Published:Updated:

பதறும் அமைச்சர் பெரியகருப்பன் முதல் முதல்வரை மடைமாற்றிய முபாரக் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

“மெயில் செக் செய்யவும்” என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மெல்லிய ஒலியுடன் வந்து விழுந்தது. மெயில் இன்பாக்ஸை நிறைத்திருந்தன டிஜிட்டல் செய்திகள்

‘‘பதவியைக் காப்பாற்ற என்ன செய்வது?’’
பதற்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன்!

‘‘ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் இருப்பதால், இனி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்’’ - திருத்தணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசியது அந்தத் துறையின் அமைச்சர் பெரியகருப்பனை அப்செட் ஆக்கிவிட்டதாம். அதாவது, 'இத்தனை நாள்கள் துறை சிறப்பாக இல்லை, அமுதா வந்த பிறகே சிறப்பாகச் செயல்படும்' என்கிற தொனியில் முதல்வர் பேசியது அவரை வருத்தத்தில் தள்ளியிருக்கிறது. “என்னைவிட துறையின் செயலாளரை முதல்வர் அதிகம் நம்புகிறார். அப்படியென்றால், நான் சரியாகச் செயல்படவில்லை என்று நினைக்கிறாரா?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் பெரிய கருப்பன்.

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போதாக்குறைக்கு தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரும், ‘‘உங்களிடமுள்ள துறையைத்தான் உதயநிதிக்குக் கொடுக்க முதல்வர் முடிவெடுத்திருக்கிறார்’’ என்று தங்கள் பங்குக்குக் கொளுத்திப்போட, 'பதவியைக் காப்பாற்ற என்ன செய்வது' எனப் பதற்றத்தின் உச்சியில் இருக்கிறாராம் அமைச்சர்!

‘‘டீலா... நோ டீலா?’’
உயரதிகாரிக்காக நடத்தப்பட்ட மினி ஷோ!

சென்னையில் பணியாற்றும் சிவன் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், தன்னிடம் புகார் கொடுக்க வருபவர்களின் எதிர் பார்ட்டிகளிடம், ‘டீலா... நோ டீலா?’ என்றுதான் முதலில் கேட்பாராம். ‘டீல்’ என்றால் சட்டத்தின் ஓட்டைகளைச் சொல்லிக்கொடுத்து காப்பாற்றுவாராம். ‘நோ டீல்’ என்றால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பாராம். இன்ஸ்பெக்டருக்கு எதிர் டீம் ஒன்று, இப்படி டீல் பேசும் விவகாரத்தைச் சத்தமில்லாமல் வீடியோவாக எடுத்துவிட்டதாம். இந்த டீல் விவகார வீடியோவை அந்தச் சரகத்தின் காவல்துறை உயரதிகாரிக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் அந்த இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்ததும், மாடலிங் துறையைச் சேர்ந்தவர்களைவைத்து ‘மினி ஷோ’வையே அந்த அதிகாரிக்கு நடத்திக் காட்டி, தன்மீதான புகாரைக் கிடப்பில் போடவைத்துவிட்டாராம்!

‘‘எதுக்குக் கொடுத்தாங்க.... எதுக்கு எடுத்தாங்க?’’
தவிக்கும் தாரகை கத்பர்ட்

காங்கிரஸ் கட்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த மீனவ சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். எட்டு மாதங்கள் மட்டுமே மாவட்டத் தலைவர் பதவியிலிருந்த அவரால், புதிய வட்டாரத் தலைவர்களைக்கூட நியமிக்க முடியவில்லை.

பதறும் அமைச்சர் பெரியகருப்பன் முதல் முதல்வரை மடைமாற்றிய முபாரக் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

‘‘எதுக்குப் பதவி கொடுத்தாங்க... எதுக்காக எடுத்தாங்கன்னே தெரியலை. ஒரு பெண் அரசியல்வாதியா நான் வளர்ந்தது மாவட்டத்தைச் சேர்ந்த விஜயதரணிக்குப் பிடிக்கலை. அதனால, டெல்லியில லாபி செஞ்சு என்னை மாத்திட்டாங்க’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம் தாரகை கத்பர்ட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
முதல்வரை மடைமாற்றிய முபாரக்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விபத்து நடந்த அன்றைய தினம் இரவே குன்னூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் தங்குவதற்காக ஊட்டியிலிருக்கும் தமிழக அரசு விருந்தினர் மாளிகையை ஏற்பாடு செய்துவைத்தார் வனத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன். ஆனால், அவரின் எதிர்க்கோஷ்டியான மாவட்டச் செயலாளர் முபாரக், அமைச்சரை ஓவர்டேக் செய்து குன்னூரில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் முதல்வரைத் தங்கவைத்திருக்கிறார்.

பதறும் அமைச்சர் பெரியகருப்பன் முதல் முதல்வரை மடைமாற்றிய முபாரக் வரை! - கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

அமைச்சரையே ஓரங்கட்டி, முதல்வரை மடைமாற்றி அழைத்துச் சென்று முபாரக் செய்த அரசியல், நீலகிரி தி.மு.க-வில் அனல் பறக்கச் செய்திருக்கிறது. ‘‘வரும் உள்ளாட்சித் தேர்தலில் தன் மகன் வாசிமை குன்னூர் நகராட்சித் தலைவராக்குவதற்காகவே இப்படியெல்லாம் முபாராக் காய்நகர்த்துகிறார்'' என்கிறார்கள் மலை மாவட்ட உடன்பிறப்புகள்!

“மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?”
கரூர் கொந்தளிப்பு...

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வைத்ததுதான், கரூர் மாவட்டத்தில் சட்டமாக இருப்பதாக தி.மு.க-வினர் புலம்புகிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள்... ‘‘தன் ஆதரவாளரும், கட்சியின் கரூர் கிழக்கு நகரச் செயலாளருமான ‘கோல்டு ஸ்பாட்’ ராஜா என்பவருக்கு, கேபிள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்க செந்தில் பாலாஜி அனுமதி கொடுத்திருந்தார். கரூரில் ஒன்றரை லட்சம் கேபிள் கனெக்‌ஷன்கள் இருக்கின்றன. ஒரு கனெக்‌ஷனுக்கு இவ்வளவு என்று பேசி, கோல்டு ஸ்பாட் ராஜா ஜோராகச் சம்பாதித்துவந்தார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதில் வரும் வருமானத்தைக் கணக்கு போட்டு பார்த்திருக்கிறார். அதையடுத்து, ‘இனி, இதை நான் கவனிச்சுக்கிறேன்’ என்று கோல்டு ஸ்பாட் ராஜாவுக்கு கல்தா கொடுத்துவிட்டார்’’ என்கிறார்கள்.

‘மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...’ என்று கோல்டு ஸ்பாட் ராஜா கொதித்துப்போயிருக்கிறாராம்.

அடுத்தடுத்து அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்...
கனிமவளக் கொள்ளையர்கள் காரணமா?

நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களின் பினாமிகள் பெயரில் செயல்படும் இந்தக் குவாரிகளில், அளவுக்கு அதிகமாக வெட்டியெடுக்கப்படும் கற்கள், கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காகக் கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சப் கலெக்டராக இருந்த சிவ கிருஷ்ணமூர்த்தி குவாரிகளில் ரெய்டு நடத்தி, விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட மூன்று குவாரிகளுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

பதறும் அமைச்சர் பெரியகருப்பன் முதல் முதல்வரை மடைமாற்றிய முபாரக் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

அடுத்த சில நாள்களிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட, அதற்கு ஆளுங்கட்சிப் புள்ளிகளின் அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டது. இதேபோல கனிமங்களை ஏற்றிவரும் லாரிகளில் நடைச்சீட்டு மோசடி, அளவுக்கு அதிகமான பாரம் ஆகிய காரணங்களுக்காக லாரி உரிமையாளர்கள்மீது எஸ்.பி-யாக இருந்த மணிவண்ணனின் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த வாரம் அவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில்தான், புது எஸ்.பி-யாக வந்துள்ள சரவணன், பொறுப்பேற்ற கையோடு அதிக பாரம் ஏற்றிச் சென்ற ஆளுங்கட்சியினர் தொடர்புடைய ஆறு லாரிகளையும், அதிலிருந்த கற்களையும் பறிமுதல் செய்திருக்கிறார். 'எத்தனை பேரைத்தான் மாற்றுவது! என்று விழிபிதுங்கியிருக்கிறார்கள் ஆளுங்கட்சியின் அடாவடிப்ள்ளிகள்!

கோவையில் ரகசிய சர்வே...

கோவை தெற்குத் தொகுதியைக் கைப்பற்றிய நம்பிக்கையில், கோவை மாநகராட்சியில் தங்கள் பலத்தை அறிந்துகொள்ள பா.ஜ.க தரப்பு ரகசிய சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. அதில், ‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது’ என்று முடிவு வந்திருக்கிறதாம். ‘அமைச்சர் செந்தில் பாலாஜி வருகைக்குப் பிறகு, தி.மு.க-வின் பலம் கூடியிருக்கிறது’ என்றும் தகவல் கிடைத்திருக்கிறதாம்.

கோவை
கோவை

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், இங்கு மீண்டும் தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதை வேலுமணி அண்ட் கோ கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறதாம். அதனால், மாநகராட்சித் தேர்தலில் தாங்கள் கேட்கும் வார்டுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அப்செட்டில் இருக்கிறதாம் பா.ஜ.க வட்டாரம்.