Published:Updated:

“130 அடியாகக் குறைக்க வேண்டும்!” - முல்லைப்பெரியாறு... தொல்லை கொடுக்கும் கேரளா

முல்லைப்பெரியாறு
பிரீமியம் ஸ்டோரி
முல்லைப்பெரியாறு

‘‘மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த முல்லைப்பெரியாறு பாசனப் பரப்பில், இப்போது ஒரு போகம் எடுப்பதே பெரிய விஷயம்.

“130 அடியாகக் குறைக்க வேண்டும்!” - முல்லைப்பெரியாறு... தொல்லை கொடுக்கும் கேரளா

‘‘மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த முல்லைப்பெரியாறு பாசனப் பரப்பில், இப்போது ஒரு போகம் எடுப்பதே பெரிய விஷயம்.

Published:Updated:
முல்லைப்பெரியாறு
பிரீமியம் ஸ்டோரி
முல்லைப்பெரியாறு
‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க வேண்டும்’ என்று கேரள வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விவகாரம், தென் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குக் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஆதாரமாக இருக்கிறது முல்லைப்பெரியாறு அணை. ‘இந்த அணை பலமிழந்துள்ளது. இது உடைந்தால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து’ என்று கடந்த காலங்களில் கேரள அரசு செய்த அரசியலால், தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கிவைத்துக்கொள்ளலாம்’ என்று கடந்த 2014-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 155 அடி உயரமுள்ள இந்த அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும்.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை, இடுக்கி மாவட்டத்தை வெள்ளக்காடாக்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டது. இடுக்கி அணையும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதைத் தொடர்ந்து ‘முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோவார்கள்’ என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் கேரள வழக்கறிஞர் ரசல் ஜோய். இதில், ‘அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139.9 அடியாகக் குறைக்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

பிறகு, போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர்மட்டம் 139 அடியைத் தாண்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, தென்மேற்குப் பருவமழையால் அணையின் நீர்மட்டம் 139 அடியைத் தொடவுள்ளது. இந்த நிலையில்தான், ‘அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் ரசல் ஜோய். ‘இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.

வழக்கு தொடர்ந்த ரசல் ஜோயிடம் பேசியபோது, ‘‘2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை முல்லைப்பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள்கொண்ட 62 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அணைக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும், ‘அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டுமே நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க வேண்டும்’ என மனுத்தாக்கல் செய்திருக்கிறேன்’’ என்றார்.

ரசல் ஜோய்  - திருப்பதி வாசகன்  - அன்வர் பாலசிங்கம்
ரசல் ஜோய் - திருப்பதி வாசகன் - அன்வர் பாலசிங்கம்

‘‘மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த முல்லைப்பெரியாறு பாசனப் பரப்பில், இப்போது ஒரு போகம் எடுப்பதே பெரிய விஷயம். தென்மேற்குப் பருவமழைதான் அந்த ஒரு போகத்துக்கும் கைகொடுக்கும். அந்தக் காலகட்டத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தால், அந்த ஒரு போகத்துக்கும் வழியில்லாமல் போய்விடும்’’ என்று வருத்தப்படுகிறார், ‘18-ம் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க’ நிர்வாகி திருப்பதி வாசகன்,

தொடர்ந்து... ‘‘இப்போது மனுத்தாக்கல் செய்துள்ளதன் பின்னணியில் பெரும் வணிக நோக்கம் இருக்கிறது. அணையில் 142 அடி தண்ணீர் தேக்கினால், நீர்பிடிப்புப் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதிகள் மூழ்கிவிடும். கேரள முதலாளிகளின் வருமானம் தடைப்படக் கூடாது என்பதற்காகவே இப்படியொரு நாடகம் ஆடுகின்றனர். இதற்குக் கேரள அரசும் உடந்தை. ‘அணை பலமாக உள்ளது. அதன் ஆயுள் காலம் மிக நீண்டது. அச்சப்படத் தேவையில்லை’ என்று 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இப்போதைய மனுவுக்கு தமிழக அரசு தக்க பதிலளித்து, அணையின் நீர்மட்டத்தை 139 அடிக்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார் அழுத்தமாக.

“130 அடியாகக் குறைக்க வேண்டும்!” - முல்லைப்பெரியாறு... தொல்லை கொடுக்கும் கேரளா

ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ‘‘அணையின் பலம் குறித்து 18 முறை நிபுணர்குழு ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தியுள்ளது. இயற்கையை அழித்து எஸ்டேட்டுகள், பங்களாக்கள், ஹோட்டல்களைக் கட்டியதாலேயே நிலநடுக்கம் வருகிறது. மூணாறு முதல் அடிமாலி வரை 18 கிலோமீட்டர் சாலையில் பல மாடிகள்கொண்ட 62 கட்டடங்கள் உள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மண், தனது உறுதித்தன்மையை இழந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன் விளைவுதான் சமீபத்தில் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு. இவற்றைச் சரிசெய்யாமல் எதற்கெடுத்தாலும் முல்லைப்பெரியாறு அணையை வம்புக்கு இழுத்து அரசியல் செய்வதே கேரளாவுக்கு வழக்கமாக இருக்கிறது’’ என்றார் கோபமாக.

முல்லைப்பெரியாறு அணையை நிர்வகிக்கும் பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘தமிழக அரசு, பதில் மனு தாக்கல் செய்துவிட்டது. சட்டப்படி அனைத்தும் நடக்கும். விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. நீர்வரத்து சீராக உள்ளது. நீர்மட்டமும் உயரும்’’ என்றார்.

நியாயமான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது தமிழகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism