Published:Updated:

``நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?''- கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?' என்று கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

``நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?''- கே.பாலகிருஷ்ணன்

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?' என்று கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Published:Updated:
கே.பாலகிருஷ்ணன்

மதுரையில் தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை மிதிக்கப்படுகிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

உள்நாட்டில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை எனப் பேசிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து கைதுசெய்யும் அவலம் தொடர்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவது பாராட்டுக்குரியது, இது போன்று குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நிரப்புவது வேதனை அளிக்கிறது. அதுபோல் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றவரிடம் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ``அ.தி.மு.க-வில் ஏற்பட்டுருக்கும் பிரச்னை பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஒற்றைத் தலைமை குறித்துச் சண்டைபோடும் அ.தி.மு.க-வினர் மோடி அரசின் கீழ் நடைபெறும் மக்கள் விரோத திட்டங்களை ஏன் எதிர்த்து பேசுவதில்லை... பா.ஜ.க-வின் மக்கள் விரோத திட்டங்களை வெண்சாமரம் வீசி வரவேற்கின்றனர்" என்றார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

"அண்ணாமலை பேசிவருகின்ற பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுச் சாதனை என்பது தமிழ்நாடு மக்களுக்கு வேதனைதான். ஆட்சியில் இருக்கப்போகும் இரு ஆண்டுகளில் இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகின்றனவோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு 25 சீட் கிடைக்கும் என்று அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை. பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்விதான் கிடைக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவிருக்கும் பா.ஜ.க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?" என்றார்.