Published:Updated:

`நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயர்!' - முதல்வருக்குக் கோரிக்கை!

டி.எம்.காளியண்ணன்
டி.எம்.காளியண்ணன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும், மேலவை துணைத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். கஸ்தூரிப்பட்டி ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த இவர், இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே பி.காம்., எம்.ஏ பொருளாதாரம் படித்தவர். தன்னுடைய 28-வது வயதில் 1948-ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்குச் சென்ற இளம் உறுப்பினர். எம்.எல்.ஏ., எம்.பி., எம்.எல்.சி-ஆக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும், மேலவை துணைத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேலம் பகுதியில் பெரிய பதவியான ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தவர். இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் திறந்தவர். கடந்த மே மாதம் தன்னுடைய 101-வது வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

நாமக்கல் மருத்துவக் கல்லூரி
நாமக்கல் மருத்துவக் கல்லூரி

அவருக்கு மரியாதை செய்யும்பொருட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு டி.எம்.காளியண்ணன் அவர்களுடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. அந்தவகையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி, ``மறைந்த திரு. டி.எம்.காளியண்ணன் அவர்கள் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையிலான இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாட்டில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், சேலம் ஜில்லா போர்டு தலைவர் (1954-57), இந்தியன் வங்கி இயக்குநர், திருச்சி பெல் நிறுவனத்தின் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் போன்ற பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். மேலும், மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் இணைந்து மக்கள் பணியாற்றியவர்.

`எஸ்.பி வேலுமணியின் ஒரு லட்சம் கோடி ஊழல்?' - கொதிக்கும் கார்த்திகேய சிவசேனாபதி
முதல்வரிடம் மனு அளித்தபோது
முதல்வரிடம் மனு அளித்தபோது

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 1954-ல் ஒரு நபர் ஆசிரியர் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தவர். கொங்கு மண்டலத்தில் பல நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, சேஷசாயி பேப்பர் மில்ஸ், சங்ககிரி இந்தியா சிமென்ட்ஸ் ஆகியவற்றை நிறுவ காரணமாக இருந்து இந்தப் பகுதியின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். ஜமீன் ஒழிப்பை ஆதரித்து ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கி தன்னலமில்லா வாழ்வு வாழ்ந்தவர். தனது 101-வது வயதில் 28.05.2021 அன்று காலமானார். தேசத்துக்கான அவரது தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக நாமக்கல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைக்கு ஐயா திரு. டி.எம்.காளியண்ணன் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் முன்வைத்துளோம்” எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு