Published:Updated:

`என்னைக் கடத்த முயன்றதன் மூலம் கெஜ்ரிவால் எவ்வளவு பயந்திருக்கிறார் என்பது தெரிகிறது!' -தஜிந்தர் பால்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது ( ட்விட்டர் )

`நான் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எஃப்.ஐ.ஆரில்கூட குறிப்பிடவில்லை. நான் யாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டவில்லை. இது ஒரு பேச்சு வழக்குதானே தவிர வேறில்லை.' - தஜிந்தர் பால் சிங் பக்கா

`என்னைக் கடத்த முயன்றதன் மூலம் கெஜ்ரிவால் எவ்வளவு பயந்திருக்கிறார் என்பது தெரிகிறது!' -தஜிந்தர் பால்

`நான் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எஃப்.ஐ.ஆரில்கூட குறிப்பிடவில்லை. நான் யாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டவில்லை. இது ஒரு பேச்சு வழக்குதானே தவிர வேறில்லை.' - தஜிந்தர் பால் சிங் பக்கா

Published:Updated:
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ( ட்விட்டர் )

பாரதிய ஜனதா கட்சியின், யுவ மோர்ச்சா அமைப்பின் தேசியச் செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா, வதந்திகளைப் பரப்பி மத மற்றும் வகுப்புவாதப் பகையை உருவாக்க முயன்றதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் அளித்த புகாரின் அடிப்படையில், பஞ்சாப் காவல்துறையால் கடந்த மே 6-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் 30-ம் தேதி நடந்த போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தஜிந்தர் பால் சிங் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

தஜிந்தர் பால் சிங்
தஜிந்தர் பால் சிங்

இந்த நிலையில், விடுதலையாகி வெளியே வந்த தஜிந்தர் பால் சிங் பக்கா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்னைக் கைதுசெய்யக் காண்பித்த அடாவடித்தனத்தால் அவர் என்னைக் கடத்தினார் என்றுதான் சொல்ல முடியும். இதன் மூலம் அவர் எவ்வளவு பயந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவருக்கு எதிராக யார் பேசினாலும், அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. அவர் எவ்வளவு பயப்படுகிறார் என்பதை இது காட்டுகிறது. என்மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு இருந்தால், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டிருக்க வேண்டுமே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
ட்விட்டர்

நான் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக எஃப்.ஐ.ஆரில்கூட குறிப்பிடவில்லை. நான் யாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டவில்லை. இது ஒரு பேச்சு வழக்குதானே தவிர வேறில்லை. எனக்கு எதிராக ஆயிரம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தாலும், குரு கிரந்த சாகிப்பை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எனது போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism