Published:Updated:

‘‘ஆம், மக்களைத் தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலை!’’

ஒன்றுகூடிய எம்.பி-க்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

உயர் மின்கோபுர விவகாரம்... ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

‘‘ஆம், மக்களைத் தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலை!’’

உயர் மின்கோபுர விவகாரம்... ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

Published:Updated:
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில், ‘`எங்கள் கோரிக்கையையும் பரிசீலனை செய்யுங்கள்’’ என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள், உயர்மின் கோபுரங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கொங்கு மண்டல விவசாயிகள்.

ஈரோடு எம்.பி-யான கணேசமூர்த்தி, ராட்சச மின் கோபுரங்களுக்குக் கீழே டியூப்லைட்டுகளைப் பிடித்து இணைப்பே இல்லாமல் அதை எரிய வைத்துக்காட்டி, மின்காந்த அலை ஏற்படுவதை ஏற்கெனவே நிரூபித்துக்காட்டினார். அத்துடன், மின் அலைவீச்சு பாய்வதும் சோதனை இயந்திரம் மூலம் நிரூபித்துக்காட்டப்பட்டது. மனிதர்கள் மற்றும் கால்நடைகள்மீது நேரடியாக மின்சாரம் பாய்ந்து பாதிப்பு ஏற்படாவிட்டாலும் மின் அலைகளால் பல்வேறு தீங்குகள் ஏற்படும் என்பதால், உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழகத்தின் 13 மாவட்டங்களில், கிட்டத்தட்ட 28,000 ஏக்கர் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுவரும் உயர்மின் கோபுரங்களால் 50,000 விவசாயிகள் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஒன்றுகூடிய எம்.பி-க்கள்
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

சமீபத்தில், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த எம்.பி-க்களான கோவை பி.ஆர்.நடராஜன், ஈரோடு கணேசமூர்த்தி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம், திருப்பூர் சுப்பராயன், கரூர் ஜோதிமணி ஆகியோர் பல்லடம் அருகில் உள்ள அனுப்பட்டியில் ஓர் உயர்மின் கோபுரத்தின் கீழ் உள்ள விளைநிலத்தில் டியூப்லைட்களை எரிய வைத்து மின்காந்த அலைவீச்சை ஆய்வுசெய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டத்தில் பேசிய கரூர் எம்.பி-யான ஜோதிமணி, ‘‘கொங்கு மண்டல விவசாயி என்று முதல்வரும், நாமக்கல் விவசாயி என்று மின்சாரத் துறை அமைச்சரும் பச்சைத்துண்டு அணிந்து போஸ்டர் அடித்துக்கொள்கின்றனர். ஆனால், விவசாயிகளின் குரலை காதுகொடுத்துக் கேட்பதில்லை. போராடும் விவசாயிகளையும் ஒடுக்கிவருகின்றனர். நிலம்தான் விவசாயிக்கு இருக்கும் ஒரே அடையாளம். அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது’’ என்றார் காட்டமாக.

பொள்ளாச்சி எம்.பி-யான சண்முகசுந்தரம், ‘‘சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளாகியும் விவசாயி களின் பிரச்னைகள் முடிந்தபாடில்லை. மின்பாதை அமைப்பதை எவரும் எதிர்க்கவில்லை. அதை, உயர்மின் கோபுரம் வழியே அல்லாமல் சாலைவழியாக எடுத்துச் செல்லுங்கள் என்றுதான் சொல்கின்றனர். இந்த மின்வழித்தடம் கார்ப்பரேட்களின் நலனுக்காக ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. எங்கோ இருக்கும் கார்ப்பரேட்கள் பலனடைய, எங்கள் மக்கள் சாக வேண்டுமா?’’ என்றார்.

ஒன்றுகூடிய எம்.பி-க்கள்
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

திருப்பூர் எம்.பி-யான சுப்பராயன், ‘‘உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மூன்றும் இணைந்து விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைத் தீட்டிவருகின்றன. அதனால்தான், இந்தியா கலவர பூமியாகிவிட்டது. செய்யக் கூடாத தொழிலாக விவசாயம் உருக்குலைக்கப் பட்டுள்ளது. `அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்’ என்று எங்கள்மீது புகார் சொல்வார்கள். ஆம், மக்களைத் தூண்டிவிடுவது தான் எங்கள் வேலை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக இருப்பவர்களை எதிர்க்க, மக்களைத் தூண்டித்தான் விடுகிறோம்’’ என்றார்.

நாமக்கல் எம்.பி-யான சின்ராஜ், ‘‘உள்ளாட்சித் தேர்தலில், கொங்கு மண்டலத்தைத் தவிர மற்ற இடங்களில் அ.தி.மு.க தோற்றுவிட்டது. அதனால், அரசியல் காரணங்களுக்காக டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டனர். அ.தி.மு.க-வுக்கு வாக்களிப் பதாலோ என்னவோ, அதற்கான பலனையும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நமது எதிர்ப்பை வலுவாகக் காட்டுவதன்மூலம் மட்டும்தான் தீர்வு காண முடியும்’’ என்றார்.

ஈரோடு எம்.பி-யான கணேசமூர்த்தி, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கேபிள் வழியாகத்தான் மின்சாரம் எடுத்துச் செல்கிறார்கள். ‘கேபிள் சாத்தியமா?’ என்று பவர்கிரிட் நிறுவனத்திடம் கேட்டபோது, ‘சாத்தியம் தான். ஆனால், செலவு அதிகமாகும்’ என்று கூறினர். நம் தோழர்கள் செய்த ஆய்வில், உயர்மின் கோபுரம் மூலம் கொண்டுசெல்லும்போது ஏற்படும் மின் இழப்பு, கேபிள் மூலம் கொண்டுசெல்லும்போது இருக்காது’ எனத் தெரியவந்துள்ளது’’ என்றார்.

ஒன்றுகூடிய எம்.பி-க்கள்
ஒன்றுகூடிய எம்.பி-க்கள்

நிறைவாகப் பேசிய கோவை எம்.பி-யான பி.ஆர்.நடராஜன், ‘‘உயர்மின் கோபுரத்தின் பாதிப்பை இன்று நேரடியாக ஆய்வு செய்துள் ளோம். பவர்கிரிட் நிறுவனம், விவசாயிகளை அச்சுறுத்தி உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்க்கிறோம். இது விவசாயிகளுக்கு மட்டுமான பிரச்னையல்ல. இந்த மின்காந்த அலைகளால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும். வளர்ச்சி என்பது, மக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கக் கூடாது. கார்ப்பரேட்டுகள் மட்டும் பலனடைவது வளர்ச்சி அல்ல. விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை, இனியாவது அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.