Published:Updated:

`சத்தியமூர்த்தியை விசாரித்தீர்களா?' - கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அடுத்தது என்ன?

கொடநாடு
கொடநாடு

அப்போது தமிழக போலீஸின் உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்தவர் சத்தியமூர்த்தி.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. குற்றச் சம்பவத்தை புதிய கோணத்தில் விசாரித்துவரும் போலீஸ் தனிப்படைக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவம் நடந்த 2017 காலகட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்தவர் பாரி. அதேநேரத்தில், அப்போது தமிழக போலீஸின் உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்தவர் சத்தியமூர்த்தி. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் இவர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் .

கொடநாடு எஸ்டேட் பங்களா
கொடநாடு எஸ்டேட் பங்களா
`கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் க்ளைமாக்ஸில் ஆங்காங்கே வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக போலீஸ் வாகனங்களில் வைத்தே பணம் கடத்தப்பட்டதாக எதிர்கட்சியினர் மத்திய தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தனர். இந்த விஷயத்திலும் சத்தியமூர்த்தி பெயர் அடிபட்டது. தற்போது நடந்துவரும் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் விடுபட்ட பல சாட்சிகளையும் விசாரித்துவருகிறார்கள். ``எங்களிடம் துருவித் துருவி விசாரிக்கிறீர்களே... ஐ.ஜி-கள் பாரி, சத்தியமூர்த்தியை விசாரித்தீர்களா... அவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியுமா?’’ என்று காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் பலரும் கைகாட்டியிருக்கிறார்கள். கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்பு, பின்பு என்று இரண்டு கட்டங்களாக விசாரித்துவரும் போலீஸார் விரைவில் இந்த இருவரையும் சட்டப்படி அழைத்து விசாரிப்பார்கள் என்கிறது மேற்கு மண்டல போலீஸ் வட்டாரம்.

அடுத்த கட்டுரைக்கு