Published:Updated:

`பன்னீரை மிரட்டினார் கோவை செல்வராஜ்’ - குற்றம்சாட்டும் ஓ.பி.எஸ் தரப்பு | விலகலின் பின்னணி என்ன?!

கோவை செல்வராஜ்

``தலைமை நிலையச் செயலாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வேண்டும் என ஒருங்கிணைப்பாளரையே மிரட்டினார்."

`பன்னீரை மிரட்டினார் கோவை செல்வராஜ்’ - குற்றம்சாட்டும் ஓ.பி.எஸ் தரப்பு | விலகலின் பின்னணி என்ன?!

``தலைமை நிலையச் செயலாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வேண்டும் என ஒருங்கிணைப்பாளரையே மிரட்டினார்."

Published:Updated:
கோவை செல்வராஜ்

அ.தி.மு.க-வின் இடைக்காலப்  பொதுச்செயலாளராகத்  தன்னை அறிவித்து செயல்பட்டுவரும் எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஜி20 கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வரவே, அனைவரின் எதிர்பார்ப்பும் எடப்பாடி பக்கம் திரும்பியிருக்கிறது. இந்த அழைப்பின் மூலம் டெல்லியின் ஆதரவும் முக்கியத்துவமும் எடப்பாடி பக்கம் திரும்பியிருப்பதற்கு ஓர் உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், அ.தி.மு.க-வில் மற்றோர் அணியாகச் செயல்பட்டுவரும் பன்னீர்செல்வம், நாள்தோறும் புதிய நிர்வாகிகளை நியமித்து விரைவில் பொதுக்குழு கூட்டவும் தயாராகிவருகிறார். பல நிர்வாகிகள் அ.தி.மு.க-விலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்துவரும் வேளையில், சமீபத்தில் பன்னீர் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எடப்பாடி, பன்னீர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

கடந்த சனிக்கிழமை கோவை செல்வராஜ் ஒரு ஆடியோவை  வெளியிட்டு, அ.தி.மு.க-விலிருந்து வெளியேறுவதாகத்  தெரிவித்தார். அந்த ஆடியோவில்,  "எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரது செயல்பாடுகளைப்  பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்துக்காகச் சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது என முடிவெடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பர்யத்தைவிட்டு விலக மாட்டேன்.

திராவிடப் பாரம்பர்யம் எனது உடலில் ஓடுகிற ரத்தம். ஒருநாளும் அரசியலைவிட்டு விலக மாட்டேன். துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுக-விலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன். ஜெயலலிதாவைவிட, பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால் முடியவில்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல லட்சக்கணக்கான தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜின் ஆடியோ அ.தி.மு.க-வில் பட்டாசாக வெடிக்கவே அன்றைய தினமே அவரைக் கட்சியிலிருந்து  நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார். அவர் வகித்துவந்த கோவை மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து கோவை மாவட்டத்தை  நான்காகப் பிரித்து, நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து பன்னீர் உத்தரவிட்டார். 

கோவை செல்வராஜின் ஆடியோ மற்றும் திடீர் விலகலுக்குப்  பின்னால் என்ன நடந்தது என்பது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசினோம். "அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் பதவி கேட்டு, கடந்த ஒரு மாதமாக  கோவை செல்வராஜ் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். 40, 50 ஆண்டுக்காலம் உழைத்தவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். ஆனால், தலைமை நிலையச் செயலாளர் அல்லது துணை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வேண்டும் என ஒருங்கிணைப்பாளரையே மிரட்டினார்.

நாஞ்சில் கோலப்பன்
நாஞ்சில் கோலப்பன்

இதற்கு அவர் தகுதியானவர் கிடையாது. இதை அவரிடம் தெளிவுபடுத்தித்தான் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். ஓ.பி.எஸ்-ஸை துரோகி என்று சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர் பாரம்பயம் காங்கிரஸ் சேர்ந்தது. அவர் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வர முடியாது" என்றார். 

பன்னீர், எடப்பாடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கும் கோவை செல்வராஜ் கூடிய விரைவில் தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.