Published:Updated:

``இலையைக் காட்டினால் பின்னால் போகும் ஆடுகள்!" - காங்கிரஸ் தலைவர்கள் குறித்து பினராயி விஜயன் காட்டம்!

சிந்து ஆர்

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் நடந்த பிஎஸ்ஸி (பொது தேர்வு ஆணைய) தொழிற்சங்க மாநில மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசுகையில், "மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருப்பதால் சங் பரிவார் அமைப்புகள் ஆட்டம்போடுகின்றன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இடதுசாரி அமைப்பு எப்போதும் இதை எதிர்த்து வருகிறது. இதையெல்லாம் எதிர்க்கும் காங்கிரஸின் நிலை இன்று மிக மோசமாக உள்ளது. நாறுபவனை சுமந்தால் சுமப்பவனும் நாறுவான் என்ற நிலைதான் கர்நாடக மாநிலத்தில் நடக்கிறது. காங்கிரஸை நம்பக்கூடாது என்று நாங்கள் அன்றே சொன்னோம். அதை விளக்கும் விதமாக இப்போதைய சம்பவங்கள் நடக்கின்றன.

காங்கிரஸ்காரர்கள் எப்போது கட்சி மாறி போவார்கள் என்று கூறமுடியாது. பி.ஜே.பி. வாரி இறைக்கும் பணத்திற்கு கையும் கணக்கும் இல்லை. பலா மர இலையைக் காண்பித்தால் நீட்டிக்கொண்டுபோகும் ஆட்டுக் குட்டிகளைப் போன்ற சில 'டேஷ்' ஆட்கள்தான் காங்கிரஸ் தலைவர்கள்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வேறு நல்ல வார்த்தை இருந்தாலும் அந்த இடத்தில் `டேஷ்' என இட்டால் போதும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி இப்படி இருக்கலாமா. வெற்றி கிடைக்கும்போது மட்டுமல்ல, தோல்விகள் ஏற்படும்போதும் அதை எதிர்கொள்ள வேண்டும்" என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து விமர்சித்திருப்பது கேரள அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.