கைத் தமிழருக்காக களமிறங்கும் பா.ஜ.க வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

“மெயிலில் தகவல்களை அனுப்பியிருக்கிறேன்” - வேறு யார்? சின்சியராக நேரத்துக்குச் செய்திகளை அனுப்பும் கழுகாரிடமிருந்துதான் மெசேஜ்!

சூரப்பாவின் மர்ம புன்னகை!

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிப்பதற்காக, கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. புகார் குறித்த ஆவணங்களை விசாரணை ஆணையம் கேட்டும், அதை முழுமையாகத் தராமல் பல்கலைக்கழகம் தரப்பில் இழுத்தடித்திருக்கிறார்கள். இதுவரை நிதி தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லையாம்.

சூரப்பா
சூரப்பா

வரும் ஏப்ரல் மாதம், சூரப்பா ஓய்வுபெறப் போகிறார். அதற்குள், விசாரணை அறிக்கையைத் தயாரித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். `இப்படியிருந்தால், விசாரணையை எப்படி முடிக்க முடியும்?’ என்று ஆணையம் தரப்பில் கொதிக்கிறார்கள். `பேப்பர் இல்லாமல் எப்படி என்மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்... பார்க்கலாம்’ என்பதுபோல இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு மர்மப் புன்னகையை உதிர்க்கிறாராம் சூரப்பா.

பேப்பருக்கு பெப்பேன்னு சொல்றாருபோல!

இலங்கைக்கு ஜெய்சங்கர் விசிட்...
பின்னணியில் ஐ.பி ரிப்போர்ட்!

இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் விசிட் செய்திருக்கிறார். இதன் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான `ரா’ அனுப்பிய அறிக்கையும் ஒரு காரணம் என்கிறார்கள் `இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் செய்த தவற்றை பா.ஜ.க சாதகமாக்கிக்கொள்ள வேண்டும்.

ஆதரவு திரட்டும் வைகுண்டராஜன் முதல் இலங்கைத் தமிழருக்காக களமிறங்கும் பா.ஜ.க வரை... கழுகார் அப்டேட்ஸ்
Eranga Jayawardena

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு எந்த முயற்சியில் இறங்கினாலும், அது பா.ஜ.க-வின் செல்வாக்கை தமிழகத்தில் உயர்த்தும்’ என்று ரா-வின் ஒரு பிரிவான ஐ.பி-யிலிருந்து ஆலோசனை சொல்லப்பட்டதாம். இதைத் தொடர்ந்து, விரைவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் பாசிட்டிவ்வாக சில முடிவுகளை வெளியிட மத்திய அரசு தயாராகிறது என்கிறார்கள். அதற்கு முன்னோட்டம்தான் ஜெய்சங்கர் பயணம் என்கிறது டெல்லி வட்டாரம்.

நல்லது நடக்கட்டும்!

ரஜினி பெயரில் புதுக் கட்சி!
நாகர்கோவில் அட்ராசிட்டி...

ரஜினி வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஆனால், அவரின் வயதான ரசிகர்கள்தான் அடங்க மாட்டார்கள்போலிருக்கிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் `ரஜினி மக்கள் கட்சி’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பிவிருக்கிறாராம். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த அவர், ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்றதும், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

ஆதரவு திரட்டும் வைகுண்டராஜன் முதல் இலங்கைத் தமிழருக்காக களமிறங்கும் பா.ஜ.க வரை... கழுகார் அப்டேட்ஸ்

இப்போது, தான் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியில் தலைவர் பதவியை மட்டும் ரஜினிக்காக காலியாக வைக்கவிருக்கிறாராம். ரஜினி விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிவருவதால், பலரும் அவரை மேலும் கீழும் பார்க்கிறார்களாம்.

குட் நைட்!

``மத்தவங்க படத்தை எப்படிப் போடுவே?’’
மதுரையில் தாண்டவமாடிய மூர்த்தி!

மதுரை மாநகராட்சியின் 7-வது வார்டு தி.மு.க பூத் ஏஜென்ட்டாக இருப்பவர் எஸ்.டி.வாசிமலை. 20 ஆண்டுகளாக தி.மு.க உறுப்பினராக இருக்கும் வாசிமலை, தனது இல்லவிழா அழைப்பிதழை வழங்குவதற்காக தி.மு.க-வின் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியைச் சந்தித்திருக்கிறார். அழைப்பிதழில் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மணிமாறனின் மறைந்த தந்தை சேடப்பட்டி முத்தையா ஆகியோரின் படங்கள் இருப்பதைப் பார்த்து மூர்த்தி டென்ஷன் ஆகிவிட்டாராம்.

அமைச்சரைப் பகைத்துக்கொள்ளாத எடப்பாடி முதல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் மர்மம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

`மத்தவங்க படத்தைப் போட்ட பத்திரிக்கையை என்கிட்ட கொடுக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?’ என்று தாண்டவமாடிவிட்டாராம். வெளிறிப்போன வாசிமலை, மனக்குமுறலுடன் நடந்த சம்பவங்களைப் புகாராக அறிவாலயத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஏற்கெனவே, மதுரை கிழக்கு தொகுதிக்குள் மூர்த்திக்கு எதிர்ப்பலை இருப்பதாக ஐபேக் ரிப்போர்ட் அனுப்பியிருக்கும் நிலையில், இந்தப் புதிய புகாரால் கடுப்பிலிருக்கிறதாம் கட்சித் தலைமை.

வீடு தேடி வந்தவங்களை வீடுகட்டி அடிக்கலாமா மூர்த்தி அண்ணே!

மாநில மனித உரிமை ஆணைய நிதி...
விசாரணையில் இறங்கிய உயரதிகாரி

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 40 கோடி ரூபாய் நிர்வாகப் பணிக்காக ஒதுக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் ஆணையத்தின் உயர் பொறுப்புக்கு வந்த ஒருவர், கடந்த சில வருடங்களாக இந்த நிதி எங்கே சென்றது என்று தோண்ட ஆரம்பித்திருக்கிறாராம். விசாரணை அதிகாரிகளாகச் செல்லும் உதவி ஆய்வாளர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்பது விதி. ஆனால், எஸ்.பி ரேங்க்கில் இருப்பவர்களே ஸ்கூட்டரில் வந்து செல்லும் நிலைதான் ஆணையத்தில் இருக்கிறதாம். சரியான இன்டெர்நெட், கணினி வசதிகூட இல்லாமல் ஆணையத்தின் நிர்வாகம் தள்ளாடுவதைப் பார்த்த உயர் பொறுப்புக்கு வந்தவர், ஆணையத்துக்கு வந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மாயமானதைக் குறித்துத் தீவிரமாக விசாரிக்க ஆட்சி மேலிடத்துக்கு `நோட்’ போட்டிருக்கிறாராம்.

பார்த்துங்க, மனித உரிமை மீறல் கேஸ் போட்டுறப் போறாங்க ஆபீஸர்!

அ.தி.மு.க-வுக்கு ஆதரவு திரட்டும் வைகுண்டராஜன்!

தென் மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் மத்தியில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு திரட்டும் வேலையை வைகுண்டராஜன் சத்தமில்லாமல் செய்துவருகிறாராம்.

வைகுண்டராஜன்
வைகுண்டராஜன்

தட்சிணமாற நாடார் சங்கம், நெல்லை - தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் போன்ற பெரிய சங்கங்களை வைகுண்டராஜன் தரப்பு அணுகியிருக்கிறது. அவர்களோ, ``எடப்பாடி ஆட்சியில நாடார்களுக்கு அமைச்சரவையில் என்ன பிரதிநிதித்துவம் கொடுத்தாங்க... ஒரே ஒரு மந்திரியா மாஃபா பாண்டியராஜன் மட்டும் இருக்கிறார். அவரையும் ஓரங்கட்டித்தானே வெச்சிருக்காங்க...’ என்று சீறிவிட்டார்களாம். வேறு வழியில்லாமல், துண்டு துக்கடா அமைப்புகளை ஒன்று திரட்டும் வேலையை வைகுண்டராஜன் ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.

அண்ணாச்சி ஹேப்பி இல்லைன்னு சொல்லுங்க!

அடுத்த கட்டுரைக்கு