Published:Updated:

``சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்குத் தகுதியானவர்தான்!" - கேரள மாநில தலைவர் சர்டிஃபிகேட்

சசிதரூர்

``சசி தரூர் தலைவராகப் போட்டியிடத் தகுதியானவர்தான். சசிதரூர் போட்டியிட விரும்பினால் அதைக் குறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை." - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

``சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்குத் தகுதியானவர்தான்!" - கேரள மாநில தலைவர் சர்டிஃபிகேட்

``சசி தரூர் தலைவராகப் போட்டியிடத் தகுதியானவர்தான். சசிதரூர் போட்டியிட விரும்பினால் அதைக் குறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை." - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

Published:Updated:
சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறும் என சோனியா காந்தி அறிவித்திருந்தார். தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டால் வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் ராகுல் காந்தி போட்டியிட மறுத்தால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சசி தரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் போட்டியிடுவதாக வந்த செய்தி பற்றி ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள்... சசி தரூர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளர்தான்.

கே.சுதாகரன்
கே.சுதாகரன்

இந்திய தேசிய காங்கிரஸ் என்ற ஜனநாயகக் கட்சிக்குள் போட்டியிட எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை எனக்கும் உண்டு, சசி தரூருக்கும் உண்டு. போட்டியிடுபவர்களைக் கட்சி ஏற்றுக்கொள்ளும். ஓட்டுக் கிடைத்தால் வெற்றிபெறுவார்கள். எனவே, சசி தரூர் தலைவராகப் போட்டியிடத் தகுதியானவர்தான். சசி தரூர் போட்டியிட விரும்பினால் அதைக் குறைசொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயக முறைப்படி நாங்கள் அதற்குத் தீர்வு காண்போம்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சசி தரூர்
சசி தரூர்

இந்த நிலையில், சசி தரூர் தனது முகநூல் பக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டு, தான் காங்கிரஸ் தலைவராக வர விரும்பவில்லை எனச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். சசி தரூர் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி இதுதான், ``எனக்கு சமூக சீர்திருத்தத்தில் மட்டும் நம்பிக்கை இல்லை. சமூக வளர்ச்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பாதையில்தான் நீங்கள் செல்ல வேண்டும்' என்று எந்த வகையிலும் என் சமுதாயத்துக்கு ஆணையிடும் துணிச்சல் என்னிடம் இல்லை. ராமரின் பாலம் கட்டுவதில் பங்களித்த அணில்போல் இருக்க நான் விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.