Published:Updated:

``எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டதற்கு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்!" - கோவை செல்வராஜ்

திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ்
News
திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ் ( ட்விட்டர் )

``எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சுனாமி போல் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகள் தாக்கியது." - கோவை செல்வராஜ்

``எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டதற்கு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்!" - கோவை செல்வராஜ்

``எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சுனாமி போல் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகள் தாக்கியது." - கோவை செல்வராஜ்

Published:Updated:
திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ்
News
திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ் ( ட்விட்டர் )

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்த வண்ணமிருக்கிறது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க ஒ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். மேலும், ``அ.தி.மு.க-வில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதே சமயம் திராவிட பாரம்பர்யத்தை விட்டு விலகமாட்டேன். நல்ல முடிவு விரைவில் எடுப்பேன். ஒருநாளும் அரசியலிலிருந்து விலகமாட்டேன்" என்று கூறியிருந்தார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்
ட்விட்டர்

இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் தி.மு.க-வில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "1971-ல் தி.மு.க-வுக்காக கையில் கொடியேந்தி 14 வயதில் ஓட்டுக் கேட்ட நான், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, சுனாமி போல் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகள் தாக்கியது. அதன் பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒன்றரை வருடமாக சீர் செய்துவருகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டதற்கு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.

திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ்
திமுக-வில் இணைந்த கோவை செல்வராஜ்
ட்விட்டர்

காலில் விழுந்து கொல்லைப் புறமாக ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அ.தி.மு.க எனும் கட்சி இப்போது கம்பெனியாகிவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் மதவாத இயக்கத்திற்கு ஒரு போதும் துணைப் போக மாட்டார்கள். மதவாத, சாதிவாத சக்திகளை வேறோடு அகற்ற வேண்டும். தி.மு.க மக்களாட்சியாக செயல்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். எனவே, விரைவில் என்னுடைய ஆதரவாளர்கள், கோவையை சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் என 5 ஆயிரம் பேரை தி.மு.க-வில் இணைப்பேன்" எனத் தெரிவித்தார்.